Type Here to Get Search Results !

Time and Work Type - 7

Type – 7A.1
51) P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 மற்றும் 40 நாட்களில் முடிப்பர். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வேலையை தொடங்கினர். சில நாட்கள் வேலை செய்த பிறகு Q என்பவர் சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை P என்பவர் 8 நாட்களில் முடிக்கிறார் எனில் தொடங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்குப் பிறகு வேலையை விட்டுச் சென்றார்? (2025 Group 4)
(A) 9 நாட்கள்
(B) 10 நாட்கள்
(C) 8 நாட்கள்
(D) 11 நாட்கள்
Answer (C) 8 நாட்கள்✔

52) A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை முறையே 12 மற்றும் 20 நாட்களில் முடிப்பர். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வேலையைத் தொடங்கினர். சில நாட்கள் வேலை செய்தபிறகு B சென்று விடுகிறார். மீதமுள்ள வேலையை A ஆனவர் 4 நாட்களில் முடிக்கிறார் எனில் தொடங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்கு பிறகு B வேலையை விட்டு சென்றனர். (2024 TNPSC)
(A) 8
(B) 7
(C) 6
(D) 5
Answer (D) 5✔

53) P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 மற்றும் 30 நாள்களில் முடிப்பர் அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வேலையைத் தொடங்கினர். சில நாள்கள் வேலை செய்த பிறகு Q ஆனவர் சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை P ஆனவர் 5 நாள்களில் முடிக்கிறார் எனில், தொடங்கியதிலிருந்து எத்தனை நாள்களுக்கு பிறகு Q வேலையை விட்டுச் சென்றார்? (8th New Book)
(A) 6 நாள்கள்
(B) 7 நாள்கள்
(C) 8 நாள்கள்
(D) 9 நாள்கள்
Answer (D) 9 நாள்கள்✔

54) ஒரு வேலையை சீதா 15 நாட்களிலும் கீதா 10 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். இருவரும் சேர்ந்து வேலை தொடங்கியதும் சில நாட்களுக்குப் பிறகு சீதா சென்று விட்டால் மீதம் உள்ள வேலையை கீதா 5 நாட்களில் முடித்தாள் என்றால் சீதா எவ்வளவு நாட்கள் கழித்து சென்றிருப்பார் (2017 Group 8)
(A) 3
(B) 6
(C) 8
(D) 10
Answer (A) 3✔

55) P மற்றும் Q ஒரு வேலையை முடிக்க முறையே 5 மற்றும் 10 நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர். இருவரும் ஒன்றாக ஒரு வேலையைச் செய்யத் தொடங்குகின்றனர். ஆனால் P சில நாட்களுக்குப் பிறகு அந்த வேலையை விட்டு விலகுகிறார். மீதி வேலையை Q என்பவர் 4 நாட்களில் முடிக்கிறார் என்றால் எத்தனை நாட்களுக்குப் பிறகு P வேலையை விட்டு சென்றிருப்பார்?
(A) 4
(B) 3
(C) 2
(D) 1
Answer (C) 2✔

Type – 7A.2
56) A மற்றும் B ஆகியோர்கள் ஒரு வேலையை முறையே 20 நாட்கள் மற்றும் 30 நாட்களில் செய்து முடிப்பார். அவர்கள் இருவரும் இணைந்து வேலை செய்ய தொடங்குகிறார்கள் வேலை முடிவதற்கு 5 நாட்களுக்கு முன்பாகவே நின்று விடுகிறார் B தனியாக வேலை செய்து அந்த வேலையை முடிக்கிறார் எனில் அந்த வேலை எத்தனை நாட்களில் முடிவடையும் (2019 TNPSC)
(A) 15
(B) 18
(C) 12
(D) 20
Answer (A) 15✔

56A) தீபா மற்றும் அருண் ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 நாட்கள் மற்றும் 30 நாட்களில் செய்து முடிப்பர். அவர்கள் இருவரும் இணைந்து வேலை செய்ய தொடங்குகின்றனர். தீபா வேலை முடிவதற்கு 5 நாட்கள் முன்னதாக நின்று விடுகிறார். அருண் தனியாக வேலை செய்து அந்த வேலையை முடிக்கிறார் எனில் அந்த வேலை எத்தனை நாட்களில் முடிவடையும்? (2018 TNPSC)
(A) 15 நாட்கள்
(B) 18 நாட்கள்
(C) 12 நாட்கள்
(D) 20 நாட்கள்
Answer (A) 15 நாட்கள்✔

Type - 7B
69) ஒரு வேலையை 18 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 15 நாட்களில் செய்வார். B அந்த வேலையை 10 நாட்கள் செய்துவிட்டு விலகுகிறார் எனில், A மட்டும் மீதமுள்ள வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்? (2016 Group 8)
(A) 5 நாட்கள்
(B) 5 ½ நாட்கள்
(C) 6 நாட்கள்
(D) 8 நாட்கள்
Answer (C) 6 நாட்கள்✔

70) A, B இருவரும் ஒரு வேலையை முறையே 12 நாட்கள், 18 நாட்களில் முடிப்பார்கள் 4 நாள் வேலை பார்த்த பிறகு A நீங்கி விடுகிறார். மீதி வேலையை B மட்டும் முடிக்கிறார் எனில் அவ்வேலையை முழுவதும் முடிக்க ஆகும் நாட்கள் (2017 Group 1)
(A) 30
(B) 20
(C) 12
(D) 8
Answer (C) 12✔

71) X மற்றும் Y முறையே ஒரு வேலையை 40 மற்றும் 60 நாட்களில் தனித்தனியாக செய்து முடிப்பார்கள். 8 நாள் வேலை பார்த்த பிறகு X என்பவர் விலகி விடுகிறார் அந்த வேலையை முடிக்க Y எவ்வளவு நாட்கள் ஆகும் (2017 TNPSC)
(A) 42
(B) 44
(C) 48
(D) 40
Answer (C) 48 ✔

Shortcut Video


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.