16 ஜூன் 2020 தினசரி நடப்பு நிகழ்வுகள்

Share:
Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்


1.கரோனா நோய்த்தொற்று நாள்தோறும் மிகக் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முழுவதும் பொது முடக்கம் வரும் 19-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது ஜூன் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.


2.எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
3.கரோனா நோய் தோற்றால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களை காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.


4.புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நாடு முழுவதும் இதுவரை 4450 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே தெரிவித்தது.


5.தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வர வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் குழுவினர் தெரிவித்தனர்.


6.இந்தியா கடந்த ஆண்டு கூடுதலாக 10 அணு ஆயுதங்களை உற்பத்தி செய்துள்ள போதிலும் சீனா, பாகிஸ்தான காட்டிலும் குறைவான அணு ஆயுத கையிருப்பு இந்தியாவிடம் இருப்பது ஸ்வீடனைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனம் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது.


7. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஒன்பதாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 48 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகளும் உயர்த்தப்பட்டது.


8.அதிக நச்சுத் தன்மையுள்ள மெத்தனாலை பயன்படுத்தி போலி கை சுத்திகரிப்பு சுத்திகரிப்பான் (சானிடைசர்) தயாரித்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளதால் அதை தடுக்க தீவிரமாக கண்காணிக்குமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் காவல்துறை அதிகாரிகளுக்கு சட்ட அமலாக்க பிரிவு சிபிஐ எச்சரிக்கை விடுத்தது.


9.21ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் சராசரி வெப்பநிலை 4.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது எனவும் அலைகளின் தாக்கம் 3 முதல் 4 மடங்கு அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று பருவநிலை மாற்றம் தாக்கத்திற்கான மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


10.இனவெறிக்கு எதிராக உலக அளவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பிரிட்டனில் இனவெறிக்கு எதிராக புதிய ஆணையம் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.


11.தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாடு (நபார்டு) வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலக (புதுச்சேரி உட்பட) புதிய தலைமை பொது மேலாளர் எஸ்.செல்வராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார்.


12.பொது முடக்கத்தையொட்டி பாலினம் கண்டறியும் தடை சட்டத்தின் குறிப்பிட்ட சில விதிகளை அமல்படுத்துவதை ஜூன் 30 வரை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

1 கருத்து: