பாரதிதாசன் (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 4) |
---|
ஆசிரியர் குறிப்பு
• 'புரட்சிக்கவிஞர்' எனவும், 'பாவேந்தர்' எனவும் புகழப்படுபவர் பாரதிதாசன். • இவர்தம் இயற்பெயர் சுப்புரத்தினம். • இவர் பாரதியின் கவிதைமீது கொண்ட காதலால், தம்முடைய பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். • பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு முதலியன இவர்தம் கவிதை நூல்கள். • இவர் வாழ்ந்த காலம் 29.04.1891 முதல் 21.04.1964 வரை |
பழமொழி நானூறு (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 4) |
---|
• இந்நூலின் (பழமொழி நானூறு) ஆசிரியர் முன்றுறை அரையனார்.
• முன்றுறை என்பது ஊர்ப்பெயர். • அரையன் என்னும் சொல், அரசனைக் குறிக்கும். • இவர் முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம்;
அல்லது, அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம். நூல் குறிப்பு • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. • நானூறு பாடல்களைக் கொண்ட நூல் இது. • இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது.
• இப்பாடலில் வரும் பழமொழி,
'ஆற்றுணா வேண்டுவது
இல்'
என்பது. |
ஒளவையார் (புறநானூறு) (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 6) |
---|
நூல் குறிப்பு • புறநானூறு = புறம் + நான்கு + நூறு. • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு. • இந்நூல், புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு. • எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க நூல்களாம். • சங்க இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகள் பழைமை உடையது. • தமிழர்களின் வரலாறு,
பண்பாடு ஆகியவற்றை
அறிய உதவும் நூலாகப் புறநானூறு திகழ்கிறது.
ஆசிரியர்
குறிப்பு • ஒளவையார் சங்கப் புலவர்; அதியமானின் நண்பர். • அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர். • சங்க காலத்தில் பெண் கவிஞர் பலர் இருந்தனர். • அவர்களுள் மிகுதியான பாடல்கள் பாடியவர் ஔவையார். |
தாராபாரதி (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 6) |
---|
• கவிஞர் தாராபாரதி எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர். • ஆசிரியராகப் பணியாற்றிய இவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். • புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள் முதலியன இவர்தம் நூல்களுள் சில. |
minnal vega kanitham