மாணிக்கவாசகர் (10th Old Tamil Book) |
---|
ஆசிரியர் குறிப்பு
• சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர் மாணிக்கவாசகர். • இவர், திருவாதவூரில் பிறந்தவர். இவ்வூர், மதுரைக்கு அருகில் உள்ளது. • மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றியவர்; • பாண்டியனுக்காகக் குதிரை வாங்கச் சென்றபோது, திருப்பெருந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப் பெற்றவர். • அவ்விறைவனை, மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்க அழுது தொழுதவர். • இதனால் மாணிக்கவாசகரை, 'அழுது அடியடைந்த அன்பர்' என்பர். • திருவாசகமும் திருக்கோவையாரும் இவர் அருளியன. • இவர் எழுப்பிய கோவில், தற்பொழுது ஆவுடையார்கோவில் என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம் ) உள்ளது. • இவர்தம் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. நூற்குறிப்பு : • சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாம் திருமுறையில் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன. • திருவாசகத்தில் அறுநூற்று ஐம்பத்தெட்டுப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. • திருவாசகம் கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்யுமாதலால், 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்னும் தொடர் வழங்கலாயிற்று. • திருவாசகத்தின் சிறப்பை உணர்ந்த ஜி. யு. போப், இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். • திருவாசகத்திலுள்ள திருச்சதகத்தின் முதற்பாடல் நம் பாடப்பகுதியாக அமைந்துள்ளது. • திரு என்பது, நூலின் சிறப்பை உணர்த்த வந்த அடைமொழி; • சதகம் என்பது, நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும் • உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரைவிடப் புலமை, உழைப்பு,துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை. -ஜி.யு. போப் |
திருக்குறள் (10th Old Tamil Book) |
---|
ஆசிரியர் குறிப்பு:
• திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். • தமிழுலகம் இவரை முதற்பாவலர், தெய்வப்புலவர், செந்நாப்போதார், பொய்யில்புலவர், பெருநாவலர் முதலிய பெயர்களால் போற்றுகின்றது. • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பொதுநெறி காட்டியவர் திருவள்ளுவர். • இவர் கி.மு. 31இல் பிறந்தவர் என அறிஞரால் உறுதி செய்யப்பட்டுத் திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. • தமிழக அரக, தைத் திங்கள் இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் நாளாக அறிவித்துக் கொண்டாடி வருகின்றது. நூற்குறிப்பு : • திரு + குறள் = திருக்குறள். • மேன்மையான கருத்துகளைக் குறள் வெண்பாக்களால் கூறும் நூலாதலின், திருக்குறள் எனப் பெயர் பெற்றது. • இஃது ஈரடிகளில் இயற்றப்பட்டிருப்பினும் விரிவான பொருளைத் தருகின்றது. • இந்நூல் நாடு, மொழி, இனம், மதம், காலம் ஆகியவற்றைக் கடந்து நிற்கிறது; • உலகப் பொதுமறை எனப் போற்றப்பெறுகிறது. • திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • இஃது அறம், பொருள், இன்பம் என முப்பாலாகப் பகுக்கப்பட்டுள்ளது; • ஒன்பது இயல்களையும் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களையும், ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களையும் கொண்டு விளங்குகிறது. • ஆங்கிலம், கிரேக்கம், இலத்தீன் முதலிய உலகமொழிகள் பலவற்றிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. • திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். • தமிழ்ச் சான்றோர் பலரால் இயற்றப்பட்ட திருவள்ளுவமாலை, திருக்குறளின் பெருமைகளைப் போற்றிப் புகழ்கிறது. • 'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்றும், இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே என்றும், பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். • மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார். |
ஏலாதி(10th Old Tamil Book) |
---|
ஆசிரியர் குறிப்பு :
• ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார். • இவருக்குக் கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு. • இவர், சமண சமயத்தவர் என்பர். • இவர், சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலான உயரிய அறக்கருத்துக்களை ஏலாதியில் வலியுறுத்திக் கூறுகிறார். • இவர் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு. • இவர், திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார். நூற்குறிப்பு : • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஏலாதியும் ஒன்று. • இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எண்பத்தொரு வெண்பாக்களைக் கொண்டுள்ளது. • நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை இந்நூல் நவில்கிறது. • இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது. • ஏலம் என்னும் மருந்துப்பொருளை முதன்மையாகக்கொண்டு இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி, ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர். • இம்மருந்து, உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும். • அதுபோல, இந்நூலின் நற்கருத்துகள், கற்போரின் அறியாமையை அகற்றும். • இந்நூலின் ஐம்பத்தொன்பதாவது பாடல், நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. |
(6th Old Tamil Book) |
---|
• ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலையாய பற்று மொழிப்பற்றே. மொழிப்பற்று இல்லாதாரிடத்துத் தேசப்பற்றும் இராது என்பது உறுதி. தேசம் என்பது மொழியை அடிப்படையாகக்கொண்டு இயங்குவது. ஆதலால், தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்றுப் பெருகவேண்டும் என்பது எனது பிரார்த்தனை. - தந்தை பெரியார். |
minnal vega kanitham