பிழை திருத்துக. (எ.கா.) ஒரு - ஓர் |
---|
திடம் அறிந்து பயன்படுத்துவோம்
• ஒன்று என்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன. • உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். • உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். (எ.கா.) ஓர் ஊர், ஓர் ஏரி ஒரு நகரம், ஒரு கடல் • இவை போலவே, உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். • உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். (எ.கா.) அஃது இங்கே உள்ளது அது நன்றாக உள்ளது கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக 1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது. விடை : ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது. 2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள். விடை : ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள். 3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது. விடை : அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது. 4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை. விடை : அது நகரத்திற்குச் செல்லும் சாலை. 5. அது ஒரு இனிய பாடல். விடை : அஃது ஓர் இனிய பாடல். |
அகரவரிசைப்படுத்துக |
---|
பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பொதுக்கூட்டம், பையன், போக்குவரத்து, பின்னிரவு
விடை : பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன், பொதுக்கூட்டம், போக்குவரத்து |
இரண்டு சொற்கனை இணைத்துப் புதிய சொற்கனை உருவாக்கு |
---|
இரண்டு சொற்கனை இணைத்துப் புதிய சொற்கனை உருவாக்கு.
(எ.கா) எனக்கு எனக்குண்டு எனக்கில்லை விடை : |
கலைச்சொல் அறிவோம் |
---|
1. நாட்டுப்பற்ற – Patriotism
2. இலக்கியம் – Literature 3. கலைக்கூடம் – Art Gallery 4. மெய்யுணர்வு – Knowledge of Reality Patriotism |
பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல் |
---|
1) நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நூல்+ஆடை ஆ) நூலா+டை இ) நூல் + லாடை ஈ) நூலா + ஆட [விடை : அ) நூல்+ஆடை] 2) எதிர்+ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) எதிரலிக்க ஆ) எதிர்ஒலிக்க இ) எதிரொலிக்க ஈ) எதிர்ரொலிக்க [விடை : இ) எதிரொலிக்க] பொருத்துக 1. இலக்கிய மாநாடு – பாரதியார் 2. தமிழ்நாட்டுக் கவிஞர் – சென்னை 3. குற்றாலம் – ஜி.யு.போப் 4. தமிழ்க் கையேடு – அருவிபாரதியார் விடை 1. இலக்கிய மாநாடு – சென்னை 2. தமிழ்நாட்டுக் கவிஞர் – பாரதியார் 3. குற்றாலம் – அருவி 4. தமிழ்க் கையேடு – ஜி.யு.போப் |
சொல்லும் பொருளும் |
---|
• மெய் - உண்மை
• தேசம் - நாடு |
வேலுநாச்சியார் |
---|
1. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள்? வேலுநாச்சியார் 2.
வேலுநாச்சியார் கற்றிந்த மொழிகள் எவை? தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது 3.
சிவகங்கையின் மன்னர்? முத்துவடுகநாதர் 4.
வேலுநாச்சியார் யாரை மணந்து கொண்டார்? சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் 5.
எங்கு நடைபெற்ற பெயரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்?
காளையார் கோவில் 6.
வேலுநாச்சியார் எந்த கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்? திண்டுக்கல் 7.
வேலுநாச்சியாரின் அமைச்சர் யார்? தாண்டவராயர் 8.
வேலுநாச்சியாரின் தளபதிகள் யார்? பெரிய மருது, சின்ன மருது 9.
சிவகங்கையை இழந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது என்று வேலுநாச்சியார் கவலை கொண்டார்?
எட்டு ஆண்டுகள் 10.
ஐதர்அலியுடன் வேலுநாச்சியார் எந்த மொழியில் பேசினார்? உருது மொழி 11.
ஐதர்அலியின் எத்தனை குதிரைப் படை வீரர்கள் வேலுநாச்சியாருக்கு உதவ மைசூரிலிருந்து உதவ
வந்தனர்? 5000 குதிரைப் படை வீரர்கள் 12.
ஆண்கள் படைப்பிரிவுக்கு தலைமை வகித்தவர் யார்? மருது சகோதரர்கள் 13.
பெண்கள் படைப்பிரிவுக்குக் தலைமை வகித்தவர் யார்? குயிலி 14.
எந்த நாள் சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் திறக்கும் என்று வேலுநாச்சியார் கூறினார்? விஜயதசமித்
திருநாள் 15.
வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்குமாறு யாரை ஆங்கிலேயர்கள் வற்புறுத்திக் கொன்றனர்?
உடையாள் என்னும் பெண்ணை 16.
உடையாளுடைய நடுகல்லுக்கு வேலுநாச்சியார் எதை காணிக்கையாக செலுத்தினார்? தமது தாலியை 17.
யார் ஆயுதக் கிடங்கில் உடலில் தீ வைத்துக் கொண்டு குதித்தவர் யார்? குயிலி 18.
வேலுநாச்சியாரின் காலம்? 1730 - 1796 19.
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு? 1780 20.
ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்? வேலு நாச்சியார் 21.
'என் கணவர் கொல்லப்பட்ட ஊர் காளையார்கோவில், எனவே, தாம் முதலில் காளையார்கோவிலைக் கைப்பற்றுவோம்:
பிறகு சிவகங்கையை மீட்போம்" என்றார்? வேலு நாச்சியார் 22.
"குயிலி தம் உயிரைத் தந்து நம்நாட்டை மீட்டுக் கொடுத்திருக்கிறார். அவரது துணிவுக்கும்
தியாகத்திற்கும் வீரத்திற்கும் தலைவணங்குகிறேன்" என்று உணர்ச்சிப் பெருக்கோடு
கூறினார்? வேலுநாச்சியார் 23.
விடுதலைப்போரில் ஆண்களுக்கு நிகராகச் செயல்பட்டு வெற்றி வாகை சூடிய பெண்? வேலுநாச்சியார் 24.
வேலுநாச்சியார் ________ ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார்? சிலம்பம், குதிரையேற்றம்,
வாட்போர், விற்பயிற்சி 25.
வேலுநாச்சியாரின் வீரம், மருது சகோதரர்களின் ஆற்றல், ஐதர்அலியின் உதவி ஆகியவற்றோடு
குயிலியின் தியாகமும் இணைந்ததால் சிவகங்கை மீட்கப்பட்டது 26.
சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் எந்த திருநாளில் திறக்கப்படும்? விசயதசமி 1. ஆங்கிலேயரை எதிர்த்துப்
போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது? (2022 Group 4) A) கி.பி.1730. B) கி.பி.1880 C) கி.பி.1865 D) கி.பி.1800
2. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயும்
ஏந்திப் போராடிய முதல் பெண்மணி (2022 Group 8) (அ) ராணி மங்கம்மாள் (ஆ) அஞ்சலை அம்மாள் (இ) வேலு நாச்சியார் (ஈ) மூவலூர் இராமாமிர்தம்
3. வேலுநாச்சியாரின் அமைச்சர்
__________. (2022 TNTET Paper -1) (A) குயிலி (B) பெரிய மருது (C) முத்துவடுகநாதன் (D) தாண்டவராயர்
4. ஜான்சிராணிக்கு முன்பே
ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்: (2022 TNTET Paper -1) A: வெண்ணிக் குயத்தியார் B: வெள்ளி வீதியார் C: வேலு நாச்சியார் D: காக்கைப் பாடினியார்
5. ஆங்கிலேயரிடமிருந்து சிவகங்கை
சீமை மீட்கப்பட்டதற்கு யாருடைய செயலுக்காக தலைவணங்கியதாக வேலு நாச்சியார் குறிப்பிடுகிறார்?
(13-02-2023 FN TNTET-2) (A) ஐதர் அலியின் உதவி (B) மருது சகோதர்களின் படை
பலம் (C) குயிலியின்
தியாகம் (D) கணவர் முத்து வடுக நாதர்
இறப்பு
6. வேலுநாச்சியாரின் காலம்
1730 – 1796. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு __________ ஆகும்.
(04-02-2023 FN TNTET -2) (A) 1745 கி.பி. (B) 1740 கி.பி. (C) 1785 கி.பி. (D) 1780 கி.பி..
7. வேலு நாச்சியார்
__________ என்ற வீரமங்கைக்கு நடுகல் அமைத்து வணங்கினார். (14-10-2022 AN TNTET
-1) (A) ஜானகியம்மாள் (B) குயிலி (C) அஞ்சலையம்மாள் (D) உமையாள் |
தாராபாரதி |
---|
• தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.
• கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர். • புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும். • இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. |
காந்தியடிகளின் தமிழ்க் கையெழுத்து |
---|
• காந்தியடிகள் தமக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பலமுறை கூறியுள்ளார்.
• தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார். • ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். • திருக்குறள் அவரைப் பெரிதும் கவர்ந்த நூலாகும். • 1937 ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். • உ.வே.சாமிநாதர் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தார். • உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார். 'இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது" என்று கூறினார் காந்தியடிகள். • இந்நிகழ்வுகள் மூலம் ஏற்றத்தாழ்வு அற்ற சமுதாயம் மலர வேண்டும் என்னும் காந்தியடிகளின் உள்ள உறுதியை அறிந்து கொள்ளலாம். மேலும் அவர் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றையும் அறிந்து கொள்ள முடிகிறது. |
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக |
---|
இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ.சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் 'சுதேசி நாவாய்ச் சங்கம்' என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.
1. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்? விடை : சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியர் வ.உ.சிதம்பரனார்.சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியர் வ.உ.சிதம்பரனார். 2. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்? விடை : வ.உ.சி. சென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 3. வ. உ.சி. அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்? விடை : வ.உ.சி. பாரதியாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார். 4. வ. உ. சி. அவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை? விடை : வ.உ.சி. அவர்களின் பன்முகத்தன்மை : வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர். 5. வ.உ.சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை? விடை : வ.உ.சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் : தமிழ், ஆங்கிலம். |
sir nan edhavadhu help pannava indha blog la? by sridevi b..married and i have a son..do WhatsApp or call sir to this number ...9994211400 - my husband's number
பதிலளிநீக்குminnal vega kanitham