Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !

Free Online Test

10th New Book Free Test

 சமூக அறிவியல் & அறிவியல் Click Here

 11th சிறப்புத் தமிழ் 1000+ Slip Test Click Here

  பொது தமிழ் OLD QUESTIONS Click Here

TNPSC Gr I, II, IIA (unit 8), IV 9th new tamil important questions slip test

9ஆம் வகுப்பு NEW தமிழ் – இயல் 5 முதல் 7 வரை 1. “இணையத்தில் இது இல்லையெனில் உலகத்தில் அது நடைபெறவில்லை!” என்பது யாருடைய புகழ்பெற்ற வாசகம்
... விடை : லீ
2. “தேசியத் திறனாய்வுத் தேர்வு (National Talent Search Exam)” எந்த வகுப்பிற்காக நடத்தப்படுகிறது?
... விடை : 10 ஆம் வகுப்பு
3. கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர்
... விடை : மெட்டூர் (தேனி)4. ‘நான்காவது அறிவு’ எனத் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது
... விடை : கண்
5. ‘இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர்
... விடை : விக்ரம் சாராபாய்
6. 2013இல் மங்கள்யாண் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுக்கலன் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்தவர்
... விடை : அருணன் சுப்பையா
7. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் ... விடை : டாக்டர். முத்துலெட்சுமி அம்மையார்8. ‘பரமாணுப் புராணம்’ என்ற நூலின் ஆசிரியர்
... விடை : ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார்
9. “............... இல்லாத பெண்கள் களர்நிலம்” எனும் வரிகள் மூலம் பாரதிதாசனர் உணர்த்துவது
... விடை : கல்வி
10. “பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,” எனும் சிறுபஞ்சமூலப் பாடல்வரிகளின் மூலம் நீவிர் அறிவது யாது?
... விடை : நன்மை, தீமைகளை நன்குணர்ந்தவர், இளையவராகவே இருந்தாலும், அவர் மூத்தவரோடு வைத்து எண்ணத் தக்கவரே ஆவார்.
11. “மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை” என்பது யாருடைய கூற்று?
... விடை : அண்ணா
12. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்குரிய நூலகம் ... விடை : திருவனந்தபுரம் நடுவண் நூலகம்13. “பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன” என்று சிற்பத் தொழில் பற்றிய பாடல் வரி இடம்பெற்ற நூல்
... விடை : திவாகர நிகண்டு, மணிமேகலை
14. யாருடைய காலத்தில் சுதையினாலும், கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன? ... விடை : பல்லவர்கள்15. கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டுவான்கோவிலில் அமைந்துள்ள சிற்பங்கள் யாருடைய சிற்பக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்?
... விடை : பாண்டியர்
16. திரிபுவன வீரேசுவரம் கோவிலைக் கட்டிய மன்னன் ... விடை : இரண்டாம் குலோத்துங்க சோழன்17. உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் ... விடை : சுவாமிமலை, கும்பகோணம், மதுரை18. பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களையும் அமைத்தவர்கள் ... விடை : விஜய நகர மன்னர்கள்19. பல இடங்களில் ஆயிரங்கால் மண்டபங்களை அமைத்தவர்கள் ... விடை : நாயக்கர்கள்20. ஒரு பாறையில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ள இடம் ... விடை : திருநாதர்குன்று21. இராவண காவியத்தில் உள்ள பாடல்கள், காண்டங்கள் எண்ணிக்கை
... விடை : 3100, 5
22. புலவர் குழந்தை யாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் திருக்குறளுக்கு உரை எழுதினார்? ... விடை : பெரியார்23. நாச்சியார் திருமொழியில் உள்ள மொத்தப் பாடல்கள்
... விடை : 140
24. ‘மின்சாரப் பூ’ என்ற சிறுகதையின் ஆசிரியர் ... விடை : மேலாண்மை பொன்னுசாமி25. “கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்” என்பது யாருடைய கூற்று? ... விடை : புதுமைப்பித்தன்26. “கருங்கடலும் கலைக்கடலும்” என்னும் பயண நூலின் ஆசிரியர் ... விடை : தி. ஜானகிராமன் (ரோம்,செக்கோஸ்லோவோக்கியா பயண அனுபவம்-1974) 
• ஜப்பான் – உதயசூரியன் (1967), காவிரிப் பயணம் – நடந்தாய் வாழி காவிரி
• வேறு நூல் – அடுத்த வீடு ஐம்பது மைல்
• தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைப்பவர்
• செய்தி என்னும் சிறுகதை ‘சிவப்பு ரிக்சா’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
• நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. சீவாளி , நாணல் என்ற புல் வகையைக் கொண்டு செய்யப்படுகிறது.27. யாருடைய உயிர், ‘சாகும்வரை உள்ள நோய்’ என்று வள்ளுவர் கூறுகிறார்? ... விடை : சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர்28. சான்றோர்க்குப் ‘பகைவரையும் நட்பாக்கும் கருவி’ என வள்ளுவர் கூறுவது
... விடை : ஆற்றல், பணிவு
29. “ ..................................................................... ஐந்துசால்பு ஊன்றிய தூண்.” விடுபட்ட சீரினை நிரப்புக. ... விடை : அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடுமணநூல்’ என அழைக்கப்படும் நூலின் ஆசிரியர் எச்சமயத்தைச் சார்ந்தவர்? ... விடை : சமணம்31. ‘நச்சிலைவேல் கோக்கோதை நாடு’ என்ற முத்தொள்ளாயிர பாடல்வரியில் குறிப்பிடப்படும் நாடு ... விடை : சேர நாடு32. ஜப்பானியர்கள், யாருடைய தலைமையில் இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்.ஏ) என்ற படையை உருவாக்கினர்? ... விடை : மோகன்சிங்33. நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நாள் ... விடை : 9.7.1943 (சிங்கப்பூர்)34. இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சிராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக இருந்தவர் ... விடை : டாக்டர் லட்சுமி35. “இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு” என்ற நூலின் ஆசிரியர்
... விடை : மா.சு. அண்ணாமலை (த.நா. அரசின் பரிசு பெற்றார்)

36. “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்று கூறியவர் ... விடை : இந்திய தேசிய இராணுவப் படைத் தலைவராக இருந்த ‘தில்லான்’37. ‘மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது’ என்று கூறியவர் ... விடை : சர்ச்சில் (நேதாஜியின் பதில் – இந்தத் தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும்.)38. “நான் என் உயிரைக் கொடுப்பதற்காகக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை” என்பது யாருடைய கூற்று?
... விடை : இராமு (18 வயதில் 1944ல் தூக்கிலிடப்பட்டார்.)
39. 782 அடிகள் கொண்ட மதுரைக் காஞ்சி நூலில் மதுரையைப் பற்றிக் கூறும் அடிகள்
... விடை : 354
40. போச்சம்பள்ளிச் சந்தை உள்ள மாவட்டம் ... விடை : கிருஷ்ணகிரி


more questions = 9ஆம் வகுப்பு தமிழ் (New Book) – இயல் 1 முதல் 5 வரை

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.