தெரியுமா? (10th New Tamil Book Unit -3) |
---|
ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர்
• பண்டைத் தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும்போது, அவர்களைப் பிரிய மனமின்றி வருந்தினர். • மேலும், வழியனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்வரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர். • "காலின் ஏழடிப் பின் சென்று" - பொருநராற்றுப்படை, 166 |
தெரிந்து தெளிவோம் (10th New Tamil Book Unit -3) |
---|
வாழை இலையில் விருந்து
• தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது. • நம் மக்கள் வாழை இலையின் மருத்துவப் பயன்களை அன்றே அறிந்திருந்தனர். • தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர். • உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும். • ஏனென்றால் வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம். இலையில் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவார்கள். • உண்பவர் மனமறிந்து, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறுவர். |
தெரிந்து தெளிவோம் (10th New Tamil Book Unit -3) |
---|
கரிசல் இலக்கியம்
• கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம். • காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் இவை. • கரிசல் மண்ணின் படைப்பாளி கு. அழகிரிசாமி கி.ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கியவர். • கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் கி.ராஜநாராயணன். • அந்தக் கரிசல் இலக்கியப் பரம்பரை இன்றளவும் தொடர்கிறது பா.செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ.தர்மன், வேல ராமமூர்த்தி, இன்னும் பலரின் மூலமாக... |
தெரியுமா? (10th New Tamil Book Unit -3) |
---|
• ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடியும் கூட்டு நிலைப் பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம்.
• வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டு நிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன. எ.கா. - கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி |
minnal vega kanitham