யார் இவர்? (10th New Tamil Book Unit -1) |
---|
• தமிழாசிரியர்; நூலாக்கப் பணிகளை விரும்பிச் செய்பவர்; சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்.
• திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் "திருவள்ளுவர் தவச்சாலை" ஒன்றை அமைத்திருப்பவர்; • பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர்; • தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர்; • தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர். • விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்; • அதற்காக, தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்; • இன்றளவும் இவ்வாறே எழுதித் தமிழுக்குத் தனிப்பெரும் புகழை நல்கி வருபவர். • பற்பல நூல்களை எழுதியிருப்பினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம் முதலியன இவர்தம் தமிழ்ப் பணியைத் தரமுயர்த்திய நல்முத்துக்கள். • அவர்தான் உலகப் பெருந்தமிழர் தமிழ்த்திரு இரா.இளங்குமரனார். |
தெரியுமா? (10th New Tamil Book Unit -1) |
---|
• உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே.
• மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே. • பன்மொழிப் புலவர் க.அப்பாத்துரையார் |
தெரிந்து தெளிவோம் (10th New Tamil Book Unit -1) |
---|
இரட்டுற மொழிதல்
• ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும். • இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர். • செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. |
தெரியுமா? (10th New Tamil Book Unit -1) |
---|
முதல் தமிழ்க் கணினி
• தமிழ் மறையான திருக்குறளைத் தந்த "திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ்க் கணினி 1983 செப்டம்பரில் டி.சி.எம். • டேட்டா புரொடக்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டுவந்தது. • இக்கணினியில் முதல் முறையாகத் தமிழ் மொழியிலேயே விவரங்களை (Data) உள்ளீடாகச் செலுத்தி நமக்குத் தேவையான தகவல்களை வெளியீடாகக் கணினியிலிருந்து பெறமுடிந்தது. • இந்தக் கணினி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் கையாளக் கூடியதாக அமைந்தது. • சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளிவிவரத் துறை அலுவலகத்திற்கும் தலைமைச் செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பறிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினியும் "திருவள்ளுவரே'! |
Smart
பதிலளிநீக்குHi sir, very useful your quiz test. I request to you give 6th to 12th old tamil syllabus content wise provide test. It will be more helpful.
பதிலளிநீக்குminnal vega kanitham