தெரியுமா? (10th New Tamil Book Unit -2) |
---|
ஹிப்பாலஸ் பருவக்காற்று
• கி.பி. (பொ. ஆ.) முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் என்னும் பெயர் கொண்ட கிரேக்க மாலுமி, பருவக் காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார். • அதுமுதல், யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்துசென்றன. • அந்தப் பருவக் காற்றுக்கு யவனர், அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பாலஸ் என்பதையே சூட்டினார்கள். • ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று. |
தெரிந்து தெளிவோம் (10th New Tamil Book Unit -2) |
---|
• ஒருகாலத்தில் குழாயிலிருந்து அப்படியே தண்ணீர் குடித்த நாம், நீர் மாசுபாடு அடைந்ததன் காரணமாக அதனைத் தூய்மைப்படுத்தியும் விலைக்கு வாங்கியும் குடிக்கும் நிலையில் இருக்கிறோம்.
• இப்போது காற்றும் மாசுபாடு அடைந்துவருகிறது. • தண்ணீரைப் புட்டியில் அடைத்து விற்பது போன்று, உயிர்வளியையும் (ஆக்சிஜன்) விற்கும் நிலையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. • ஒரு புட்டியின் விலை 1000 ரூபாய்க்கும் அதிகமாகும். |
தெரியுமா? (10th New Tamil Book Unit -2) |
---|
• குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, ஒரு இலட்சம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும். |
தெரிந்து தெளிவோம் (10th New Tamil Book Unit -2) |
---|
• உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது.
• ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. • உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார். • இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று. |
தெரிந்து தெளிவோம் (10th New Tamil Book Unit -2) |
---|
விரிச்சி
• ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்; • அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர். |
தெரியுமா? (10th New Tamil Book Unit -2) |
---|
புயலுக்குப் பெயர் சூட்டல் ஏன்?
• புயலுக்கு முன்பு பேரழிவு பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, பேரிடர் மேலாண்மை, பாதிப்புக் குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும். • வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. • புதுதில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது. • வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. • இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), கடைசியாக லெஹர் (அலை). இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு. ‘கஜா’ புயலின் பெயர் இலங்கை தந்தது. அடுத்து வந்த 'பெய்ட்டி' புயல் பெயர் தாய்லாந்து தந்தது. |
தெரிந்து தெளிவோம் (10th New Tamil Book Unit -2) |
---|
இடம்புரிப் புயலும் வலம்புரிப் புயலும்
• மேட்டிலிருந்து தாழ்வுக்குப் பாயும் தண்ணீர் போல, காற்றழுத்தம் அதிகமான இடத்திலிருந்து, குறைவான இடத்துக்குக் காற்று வீசும். • இப்படி வீசும் காற்றின் போக்கை, புவி தனது அச்சில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்கையில் மாற்றும். நிலநடுக்கோட்டின் வடக்குப் பகுதியில் வீசும் காற்றை வலப்புறமாகத் திருப்பும். • தெற்குப் பகுதியில் வீசும் காற்றை இடப்புறமாகத் திருப்பும். • காற்றின் வேகம் கூடினால் இந்த விலக்கமும் கூடும். • வங்கக் கடலில் வீசும் புயலும், அமெரிக்காவை, ஜப்பானை, சீனாவைத் தாக்கும் புயல்களும் இடம்புரிப் புயல்கள்! ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள் வலம்புரிப் புயல்கள்! பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் இந்த விளைவை 1835இல் கண்டுபிடித்தார். • புயலின் இந்த இருவகைச் சுழற்சிக்குக் கொரியாலிஸ் விளைவு என்று பெயர். |
super sir
பதிலளிநீக்குminnal vega kanitham