Type Here to Get Search Results !

Time and Work Type - 8

Type – 8.1
57) A, B மற்றும் C இவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்க எடுக்கும் கால அளவுகள் முறையே, 24, 6 மற்றும் 12 நாட்கள் எனில் இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு? (2016 TNPSC)
(A) 3 3/7 நாட்கள்
(B) 4 2/7 நாட்கள்
(C) 10 3/7 நாட்கள்
(D) 12 1/4 நாட்கள்
Answer (A) 3 3/7 நாட்கள்✔

58) ஒரு வேலையை A, B, C மூவரும் சேர்ந்து 4 நாட்களில் செய்து முடிப்பர். அந்த வேலையை A 12 நாட்களிலும், B. 18 நாட்களிலும் செய்து முடிப்பார்களேயானால், C மட்டும் அந்த வேலையை செய்து முடிக்க ஆகும் நாட்கள் (TNPSC - 2007; 2013 Group 2)
(A) 21 நாட்கள்
(B) 16 நாட்கள்
(C) 14 நாட்கள்
(D) 9 நாட்கள்
Answer (D) 9 நாட்கள் ✔

59) A, B, C என்ற மூன்றுபேர் சேர்ந்து ஒரு கம்பளி நெய்ய 4 நாட்கள் ஆகிறது. அந்த வேலையை A தனியாக 12 நாட்களிலும், B தனி யாக 10 நாட்களிலும் செய்து முடிப்பர் எனில், C தனியாக அந்த வேலையை முடிக்க ஆகும் நாட்கள்
(A) 8
(B) 10
(C) 12
(D) 15
Answer (D) 15✔

Type – 8.2
60) ஒரு வேலையை A மற்றும் B 12 நாட்களிலும், B மற்றும் C 15 நாட்களிலும் C மற்றும் A 20 நாட்களிலும் செய்தால், மூவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நாட்கள். (2014 Group 1), (2020, 2022 TNPSC)
(A) 5
(B) 10
(C) 15
(D) 20
Answer (B) 10✔

61) ஒரு வேலையை A மற்றும் B 8 நாட்களிலும், B மற்றும் C 12 நாட்களிலும் C மற்றும் A 24 நாட்களிலும் செய்து முடிப்பர் எனில், மூவரும் சேர்ந்து அவ்வேலையை எவ்வளவு நாட்களில் செய்து முடிப்பர்? (2014 Group 1 DEO)
(A) 4 நாட்கள்
(B) 6 நாட்கள்
(C) 7 நாட்கள்
(D) 8 நாட்கள்
Answer (D) 8 நாட்கள்✔

62) ஒரு வேலையை A யும் B யும் சேர்ந்து 6 நாட்களிலும், Bயும் Cயும் சேர்ந்து 12 நாட்களிலும், C யும் A யும் சேர்ந்து 4 நாட்களிலும் முடிப்பர் எனில், அவர்கள் மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிக்க இயலும். (2016 Group 1)
(A) 8 நாட்கள்
(B) 4 நாட்கள்
(C) 10 நாட்கள்
(D) 2 நாட்கள்
Answer (B) 4 நாட்கள்✔

63) A மற்றும் B ஒரு வேலையை 12 நாட்களில் செய்ய முடியும் B மற்றும் C 15 நாட்களிலும் C மற்றும் A 20 நாட்களிலும் செய்ய முடியுமென்றால் அவர்கள் எத்தனை நாட்களில் அதை ஒன்றாக செய்து முடிப்பார்கள்?
(A) 6 நாட்கள்
(B) 8 நாட்கள்
(C) 10 நாட்கள்
(D) 18 நாட்கள்
Answer (C) 10 நாட்கள் ✔

64) ஒரு வேலையை A-யும் B-யும் சேர்ந்து 10 நாட்களிலும், B-யும் C-யும் சேர்ந்து 15 நாட்களிலும் C-யும் A-யும் சேர்ந்து 18 நாட்களிலும் முடிப்பர் எனில் மூவரும் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? (2022 TNPSC)
(A) 8 நாட்கள்
(B) 9 நாட்கள்
(C) 10 நாட்கள்
(D) 11 நாட்கள்
Answer (B) 9 நாட்கள்✔

Type – 8.3
65) A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை 12 நாள்களிலும் B மற்றும் C ஆகியோர் அதை 15 நாள்களிலும் A மற்றும் C ஆகியோர் அதை 20 நாள்களிலும் முடிப்பர். ஒவ்வொருவரும் தனித்தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர்? (8th New Book) (2019, 2021, 2022 TNPSC)
(A) A- 30 நாள்கள், B -20 நாள்கள், C-60 நாள்கள்
(B) A- 20 நாள்கள், B -30 நாள்கள், C-60 நாள்கள்
(C) A- 30 நாள்கள், B -60 நாள்கள், C-20 நாள்கள்
(D) A- 60 நாள்கள், B -20 நாள்கள், C-30 நாள்கள்
Answer (A) A- 30 நாள்கள், B -20 நாள்கள், C-60 நாள்கள்✔

66) A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை 12 நாட்களிலும் B மற்றும் C ஆகியோர் அதை 15 நாட்களிலும் A மற்றும் C ஆகியோர் அதை 20 நாட்களிலும் முடிப்பர் B என்பவர் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? (2023 TNPSC)
(A) 10 நாட்கள்
(B) 15 நாட்கள்
(C) 30 நாட்கள்
(D) 20 நாட்கள்
Answer (D) 20 நாட்கள்✔

67) ஒரு வேலையை Aயும், Bயும் சேர்ந்து 12 நாட்களிலும், Bயும், Cயும் சேர்ந்து 15 நாட்களிலும், Cயும், Aயும் சேர்ந்து 20 நாட்களிலும் செய்து முடிப்பர் எனில், A மட்டும் தனியாக அவ்வே லையை முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை (2001 TNPSC)
(A) 15 1/2 நாட்கள்
(B) 24 நாட்கள்
(C) 30 நாட்கள்
(D) 40 நாட்கள்
Answer (C) 30 நாட்கள்✔

68) ஒரு வேலையை A மற்றும் B 10 நாட்களிலும், B மற்றும் C 15 நாட்களிலும், C மற்றும் A 18 நாட்களிலும் செய்து முடிப்பர் எனில், B மட்டும் தனியாக அவ்வேலையை செய்துமுடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை? (2013 Group 4)
(A) 30 நாட்கள்
(B) 20 நாட்கள்
(C) 12 நாட்கள்
(D) 18 நாட்கள்
Answer (D) 18 நாட்கள்✔

72) A என்பவர் ஒரு வேலையின் 1/2 பகுதியை 5 நாட்களில் முடிப்பார். B என்பவர் அதே வேலையின் 3/5 பகுதியை 9 நாட்களில் முடிப்பார். C என்பவர் அதே வேலையின் 2/3 பகுதியை 8 நாட்களில் முடிப்பார். மூவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால், அவ்வடையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
(A) 5 நாட்கள்
(B) 4 1/2 நாட்கள்
(C) 4 நாட்கள்
(D) 5 1/2 நாட்கள்
Answer (C) 4 நாட்கள்✔

Shortcut Video


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.