கம்பராமாயணம் (10th Old Tamil Book இயல் 3) |
---|
ஆசிரியர் குறிப்பு
• கம்பர் தேரழுந்தூரில் பிறந்தார். இவ்வூர், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. • கம்பரின் தந்தையார் ஆதித்தன். • கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர். • இவரைத் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் ஆதரித்தார். • கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு. • இவர் செய்ந்நன்றி மறவா இயல்பினர். • தம்மை ஆதரித்த வள்ளல் சடையப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார். • கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகியன கம்பர் இயற்றிய நூல்கள். • சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர். • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் கல்வியிற் பெரியர் கம்பர் என்னும் தொடர்களால் கம்பரின் பெருமையை அறியலாம். • யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்' என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார். நூற்குறிப்பு : • இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. • வான்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தழுவிக் கம்பர் அதனைத் தமிழில் இயற்றினார். • கம்பர் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம் எனப்பட்டது. • கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார். • கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது. • காண்டம் என்பது பெரும்பிரிவையும் படலம் என்பது அதன் உட்பிரிவையும் குறிக்கும். • தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பினால் உச்சநிலையை அடைந்தது. • இந்நூலின் சிறப்புக் கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் தமிழுக்குக் 'கதி' என்பர் பெரியோர். • கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது; பொருள், அணி, நடை ஆகியவற்றால் சிறந்தது; கற்போர்க்கு இனிமை தரும் கவிச்சுவை நிறைந்தது; சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ்ப் பண்பாடும் மிளிர்ந்துள்ளது. • உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம். - கால்டுவெல் |
ஆசிரியர் குறிப்பு & நூற்குறிப்பு (10th தமிழ் பழைய புத்தகம் இயல் 3)
டிசம்பர் 18, 2023
0
minnal vega kanitham