Type Here to Get Search Results !

Time and Work Type - 4

Type - 4.1
33) A என்பவர் B ஐப் போல் இரு மடங்கு வேலை செய்பவர். மேலும் அவர்கள் இருவரும் இணைந்து ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில் A மட்டும் அவ்வேலையை முடிக்க எத்தனை நாட்களாகும்? (08-10-2022 TNPSC)
(A) 36 நாட்கள்
(B) 48 நாட்கள்
(C) 30 நாட்கள்
(D) 32 நாட்கள்
Answer (A) 36 நாட்கள்✔

34) A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர். B ஆனவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில், இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வர் எனக் காண்க. (12-03-2022 TNPSC), (2022 Group 7), (8th New Book)
(A) 5 நாட்கள்
(B) 6 நாட்கள்
(C) 8 நாட்கள்
(D) 9 நாட்கள்
Answer (B) 6 நாட்கள்✔

35) அமுதா ஒரு சேலையை 18 நாள்களில் நெய்வார், அஞ்சலி, அமுதாவை விட நெய்வதில் இருமடங்கு திறமைசாலி. இருவரும் இணைந்து நெய்தால், அந்தச் சேலையை எத்தனை நாட்களில் நெய்து முடிப்பர்? (2022 Group 8), (07-01-2024 TNPSC), (8th New Book)
(A) 9 நாட்கள்
(B) 6 நாட்கள்
(C) 5 நாட்கள்
(D) 4 நாட்கள்
Answer (B) 6 நாட்கள்✔

36) பாபு ஒரு சேலையை 24 நாட்களில் நெய்வார். ரமேஷ் பாபுவை விட நெய்வதில் இருமடங்கு திறமைசாலி. இருவரும் இணைந்து நெய்தால், அந்த சேலையை எத்தனை நாட்களில் நெய்து முடிப்பார்கள்? (22-02-2025 TNPSC)
(A) 10
(B) 12
(C) 8
(D) 24
Answer (C) 8✔

37) A ஒரு வேலையை 18 நாட்களில் முடிக்கிறார். B அதே வேலையை முடிக்க A எடுக்கும் நாட்களில் பாதியை எடுக்கிறார் எனில் இருவரும் சேர்ந்து ஒரு நாளில் முடிக்கும் வேலையின் அளவு என்ன? (2022 Group 1)
(A) 1/9
(B) 1/6
(C) 2/7
(D) 2/5
Answer (B) 1/6✔

Type - 4.2
38) ஒரு வேலைக்காரராக A என்பவர் B என்பவரைவிட மும்மடங்கு கெட்டிக்காரர் மற்றும் A என்பவர் ஒரு வேலையை முடிக்க B-ஐ விட 10 நாட்கள் குறைவாக எடுத்துக் கொள்கிறார் எனில் B மட்டும் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (21-11-2021 TNPSC)
(A) 12 நாட்கள்
(B) 15 நாட்கள்
(C) 20 நாட்கள்
(D) 30 நாட்கள்
Answer (B) 15 நாட்கள்✔

39) A ஆனவர் B ஐக் காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்டநேரத்தை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க. (24-04-2022 TNPSC), (28-05-2022 TNPSC), (19-06-2022 TNPSC), (2022 Group 7), (07-05-2023 TNPSC), (8th New Book)
(A) 12 நாட்கள்
(B) 36 நாட்கள்
(C) 9 நாட்கள்
(D) 15 நாட்கள்
Answer (C) 9 நாட்கள்✔

40) A ஆனவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் 5 மடங்கு வேகமானவர். அவரால் அந்த வேலையை B எடுத்துக்கொண்ட நேரத்தை விட 40 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க் ஆகம் நேரத்தைக்காண்க. (09-11-2024 TNPSC)
(A) 8 1/3 நாட்கள்
(B) 8 1/2 நாட்கள்
(C) 8 1/4 நாட்கள்
(D) 8 1/5 நாட்கள்
Answer (A) 8 1/3 நாட்கள்✔

Home Work
1) A, B ஐப் போல இரண்டு மடங்கு திறமையான நல்ல வேலையாள் அவர்கள் இருவரும் ஒரு வேலையை 18 நாட்களில் முடிக்கிறார்கள். A மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (2017 TNPSC)
(A) 26
(B) 27
(C) 25
(D) 24
Answer (B) 27✔

Shortcut Video


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.