Type Here to Get Search Results !

Day 8 New syllabus அடிப்படையில் 6th தமிழ் இயல் - 8, 9

1
இருபொருள் தருக
இருபொருள் தருக.
(எ.கா.)
ஆறு – நதி
ஆறு – எண்
1. திங்கள்
திங்கள் – கிழமை, மாதம், நிலவு
2. ஓடு
ஓடு – ஓடுதல், வீட்டின் கூரையாகப் பயன்படுவது
3. நகை
நகை – அணிகலன், புன்னகை

புதிர்ச் சொல் கண்டுபிடி
1. இச்சொல் மூன்றெழுத்துச் சொல். உயிர் எழுத்துகள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்து. வல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து. வாசனை என்னும் பொருள்தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொல்லின் மூன்றாம் எழுத்து. அஃது என்ன?
விடை : அறம்

ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக.
1. அரம் - அறம்
அரம் – கூர்மையான கருவி – இரும்பைத் தேய்த்துக் கூர்மையாக்குவதற்கு அரம் பயன்படும்.
அறம் – தர்மம் – பழந்தமிழர்கள் அறச்செயல்களில் சிறந்து விளங்கினர்.
2. மனம் – மணம்
மனம் – உள்ளம் – பிறருக்கு உதவி செய்வதற்கு மனம் வேண்டும்.
மணம் – வாசனை – மல்லிகை மணம் மிக்க மலர்.

தேசிக விநாயகனார் (6th தமிழ் இயல் - 9)
நூல் வெளி
தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
• முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.
ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா [Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது.
• இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 7)
ஆசிரியர் குறிப்பு
'மக்கள் கவிஞர்' என அழைக்கப்படும் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி கவிதைகளை இயற்றியவர்;
• திரையிசைப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.
• உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் தம்முடைய பாடல்கள்வழிப் பரவலாக்கினார்.
• பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் ஊரில் பிறந்தவர்.
• இவர் வாழ்ந்த காலம் 13.04.1930 முதல் 08.10.1959 வரை

உடுமலை நாராயணகவி (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 9)
ஆசிரியர் குறிப்பு
• உடுமலை நாராயணகவி தமிழ்த் திரைப்படப்பாடல் ஆசிரியரும் நாடக எழுத்தாளரும் ஆவார்.
• பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியவர்.
“பகுத்தறிவுக் கவிராயர்” எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்.
• இவர் வாழ்ந்தகாலம் 25.09.1899 முதல் 23.05.1981 வரை

பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல்
1. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) தம்முயிர்
ஆ) தமதுயிர்
இ) தம் உயிர்
ஈ) தம்முஉயிர்
[விடை : அ) தம்முயிர்]
2. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) இன்புற்றிருக்க
ஆ)இன்புறுறிருக்க
இ) இன்புற்று இருக்க
ஈ) இன்புறு இருக்க
[விடை : அ) இன்புற்றிருக்க]
3. 'தானென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) தானெ + என்று
ஆ) தான் + என்று
இ) தா + னென்று
ஈ) தான் + னென்று
[விடை : ஆ) தான் + என்று]
4. 'சோம்பல்' என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்

அ) அழிவு
ஆ) துன்பம்
இ) சுறுசுறுப்பு
ஈ) சோகம்
[விடை : இ) சுறுசுறுப்பு]
5) 'எளிதாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) எளிது + தாகும்
ஆ) எளி + தாகும்
இ) எளிது + ஆகும்
ஈ) எளிதா + ஆகும்
[விடை : இ) எளிது + ஆகும்]
6) 'பாலையெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) பாலை+யெல்லாம்
ஆ) பாலை+எல்லாம்
இ) பாலை+எலாம்
ஈ) பா+எல்லாம்
[விடை : ஆ) பாலை+எல்லாம்]
7) இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) இன்உயிர்
ஆ) இனிய உயிர்
இ) இன்னுயிர்
ஈ) இனிமைஉயிர்
[விடை : இ) இன்னுயிர்]
8) மலை+எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) மலை எலாம்
ஆ) மலையெலாம்
இ) மலையெல்லாம்
ஈ) மலை எல்லாம்
[விடை : ஆ) மலையெலாம்]

சொல்லும் பொருளும்
சொல்லும் பொருளும்
• தண்டருள் - குளிர்ந்த கருணை
• கூர் – மிகுதி
• செம்மையருக்கு - சான்றோருக்கு
• ஏவல் - தொண்டு
• பணி - தொண்டு
• எய்தும் – கிடைக்கும்
• எல்லாரும் - எல்லா மக்களும்
• அல்லாமல் - அதைத்தவிர
• சுயம் - தனித்தன்மை
• உள்ளீடுகன் - உள்ளே இருப்பவை
Unit - 9
• அஞ்சினர் - பயந்தனர்
• முற்றும் - முழுவதும்
• கருணை – இரக்கம்
• மாரி - மழை
• வீழும் - விழும்
• கும்பி - வயிறு
• ஆகாது - முடியாது
• நீள்நிலம் - பரந்த உலகம்
• பூதலம் - பூமி
• பார் – உலகம்

கலைச்சொல் அறிவோம்
1. அறக்கட்டளை - Trust
2. தன்னார்வலர் - Volunteer
3. இளம் செஞ்சிலுவைச் சங்கம் - Junior Red Cross
4. சாரண சாரணியர் - Scouts & Guides
5. சமூகப் பணியாளர் - Social Worker Unit - 9 கலைச்சொல் அறிவோம்.
1. மனிதநேயம் – Humanity
2. கருணை – Mercy
4. நோபல் பரிசு – Nobel Prize
3. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை – Transplantation
5. சரக்குந்து – Lorry

கீழ்க்காணும் பெயர்ச் சொற்களை அகரவரிசையில் எழுதுக.
பூனை, தையல், தேனீ, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்
விடை அகரவரிசை : ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, தையல், பழம், பூனை, மனிதன், மாணவன், மான், வௌவால்.
அகரவரிசைப்படுத்துக. ஒழுக்கம், உயிர், ஆடு, எளிமை, அன்பு, இரக்கம், ஓசை, ஐந்து, ஈதல், ஊக்கம், ஏது, ஒளவை
விடை அன்பு, ஆடு, இரக்கம், ஈதல், உயிர், ஊக்கம், எளிமை, ஏது, ஐந்து, ஒழுக்கம், ஓசை, ஔவை
அகராதியைப் பயன்படுத்தி பொருள் எழுதுக.
1. கருணை – இரக்கம்
2. அச்சம் – பயம்
3. ஆசை – விருப்பம்

சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துங்கள்
1. சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.
2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்.
3. சிறைச் சாலைக்குச் சென்று உணவிட்டான்.
4. அமுதசுரபியைப் பெற்றாள்.
5. அதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.
விடை
1. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
2. அமுதசுரபியைப் பெற்றாள்.
3. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.
4. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.
5. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham