Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

தினம் தினம் திருக்குறள் 02




திருவள்ளுவர் ஆண்டு : 

கிறிஸ்துவ ஆண்டுடன் 31 ஆண்டுகளை கூட்டினால் வரும் ஆண்டு 
திருவள்ளுவர் ஆண்டு ஆகும்.

(உதாரணமாக 2013 ம் ஆண்டுடன் 31 ஐ கூட்ட வருவது 

திருவள்ளுவர் ஆண்டு. அதாவது கிறிஸ்துவ ஆண்டு 2013 எனில் திருவள்ளுவர் ஆண்டு 2044 ஆகும். )

வள்ளுவர் கூறிய உடைமைகள் 10.

•    அன்புடைமை

•    அடக்கமுடைமை

•    ஒழுக்கமுடைமை

•    பொறையுடைமை

•    அருளுடைமை

•    அறிவுடைமை

•    ஊக்கமுடைமை

•    ஆள்வினையுடைமை

•    பண்புடைமை

•    நாணுடைமை



சிறப்பு குறள்கள்

•    ஒரே எழுத்தில் முடியும் குறள்
'"தொடிற்கடின் அல்லது காமநோய் போல 
விடிற்கடின் ஆற்றுமோ தீ"

•    1.5.7 என்ற பகா எண்களை குறிப்பிடும் குறள்: 

"ஒருமையுள் ஆமைபோ லைந்தடக்க லாற்றின் 
எழுமையும் ஏமாப் புடைத்து" - என்ற குறல்.

•    பால், தேன், நீர் என்ற மூன்று நீர்மங்கள் இடம் பெற்றுள்ள குறள் :

பலோடு தேன்கலந் த்ற்றே பணிமொழி 
வாலெயி றூறிய நீர் (112) - என்ற குறல்.

•    துணை எழுத்தே இல்லாத குறள் :

"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக". (391)

    ஒரே சொல் 6 முறை இடம் பெற்றுள்ள குறள்: 

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"

•    ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும், ஒரே சொல் 4 முறை 22 குறட்பாக்களிலும், ஒரே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.


தினம் தினம் திருக்குறள் 01

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham