Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

தொழில் வளர்ச்சி(13Q), வேளாண்மை(10Q), நிலச் சீர்திருத்தங்கள் (5Q)

தொழில் வளர்ச்சி(13Q),



1. முதல் தொழிற் கொள்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
______ விடை : 1948



2. இறக்குமதியின் மதிப்பைக் காட்டிலும், ஏற்றுமதியின் மதிப்பு கூடுதலாக இருக்கும் பொழுது உள்ள வணிக நிலை
______ விடை : சாதகமான வணிக நிலை



3. FEMA (1947) கொள்கை இந்திய பொருளாதாரத்தில் எவ்விதம் உதவுகிறது?
I. வெளிநாட்டு கம்பெனிகளை கட்டுப்படுத்த
II. வெளிநாட்டு மூலபொருட்களை மாற்றுவதில் பாதுகாக்க
III. வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வரையறைகள் கொடுக்க
IV. வேலை வாய்ப்புகளை கட்டுப்படுத்த
______ விடை :I, II மற்றும் III மட்டும் 



4. கீழ்கண்டவைகளில் தவறான கூற்றை கண்டுபிடி?
a) எம்.ஜி. ராமசந்திரன் 1984ல் புகளூர் காகித ஆலையை ஆரம்பித்தார்
b) டி.என்.பி.எல்.புகளூர் காகித ஆலை ஆசியாவிலேயே மிகப் பெரியது
c) 2013ல் புகளூரில் 100 கோடியில் சிமெண்ட் ஆலை ஆரம்பிக்கப்பட்டது
d) புகளூர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
______ விடை : புகளூர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது



5. 'Big Push' என்ற கோட்பாட்டை உருவாக்கியவர்
______ விடை : ரோஷன்சியன் -ரோடன்



6. முன்னுரிமை மற்றும் வர்த்தக கட்டுப்பாட்டு நடைமுறை சட்டம் 1969 - க்கு பதிலாக எந்த சட்டம் உருவாக்கப்பட்டது?
______ விடை : போட்டி சட்டம் (2002)



7. C.சச்சார் ___________ ன் தொடர்புடையது?
______ விடை : எம்.ஆர்.டி. பி சட்டம்



8. தொழில்கள் நலிவு அடைவதற்கான புறக்காரணிகள்
I. மின் தட்டுப்பாடு
II. நிதி பிரச்சனைகள்
III. அரசின் கொள்கை மாற்றங்கள்
IV. அதிக கடன்
______ விடை : I மற்றும் III



9. கீழ்கண்டவற்றுள் புதிய தொழிற்கொள்கையின் நோக்கங்களை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முறைகள் யாவை?
(1) தொழில் உரிமம்
(2) அயல்நாட்டு முதலீடு
(3) அயல்நாட்டு வாணிபக் கொள்கை
(4) பொது துறை நிர்வாகம்
______ விடை :  (1), (2) மற்றும் (4) மட்டும்



10. தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயம் (LPG) மாதிரி வளர்ச்சியை துவங்கிய ஆண்டு
______ விடை : 1991



11. பிரதம மந்திரியின் முத்ரா யோஜனா (PMMY) அறிமுகப்படுத்தப்பட்ட நாள்
______ விடை : 8 ஏப்ரல், 2015



12. மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை திரும்பப் பெறுவதற்கான காரணங்கள்.
1. பொதுக் கடன் அளவை குறைத்தல்.
2. பொதுத்துறை நிறுவனங்களில் பயன்படாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ள பேரளவு பொது வளத்தினை மறு பயன்பாட்டுக்கு உட்படுத்தி, மிக அதிக சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கு பயன்படுத்துதல்..
குறியீடுகளில் இருந்து சரியான விடை காண் :
______ விடை : 1 மற்றும் 2



13. சர்வாதீன மற்றும் வணிக நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
______ விடை : 1969


வேளாண்மை(10Q),
வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு

14. இந்தியாவில் விவசாய விலைக்குழு எந்த வருடம் ஏற்படுத்தப்பட்டது?
______ விடை : 1965



15. இந்தியாவில் பசுமைப் புரட்சியை அறிமுகம் செய்தவர்கள் யார்?
______ விடை : M.S. சுவாமிநாதன் மற்றும் C. சுப்பிரமனியன்



16. பிரதம மந்திரி கிரிஸ் சின்சாயி திட்டம் (PMKSY) ன் நோக்கம் எதை அடைய வேண்டும்?
______ விடை : பாசன வசதி வயல்வெளி வரை அடைய நன்று திரட்டிய முதலீடு



17. அடிப்படையில் Dr. M. சுவாமிநாதன் ஒரு ________ ஆவார்.
______ விடை : வேளாண்மை விஞ்ஞானி



18. இந்திய ‘பசுமைப்புரட்சியின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்
______ விடை : முனைவர். எம். எஸ். சுவாமிநாதன்



19. கொடுக்கப்பட்ட கூற்றில் எது பிரதம மந்திரியின் பயிர் பாதுகாப்பு திட்டம் 2016-ன் சரியானது?
| வேளாண்மையை இயற்கை பேரழிவில் இருந்து காப்பது
II அடுத்த வருடத்திற்கு பயிர் செய்ய கடன் பெற தகுதியாதல்
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் எது சரியானது?
______ விடை :  I மற்றும் II



20. வேளாண்மை மானியம் என்றால் என்ன?
______ விடை : விவசாயின் உற்பத்திக்கும் அவனின் வருமானத்திற்க்கு ஆதரவாக அளிப்பது



21. வேளாண்மை விலை கொள்கையின் முக்கிய கருவியாக இருப்பது எது?
______ விடை :  குறைந்தபட்ச ஆதரவு விலை



22. இந்தியாவில் அதிக அளவு மறைமுக வேலையின்மை நிலவும் துறை எது?
______ விடை : வேளாண்மை



23. பின்வருவனவற்றுள், மத்திய அரசின் வேளாண் மற்றும் கூட்டுறவுத்துறையால் நடத்தப்படும் "விவசாயிகள் களப் பள்ளி" மூலம் ஒரு விவசாயி எத்தகைய அறிவினைப் பெற முடியும்
(a) மண், உரம் மற்றும் பயிர் மேலாண்மை பற்றிய முறைகள் மற்றும் பயிற்சி
(b) வங்கிக் கடனை எப்படிப் பெற முடியுமென்ற விவரம்
(c) நிலவள பற்றாக்குறைக்கான அறிகுறிகளைப் புரியும் அறிவு
______ விடை :  (a) மற்றும் (c)



24. நீல புரட்சி எந்த நோக்கத்திற்காக நடைமுறைபடுத்தப்படுகிறது?
______ விடை : மீனவர் மற்றும் மீன்பிடி தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக


25. வெண்மைப் புரட்சியின் தந்தை எனக் கருதப்படுபவர்
______ விடை : V. குரியன்


நிலச் சீர்திருத்தங்கள் (5Q)

26. கார்ன்வாலிஸ் பிரபு கொண்டு வந்தது
______ விடை : ஜமீன்தாரி முறை



27. முதல் ரய்யத்வாரி செட்டில்மென்ட் Madras -ல் ___________ ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது
______ விடை : 1972



28. இந்தியாவில் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முதன் முதலில் இடைத்தரகர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆண்டு.
______ விடை : 1948



29. நில உச்ச வரம்பு சட்டம் எல்லா மாநிலங்களிலும் இயற்றப்பட்ட ஆண்டு எது?
______ விடை :1961-62 



30. ஜமீந்தாரி முறை ஒழிப்பு மற்றும் நிலச்சீர்திருத்த சட்டத்தை அனைத்து இந்திய மாநிலங்களும் அமல்படுத்திய ஆண்டு எது?
______ விடை : 1952

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham