Type Here to Get Search Results !

பகடை (நிகழ்தகவு) Type - 3

Type -3
31) சீரான இரு பகடைகள் ஒரு முறை உருட்டப்படுகிறது எனில் முதல் பகடையில் 3ன் மடங்கு எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது? (2022 TNPSC)
(A) 1/3
(B) 1/2
(C) 1/6
(D) 2/9
Answer (A) 1/3✔

32) இரு பகடைகள் ஒரு சேர உருட்டப்படும்போது, முதல் பகடையில் 4ன் காரணிகள் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? (2019 TNPSC)
(A) 1/18
(B) 1/36
(C) 1/2
(D) 1/3
Answer (C) 1/2✔

33) இரு பகடைகள் ஒரு சேர உருட்டப்படும்போது, முதல் பகடையில் 6ன் காரணிகள் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன?
(A) 1/6
(B) 1/2
(C) 2/3
(D) 5/6
Answer (C) 2/3✔

34) இரு பகடைகள் உருட்டப்படும்போது கிடைக்கும் எண்களின் கூடுதல் 9 ஐ விடச் சிறியதாக இருக்க நிகழ்தகவு என்ன? (09-04-2023 TNPSC)
(A) 13/36
(B) 18/36
(C) 13/18
(D) 12/18
Answer (C) 13/18✔

35) இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. கிடைக்கப்பெறும் முக மதிப்புகளின் கூடுதல் 8ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க.
(A) 5/12
(B) 7/12
(C) 21/36
(D) 5/36
Answer (B) 7/12✔

36) இரு பகடைகள் ஒரு சேர உருட்டப்படுகின்றன. முக எண்களைக் கொண்டு அமைக்கப்படும் ஈரிலக்க எண் 4 ஆல் வகுபடும் எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க. (2024 TNPSC)
(A) 1/2
(B) 1/4
(C) 1/36
(D) 1/6
Answer (B) 1/4✔

37) இரு பகடைகள் ஒரு சேர உருட்டப்படுகின்றன. முக எண்களைக் கொண்டு அமைக்கப்படும் ஈரிலக்க எண் 3 ஆல் வகுபடும் எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க.
(A) 1/6
(B) 1/4
(C) 1/3
(D) 1/12
Answer (C) 1/3✔

38) இரண்டு சீரான பகடைகள் முறையாக ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன இரண்டு பகடைகளிலும் ஒரே ஒற்றை முக மதிப்புகள் கிடைக்க நிகழ்த்தகவு காண்க (09-11-2024 TNPSC)
(A) 1/36
(B) 2/12
(C) 3/24
(D) 1/12
Answer (D) 1/12✔

39) இரண்டு பகடைகள் ஒரு முறை உருட்டப்படுகின்றன. முதல் பகடையில் முக மதிப்பு இரட்டைப் படை எண் அல்லது முக மதிப்புகளின் கூடுதல் 8 ஆகக் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க. (10th New Book)
(A) 1/2
(B) 5/9
(C) 23/36
(D) 11/18
Answer (B) 5/9✔

42) இரண்டு பகடைகள் ஒரு முறை உருட்டப்படுகின்றன. முதல் பகடையில் முக மதிப்பு இரட்டைப் படை எண் அல்லது முக மதிப்புகளின் கூடுதல் 4 ஆகக் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
(A) 1/18
(B) 19/36
(C) 5/9
(D) 1/2
Answer (C) 5/9✔

42A) இரண்டு பகடைகள் ஒரு முறை உருட்டப்படுகின்றன. முதல் பகடையில் முக மதிப்பு ஒற்றைப் படை எண் அல்லது முக மதிப்புகளின் கூடுதல் 8 ஆகக் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
(A) 19/36
(B) 5/9
(C) 7/12
(D) 1/2
Answer (C) 7/12✔

40) இரண்டு முறையான பகடைகள் உருட்டப்படும் பொழுது, முக மதிப்புகளின் பெருக்கல் 6 ஆகவோ அல்லது முக மதிப்புகளின் வித்தியாசம் 5 ஆகவோ இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க? (10th New Book), (2025 Group 4)
(A) 1/12
(B) 5/36
(C) 1/9
(D) 7/36
Answer (C) 1/9✔

41) இரண்டு முறையான பகடைகள் உருட்டப்படும் பொழுது, முக மதிப்புகளின் பெருக்கல் 4 ஆகவோ அல்லது முக மதிப்புகளின் வித்தியாசம் 3 ஆகவோ இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
(A) 1/4
(B) 7/36
(C) 5/36
(D) 1/6
Answer (B) 7/36 ✔

Shortcut Video

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.