முடியரசன் |
---|
• முடியரசனின் இயற்பெயர் துரைராசு.
• பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். • திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர். • இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. |
Book Back பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல் |
---|
1) கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.........
அ) கல் + அடுத்து ஆ) கல் + எடுத்து இ) கல் + லடுத்து ஈ) கல் + லெடுத்து [விடை : ஆ) கல் + எடுத்து] 2) நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. அ) நா + னிலம் ஆ) நான்கு + நிலம் இ) நா + நிலம் ஈ) நான் + நிலம் [விடை : ஆ) நான்கு + நிலம்] 3) நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல். அ) நாடென்ற ஆ) நாடன்ற இ) நாடு என்ற ஈ) தாடுஅன்ற [விடை : அ) நாடென்ற] 4) கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.. அ) கலம்ஏ றி ஆ) கலமறி இ) கலன் ஏறி ஈ) கலமேறி [விடை : ஈ) கலமேறி] 5) கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) கதிர்ச்+சுடர் ஆ) சதிரின்+கடர் இ) கதிரவன்+சுடர் ஈ) கதிர்+சுடர் [விடை : ஈ) கதிர்+சுடர்] 6) மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) மூச்சு+அடக்கி ஆ) முச்+அடக்கி இ) மூச்+சடச்சி ஈ) மூச்சை+அடக்கி [விடை : அ) மூச்சு+அடக்கி] 7) பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) பெருமைவனம் ஆ) பெருவானம் இ) பெருமானம் ஈ) பேர்வானம் [விடை : ஆ) பெருவானம்] 8) அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) அடிக்குமலை ஆ) அடிக்கும் அலை இ) அடிக்கிலை ஈ) அடியலை [விடை : ஆ) அடிக்கும் அலை] 9) வணிகம்+சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) வணிகசாத்து ஆ)வணிகம்சாத்து இ) வணிகச்சாத்து ஈ) வணிகத்துசாத்து [விடை : இ) வணிகச்சாத்து] 10) பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) பண்டமாற்று ஆ) பண்டம்மாற்று இ) பண்மாற்று ஈ) பண்டுமாற்று [விடை : அ) பண்டமாற்று] 11) மின்னணு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) மின் + னணு ஆ) மின்ன + அணு இ) மின்னல் + அணு ஈ) மின் + அணு [விடை : ஈ) மின் + அணு] 12) விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) விரி+வடைந்த ஆ) விரி+அடைந்த இ) விரிவு + அடைந்த ஈ) விரிவ்+அடைந்த [விடை : இ) விரிவு + அடைந்த] |
சொல்லும் பொருளும் |
---|
மல்வெடுத்த - வலிமைபெற்ற
சமர் – போர் நல்கும் - தரும் கழனி - வயல் மறம் - வீரம் எக்களிப்பு - பெருமகிழ்ச்சி கலம் - கப்பல் ஆழி – கடல் கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி மின்னல்வரி - மின்னல் கோடு அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துகள் |
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக. |
---|
(மின்னணு வணிகம், காசோலை, இணையத்தள வணிகம், வரைவோலை, வங்கி, மின்னணு மயம், பற்று அட்டை, பணத்தாள், கடன் அட்டை) |
கலைச்சொல் அறிவோம் |
---|
1. பண்ட ம் – Commodity
2. கடற்பயணம் – Voyage 3. பயணப் படகுகள் – Ferries 4. தொழில் முனைவோர் – Entrepreneur 5. பாரம்பரியம் – Heritage 6. கலப்படம் – Adulteration 7. நுகர்வோர் – Consumer 8. வணிகர் – Merchant |
பின்வரும் நவமணிகளை அகரவரிசைப்படுத்தி எழுதுக. |
---|
நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்
விடை: கோமேதகம், நீலம், பவம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம். |
சுட்டு எழுத்துகள் |
---|
• அவன், இவள், அங்கு, இங்கு, அந்த, இந்த ஆகிய சொற்களைக் கவனியுங்கள். அவை ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன.
• இவ்வாறு சுட்டிக்காட்டுவதற்கு அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள அ, இ ஆகிய எழுத்துகளே காரணம் ஆகும். • இவ்வாறு ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர், அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும். • ஆனால், இன்று 'உ' என்னும் எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை. அகச்சுட்டு • இவன், அவன், இது, அது -இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை. • இவ்வாறு, சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும். புறச்சுட்டு • அவ்வானம்-இம்மலை-இந்நூல்-இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். • இவ்வாறு சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது புறச்சுட்டு எனப்படும். அண்மைச்சுட்டு • இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு - இச்சொற்கள் நம் அருகில் (அண்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே, இஃது அண்மைச்சுட்டு எனப்படும். • அண்மைச்சுட்டுக்குரிய எழுத்து 'இ' ஆகும். சேய்மைச்சுட்டு • அவன், அவர், அது, அவை, அவ்வீடு. அம்மரம் - இச்சொற்கள் தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. • எனவே, இது சேய்மைச்சுட்டு எனப்படும். சேய்மைச்சுட்டுக்குரிய எழுத்து 'அ' ஆகும். தெரிந்து தெளிவோம் • அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட 'உ' என்ற கட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. • (எ.கா.) உது, உவன் சுட்டுத்திரிபு • அம்மரம், இவ்வீடு ஆகியவை புறச்சுட்டுகள் என்பதை அறிவோம். இச்சொற்களை அந்த மரம், இந்த வீடு என்றும் வழங்குகிறோம். • அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று (திரிந்து) அந்த, இந்த என வழங்குகின்றன. • இவ்வாறு, அஇ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த இந்த எனத் திரித்து சுட்டுப் பொருளைத் தருவது சுட்டுத்திரிபு எனப்படும். |
வினா எழுத்துகள் |
---|
• வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர்.
• சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். • சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும். • ஏ, யா,ஆ,ஓ,ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும். ❖ மொழியின் முதலில் வருபவை - எ, யா (எங்கு, யாருக்கு) ❖ மொழியின் இறுதியில் வருபவை - ஆ,ஓ (பேசலாமா,தெரியுமோ) ❖ மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை - ஏ (ஏன், நீதானே) அகவினா • எது, யார், ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துக்களுக்குப் பொருள் இல்லை. • இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும். புறவினா • அவனா? வருவானோ? இச்சொற்களில் உள்ள ஆ ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். • இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும். |
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தக்க இடத்தில் சேர்த்து எழுதுங்கள். |
---|
அ) நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள். (ஒரு)
விடை : நீங்கள் வரும்போது எனக்கு ஒரு புத்தகம் வாங்கி வாருங்கள். ஆ) நாம் உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். (இயற்கை) விடை: நாம் இயற்கை உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். இ) நான் சொன்ள வேலையை அக்கறையுடன் செய்திருக்கிறார்கள். (மிகுந்த) விடை: நான் சொன்ன வேலையை மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கிறார்கள். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது. 1. என் வீடு அங்கே உள்ளது. (அது/அங்கே ) 2. தம்பி இங்கே வா. (இவர்/இங்கே ) 3. நீர் எங்கே தேங்கி இருக்கிறது? (அது/எங்கே ) 4. யார் அவர் தெரியுமா? (அவர்/யாது) 5. உன் வீடு எங்கே அமைந்துள்ளது? (எங்கே/ என்ன) |
சுட்டுச் சொற்கள் |
---|
கரிகாலனும் அவனுடைய தங்கை மலர்க்கொடியும் பூங்காவிற்குச் சென்றனர். அங்கு இருந்த செடிகளில் பூக்கள் மலர்ந்து இருந்தன. "இங்கு உள்ள மலர்களில் இம்மலர் அழகாக உள்ளது. அம்மலர் பெரியதாக உள்ளது" என்றாள் மலர்க்கொடி. இந்த மலரைப் பார் அந்த மலரை விட அழகாக உள்ளது" என்றான் கரிகாலன்.
1. இப்பத்தியில் உள்ள சுட்டுச் சொற்களை எடுத்து எழுதுக விடை:- இப்பத்தியில் உள்ள சுட்டுச் சொற்கள் : அவனுடைய, அங்கு, இங்கு, இம்மலர், அம்மலர், இந்த, அந்த 2. நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் சிலவற்றை எழுதுக. விடை :- நாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் : அது, அவர்கள், அவள், அவை, அந்த வீடு, இது, இவர்கள், இவள், இவை, இந்த வீடு, இப்புத்தகம், அப்புத்தகம், இப்பையன், அப்பையன். |
பத்தியில் உள்ள வினாச் சொற்களை எடுத்து எழுதுக. |
---|
செழியன் துணிக்கடைக்குச் சென்றான். விற்பனையாளர் ஒருவரிடம் ஆயத்த ஆடைகள் பகுதி எங்கு உள்ளது?” என்று வினவினான். "யாருக்கு ஆடை வேண்டும்? உனக்கா பெரியவர்களுக்கா?" என்று கேட்டார் விற்பனையாளர். "ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? சிறுவர்களுக்கான ஆடைகள் இல்லையோ?' என்று வினவினான். “நீ கேட்பது உன் அளவுக்குரிய ஆடைதானே? அதோ அந்தப் பகுதியில் இருக்கிறது" என்றார் விற்பனையாளர்.
விடை பத்தியில் உன்ன வினாச்சொற்கள் : 1. எங்கு ? 2. யாருக்கு? 3. ஏன்? 4. இல்லையோ? 5. ஆடைதானே? |
கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக |
---|
மனிதர்களுக்குத் தேவையான பொருள்களைக் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கங்களுள் ஒன்று. ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப் பல இடங்களுக்கு அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருள்களை ஓர் இடத்தில் கிடைக்கச் செய்வதும் வணிகம் ஆகும்.
கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர். 1. கிடைக்கும் பொருள்களின் ---------- க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம். (அ) அளவை (ஆ) மதிப்பை (இ) எண்ணிக்கையை (ஈ) எடையை [விடை : (ஆ) மதிப்பை] 2. சிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளை _____ மாற்றலாம். விடை: கோலமாவாக 3. வணிகத்தின் நோக்கம் என்ன? விடை: மனிதர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும். 4. மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன? விடை: கல்லைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இது மதிப்புக் கூட்டுதல் எனப்படும். 5. இப்பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக விடை : வணிகம். |
மிக்க நன்றி...
பதிலளிநீக்கு1-9 வரை உள்ள மொத்த pdf கொடுங்கள் வார இறுதியில்...
எல்லாம் பிரிண்ட் செய்து படிக்க உபயோகமாக இருக்கும்....
minnal vega kanitham