Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !

10000 questions

சமூக அறிவியல் (New Book Social sciences) (6th to 12th) 10000 Questions
10th சமூக அறிவியல் free online test click here

நடப்பு நிகழ்வுகள் 2021

தினசரி நடப்பு நிகழ்வுகள் 2021
நடப்பு நிகழ்வுகள் 2021 ONLINE FREE TEST (விளக்கம்) click here

TNPSC Gr I, II, IIA (unit 8), IV important questions slip test

9ஆம் வகுப்பு  தமிழ் (New Book) – இயல் 1 முதல் 5 வரை


1. இந்தியாவில் பேசப்படும் மொழிக் குடும்பங்களின் எண்ணிக்கை -
... விடை : 42. இந்தியா நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டவர்
... விடை : ச. அகத்தியலிங்கம்3. திராவிடம் என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர்
... விடை : குமரிலபட்டர்


4. தமிழ் என்ற சொல்லிலிருந்துதான் திராவிடம் என்னும் சொல் பிறந்தது என்று கூறியவர்
... விடை : ஹீராஸ் பாதிரியார்5. எந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்தியமொழிகள் அனைத்திற்கும் வடமொழியே மூலமொழி என்று அறிஞர்கள் கருதினார்?
... விடை : 18ஆம் நூற்றாண்டு6. ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என்று முதன்முதலில் குறிப்பிட்டவர் ... விடை : வில்லியம் ஜோன்ஸ்7. முதன்முதலில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனப் பெயரிட்டவர்
... விடை : பிரான்சிஸ் எல்லிஸ்8. ஹோக்கன் என்பவர் குறிப்பிடும் ‘தமிழியன்’ என்ற மொழிக்குடும்பத்தில் இடம்பெற்றுள்ள மொழிகள் யாவை?
... விடை : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மால்தோ, தோடா, கோண்டி9. கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளில் ஒப்பிலக்கணம்’ என்ற நூல் வெளிவந்த ஆண்டு
... விடை : 185610. திராவிட மொழிக் குடும்பத்தின் வகைகள்
... விடை : 311. எது பொருந்தாது? அ) தோடா ஆ) கோண்டா இ) கொரகா ஈ) இருளா
... விடை : ஆ (விளக்கம் : மற்றவை தென் திராவிடம்)12. அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகளைக் குறிப்பிடுக.
... விடை : எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா13. “தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி...” எனக் கூறியவர்
... விடை : கால்டுவெல்14. ‘ஃகன்’ என்ற அடிச்சொல் எந்தத் திராவிட மொழினுடையது?
... விடை : குரூக்15. ‘மூணு’ என்ற எண்ணுப் பெயர் எந்தத் திராவிட மொழினுடையது?
... விடை : மலையாளம்16. ‘ராமசரிதம்’ என்ற இலக்கண நூல் எந்தத் திராவிட மொழினுடையது?
... விடை : மலையாளம்17. எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?
... விடை : மொரிசியஸ், இலங்கை18. “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” இது யாருடைய கூற்று?
... விடை : ஈரோடு தமிழன்பன்19. ‘இனிமையும் நிமையும் தமிழெனல் ஆகும்’ எனும் வரிகள் இடம்பெற்ற நூல்
... விடை : பிங்கல நிகண்டு (பிங்கலர்)20. முக்குணங்களில் அமைதி, மேன்மை ஆகியவற்றைச் சுட்டும் குணம்
... விடை : சத்துவம்21. ‘சந்து இலக்கியம்’ என அழைக்கப்படும் சிற்றிலக்கியம்
... விடை : தூது22. “நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடுவாழ்க” எனப் பாடியவர்
... விடை : கவியோகி சுத்தானந்த பாரதியார்23. 1829இல் காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டவர்
... விடை : சார் ஆர்தர் காட்டன்24. ‘கடலாடுதல்’ என்பது எப்போது நடைபெறும் நிகழ்வு
... விடை : திருமணம்25. தமிழர் மரபில் “நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன” எனக் கூறியவர்
... விடை : பேராசிரியர் தொ. பரமசிவன்26. ‘மாதவி காவியம்’ என்ற நூலின் ஆசிரியர்
... விடை : தமிழ் ஒளி27. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ எனும் புறநானூற்று பாடல் வரியினைப் பாடியவர்
... விடை : குடபுலவியனார்28. ‘ஒவ்வொரு கல்லாய்’ என்ற நூலின் ஆசிரியர்
... விடை : கந்தர்வன் (இயற்பெயர் – நாகலிங்கம்)29. ‘கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்’ என்ற நூலின் ஆசிரியர்
... விடை : மா. அமரேசன்30. ‘எருது கட்டி’ என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் குறிப்பிடும் பள்ளு
... விடை : கண்ணுடையம்மன் பள்ளு31. ‘பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி;” எனும் பாடல்வரி இடம்பெறும் நூல்
... விடை : மணிமேகலை32. ‘நன்னூற்புலவன்’ என்று அழைக்கப்படுபவர்
... விடை : இளங்கோவடிகள்33. “பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே” எனும் பாடல்வரி இடம்பெறும் நூல்
... விடை : திருவாசகம்34. ‘தமிழர் சால்பு’ என்ற நூலின் ஆசிரியர்
... விடை : சு. வித்யானந்தன்35. பிற வழிகளில் வரும் செல்வங்களைவிட, ‘தலைச் சிறந்த செல்வம்’ என வள்ளுவர் குறிப்பிடுவது
... விடை : கேள்விச் செல்வம்.36. “........................................................ ஆவியினும் வாழினும் என்.” எனும் குறள் வழியே வள்ளுவர் உணர்த்தும் கருத்து
... விடை : கேட்பதன் சுவையை உணராமல் நாவின் சுவை மட்டும் உணர்பவர் இறந்தால் என்ன! இருந்தால் என்ன!37. “தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் ......................................................” விடுபட்ட சீரினை நிரப்புக.
... விடை : தீரா இடும்பை தரும்38. திருக்குறளில் இடம்பெற்ற மரங்களின் எண்ணிக்கை
... விடை : 2 (பனை, மூங்கில்)39. உலகின் முதல் ஒளிப்படி எடுக்கப்பட்ட ஆண்டு
... விடை : 193840. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்
... விடை : ஹாங்க் மாக்னஸ்கிகருத்துரையிடுக

5 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham