Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

Day 19 Age Problems (வயது கணக்குகள்) (11 to 20) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து



Age Problems (வயது கணக்குகள்) (11 to 20)



இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD
------------
minnal vega kanitham

மின்னல் வேக கணிதம்

TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்
தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
1. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 7 மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது மகனின் வயதை போல 5 மடங்கு எனில் தந்தையின் தற்போதைய வயது?
2. தற்போது தந்தையின் வயது மகனின் வயதை போல 5 மடங்காக உள்ளது. 3 ஆண்டுகள் மூன்று வருடங்களுக்குப் பிறகு தந்தையின் வயது மகனின் வயதை போல 4 மடங்காக இருக்கும் எனில் மகனின் தற்போதைய வயது என்ன?
3. மூன்று வருடங்களுக்கு முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 7 மடங்காக இருந்தது. 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 4 மடங்காக இருக்கும் எனில் மகனின் தற்போதைய வயது என்ன?
4. ஒரு மனிதனின் வயது அவனது மகனின் வயதை போல 4 மடங்காக உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னர், அந்த மனிதனின் வயது அவரது மகனின் வயதை போல 9 மடங்கு எனில் அந்த மனிதனின் தற்போதைய வயது என்ன?
5. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 3 மடங்காகவும், 5 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 7 மடங்காகவும் உள்ளது எனில் தந்தையின் தற்போதைய வயது என்ன?
6. 10 ஆண்டுகளுக்கு முன்னர் தாயின் வயது மகனின் வயதை போல 4 மடங்காகவும், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தாயின் வயது மகனின் வயது போல 2 மடங்காகவும் உள்ளது எனில் மகனின் தற்போதைய வயது ?
7. ஒரு வருடத்திற்கு முன்னர் சமீர் மற்றும் அசோக் இருவரின் வயதுகளின் விகிதம் 4:3. ஒரு வருடத்திற்குப் பின்னர் அவர்களின் வயதுகளின் விகிதம் 5:4 எனில் அவர்களின் தற்போதைய வயது கூடுதல் என்ன ?
8. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் Aன் வயது Bன் வயதில் பாதி ஆகும். அவர்களுடைய தற்போதைய வயதுகளின் விகிதம் 3:4 எனில் அவர்களின் தற்போதைய வயதுகளின் கூடுதல் என்ன?
9. ஒரு தாய் மற்றும் மகனின் வயதுகளின் கூடுதல் 50. மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்னர் தாயின் வயது மகனின் வயதை போல 7 மடங்காக இருந்தது எனில் தாயின் தற்போதைய வயது என்ன
10. ஒரு தந்தை மற்றும் மகனின் வயதுகளின் கூடுதல் 56. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 3 மடங்கு எனில் மகனின் தற்போதைய வயது என்ன

Day 18 Age Problems (வயது கணக்குகள்) (01 to 10) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து

கருத்துரையிடுக

5 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham