26) ஒரு புத்தகக் கடையிலுள்ள 70 பத்திரிகைகளில் 14 பத்திரிகைகள் நகைச்சுவை பத்திரிகைகள் எனில், நகைச்சுவை பத்திரிகைகளின் சதவீதம் காண்க. [7th New Book]
(A) 10%
(B) 20%
(C) 30%
(D) 40%
27) ஒரு தேர்வில் யாழினி 25 இக்கு 15 மதிப்பெண்கள் பெற்றாள் எனில், அதன் சதவீதம் காண்க. [7th New Book]
(A) 70%
(B) 60%
(C) 80%
(D) 30%
28) குமரன் ஆண்டுக்கு 9 மாதங்கள் வேலை செய்கிறார் எனில், அந்த ஆண்டில் அவர் எவ்வளவு சதவீதம் வேலை செய்தார் என்பதைக் கணக்கிடுக. [7th New Book]
(A) 75%
(B) 35%
(C) 50%
(D) 80%
29) இஸ்மாயில் என்பவர் சில வகையான மணிகளை வாங்குவதற்காகச் சரக்கு அனுப்பாணையை அனுப்பினார். மொத்தம் 50 மணிகளில் 15 மணிகள் மட்டுமே பழுப்பு நிறம் எனில், பழுப்பு நிற மணிகளின் சதவீதத்தைக் காண்க. [7th New Book]
(A) 70%
(B) 60%
(C) 80%
(D) 30%
30) ஒரு பள்ளியில் மொத்தமுள்ள 120 ஆசிரியர்களில் 60 ஆசிரியர்கள் ஆண்கள் எனில், ஆண் ஆசிரியர்களின் சதவீதத்தைக் காண்க. [7th New Book]
(A) 70%
(B) 60%
(C) 80%
(D) 50%
31) ஒரு மட்டைப் பந்து (கிரிக்கெட்) அணி ஒரு வருடத்தில் 70 போட்டிகளில் வெற்றியும் 28 போட்டிகளில் தோல்வியும் 2 போட்டிகளில் முடிவு ஏதுமில்லை எனவும் இருந்தால் அணியின் வெற்றிச் சதவீதத்தைக் கணக்கிடுக. [7th New Book]
(A) 70%
(B) 60%
(C) 80%
(D) 50%
32) ஒரு தொடர்வண்டியில் பயணச்சீட்டின் முழுக்கட்டணம் ₹200 சலுகை அட்டை வைத்திருப்பவர்களுக்கு ₹ 120 இக்கு டிக்கெட் வழங்கப்பட்டால், சலுகை அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடிச் சதவீதத்தைக் காண்க. [7th New Book]
(A) 40%
(B) 60%
(C) 80%
(D) 50%
33) ஓர் உயிரியல் வகுப்பு மாணவர்கள் குழு உள்ளுரிலுள்ள ஒரு புல்வெளியில் ஆய்வு செய்தனர். அவற்றுள் 40 இல் 30 பூக்கள் வற்றாதவை எனில், வற்றாத பூக்களின் சதவீதம் காண்க. [7th New Book]
(A) 75%
(B) 60%
(C) 80%
(D) 25%
34) இனியன் 5 டசன் முட்டைகளை வாங்கினார். அதில் 10 முட்டைகள் கெட்டுவிட்டால் நல்ல முட்டைகளின் சதவீதத்தைக் காண்க.[7th New Book]
(A) 1.2%
(B) 83.33%
(C) 8.33%
(D) 10%
35) கயல் 5 டசன் முட்டைகளை வாங்கினார். அதில் 45 முட்டைகள் நல்ல முட்டைகள் எனில் கெட்டுவிட்ட முட்டைகளின் சதவீதத்தைக் காண்க? (2024 Group 4)
(A) 45%
(B) 35%
(C) 25%
(D) 15%
36) கயல் என்பவர் முதல் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 225 மதிப்பெண்களும் இரண்டாம் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 265 மதிப்பெண்களும் பெற்றார் எனில், அவரது மதிப்பெண்கள் அதிகரிப்பின் சதவீதத்தைக் காண்க. [7th New Book]
(A) 45%
(B) 53%
(C) 8%
(D) 10%
37) கவின் 25 இக்கு 15 மதிப்பெண்களைப் பெற்றால் அதன் சதவீதம் [7th New Book Back]
(A) 60%
(B) 15%
(C) 25%
(D) 15/25
38) மலர் 25 மீட்டர் துணிச் சுற்றலிருந்து 1.75 மீட்டர் துணியை வாங்கினார் எனில், மலர் வாங்கிய துணியின் அளவைச் சதவீதத்தில் கூறுக? (7th New Book)
(A) 5%
(B) 6%
(C) 7%
(D) 10%
39) ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள். பள்ளியிலுள்ள மாணவர்களின் சதவீதம் _________ஆகும். [11-01-2022 TNPSC]
(A) 30%
(B) 70%
(C) 50%
(D) 80%

minnal vega kanitham