Type Here to Get Search Results !

Percentage Class - 2

Quiz Program

15) ஒரு தேர்வில், 40 மாணவர்கள் கணித பாடத்திலும், 25 மாணவர்கள் இயற்பியல் பாடத்திலும் மற்றும் 10 மாணவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய இரண்டிலும் தேர்ச்சி அடைந்துள்ளனர். எனில், தேர்வில் பங்கு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை யாது ? (2023 TRB BEO)

(A) 35

(B) 75

(C) 55

(D) 25

16) ஒரு தேர்வில் மொத்த மாணவர்களில் 35% பேர் இந்தியிலும், 45% பேர் ஆங்கிலத்திலும் மற்றும் 20% பேர் இரண்டிலும் தோல்வியுற்றனர் எனில், ஏதேனும் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்களின் சதவீத மதிப்பு?

(A) 60%

(B) 40%

(C) 50%

(D) 30%

17) ஒரு தேர்வில் 34% மாணவர்கள் கணிதத்திலும், 42% மாணவர்கள் ஆங்கிலத்திலும், 20% மாணவர்கள் இரண்டிலும் தோல்வியடைந்தனர் எனில், ஏதேனும் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்களின் சதவீத மதிப்பு

(A) 44%

(B) 50%

(C) 54%

(D) 56%

18) ஒரு தேர்வில் 35% பேர் பொது அறிவியலிலும், 25% பேர் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெறவில்லை. 10% பேர் இரண்டிலும் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்ச்சி பெற்றவர்களின் சதவீத மதிப்பு (TNPSC-GI-2003)

(A) 40%

(B) 45%

(C) 48%

(D) 50%

19) ஒரு நகரத்தில் வசிப்பவர்களில் 60% அரிசி சாப்பிடுபவர்கள் 50%, கோதுமை சாப்பிடுபவர்கள் 20%. இரண்டையும் சாப்பிடக்கூடிய வர்கள் எனில், இந்த இரண்டையும் சாப்பிடாதவர்கள் எத்தனை சதவீதம்? (1999 Group 1)

(A) 15%

(B) 10%

(C) 12%

(D) 8%

20) ஒரு தேர்வில் 30% மாணவியர் ஆங்கிலத்திலும், 40% மாணவியர் இந்தியிலும் 20% இரண்டிலும் தேர்ச்சி பெறவில்லை எனில், இரண்டு பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவியரின் சதவீதம்? (2013 Group 4)

(A) 50%

(B) 20%

(C) 10%

(D) 60%

21) P இன் வருமானம் Q ஐக் காட்டிலும் 25% அதிகம் எனில், Q இன் வருமானம் P ஐக் காட்டிலும் எத்தனை சதவிகிதம் குறைவு? (8th New Book) (2021 TNPSC)

(A) 25%

(B) 10%

(C) 20%

(D) 12%

22) Aஇன் வருமானம், Bஇன் வருமானத்தை விட 10% அதிகம் எனில், Bஇன் வருமானம், Aஇன் வருமானத்தை விட எவ்வளவு சதவீதம் குறைவு? (1999 Group 1)

(A) 9 1/11%

(B) 10 1/11%

(C) 11%

(D) 13%

23) Aயின் உயரமானது, Bயின் உயரத்தில் 25% குறைவாக உள்ளது எனில், Bயின் உயரம், Aயின் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது? (2013 Group 2), (18-11-2024 TNPSC)

(A) 50%

(B) 45%

(C) 22 1/3%

(D) 33 1/3%

24) ஒரு நபரின் ஊதியம் 10% குறைக்கப்பட்டது குறைக்கப்பட்ட ஊதியத்தை முதலில் வாங்கிய ஊதியத்திற்கு சமமாக உயர்த்துவதற்கு ஊதியத்தில் எத்தனை விழுக்காடு உயர்த்தப்பட வேண்டும்? (2018 TNPSC)

(A) 11 1/9%

(B) 10 1/9%

(C) 12%

(D) 12 1/9%

25) Aஇன் வருமானம், Bஇன் வருமானத்தைவிட 20% குறைவாக உள்ளது எனில், Bஇன் வருமானம், Aஇன் வருமானத்தை விட எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது? (2014 Group 2)

(A) 24%

(B) 25%

(C) 20%

(D) 22%

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.