Type Here to Get Search Results !

தனிவட்டி (வட்டி வீதம்) Type - 2.3 (44 to 53 Questions)

Type - 2.3A
44) பின்வரும் வட்டி வீதத்தில் எது ₹ 2000 அசலுக்கு ஓராண்டுக்கு ₹ 200 ஐ தனிவட்டியாகக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்? (7th New Book Back) (20-04-2023 TNPSC)
(A) 10%
(B) 20%
(C) 5%
(D) 15%
Answer (A) 10%✔

45) ரூ.2000க்கு 2 ஆண்டுக்கு தனி வட்டி ரூ.120 எனில் வட்டி வீதம் எவ்வளவு? (2019 Group 8)
(A) 3℅
(B) 2℅
(C) 1℅
(D) 5℅
Answer (A) 3℅✔

46) ஒரு வங்கியானது சேமிப்பு தொகையாக வைக்கப்பட்ட ₹3,000க்கு 2 ஆண்டுகளுக்கு ₹ 240ஐ தனி வட்டியாக வழங்குகிறது எனில் அவ்வங்கி வழங்கும் வட்டி வீதத்தைக் காண்க. (07-05-2023 TNPSC)
(A) 3%
(B) 4%
(C) 5%
(D) 6%
Answer (B) 4%✔

47) ₹1,500-க்கு 3 ஆண்டுகளில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தனிவட்டிகளின் வித்தியாசம் ₹13.50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம் (2022 Group 4)
(A) 0.1%
(B) 0.2%
(C) 0.3%
(D) 0.4%
Answer (C) 0.3%✔

48) ரூபாய் 500க்கு 2 ஆண்டுகளில் இரண்டு வங்கிகளின் தனிவட்டிக்கான வித்தியாசம் ரூ. 2.50 எனில் அவ்வங்கிகளின் வட்டி வீதங்ளுக்கு இடையேயான வித்தியாசம் எவ்வளவு? (2019 TNPSC)
(A) 1%
(B) 0.5%
(C) 2.5%
(D) 0.25%
Answer (D) 0.25%✔

Type - 2.3B
49) ரூ. 4,000 ஆனது 4 ஆண்டுகளில் ரூ. 5,000 ஆகிறது எனில் கணக்கிடப்பட்ட தனிவட்டி விகிதம் யாது? (2013 VAO)
(A) 6 1/4%
(B) 6 %
(C) 5 1/2%
(D) 6 2/4%
Answer (A) 6 1/4%✔

50) பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ₹ 8,500 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் ₹ 11,050 ஐச் செலுத்திக் கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம் எவ்வளவு? (7th New Book)
(A) 10%
(B) 20%
(C) 5%
(D) 15%
Answer (A) 10%✔

51) தனிவட்டியின் கீழ் 60 ஆண்டுகளில் 1 ரூபாய், 9 ரூபாய் ஆக மாறுகிறது எனில், ஆண்டு வட்டி வீதம் % யாது? (06/11/2021 TNPSC)
(A) 15%
(B) 13 1/3%
(C) 12%
(D) 18%
Answer (B) 13 1/3%✔

52) கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 46,900 க்கு 2 ஆண்டுகளுக்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 53,466 எனில், வட்டி வீதத்தைக் காண்க (7th New Book) (10-03-2023 TNPSC)
(A) 5%
(B) 6%
(C) 7%
(D) 8%
Answer (C) 7%✔

53) இரவி என்பவர் ஒரு வங்கியில் தனிவட்டி முறையில் ₹ 13,500 கடனாகப் பெற்று 4 1/2 ஆண்டுகள் கழித்து ₹ 20,790 செலுத்தினால், கடனுக்கான வட்டி வீதம் எவ்வளவு? (07-03-2026 TNPSC)
(A) 12%
(B) 15%
(C) 20%
(D) 10%
Answer (A) 12%✔

Shortcut Video

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.