Type Here to Get Search Results !

8th தமிழ் இயல் 4 பல்துறைக் கல்வி (திரு. வி. க.) 2025 TNTET Paper -1, 2


நூல் வெளி
திரு.வி.க. என்று அனைவராலும் குறிப்பிடப்படும் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்; சிறந்த மேடைப் பேச்சாளர்:
 ● தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர்.
 ● இவர் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
● இவரது இளமை விருந்து என்னும் நூலிலிருந்து சிலபகுதிகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

தெரிந்து தெளிவோம்

ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும்
இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும்
வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த
விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில்
- குலோத்துங்கன்


● கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும். - விஜயலட்சுமி பண்டிட்
ஐ. நா. அவையின் முதல் பெண் தலைவர்

பல்துறைக்-கல்வி
1. கேடில் விழுச்செல்வம் எது? கல்வி
2. மனிதன் விலங்கிலிருந்து மாறுபட்டு உயர்ந்து நிற்பதற்கு அடிப்படையாய் விளங்குவது எது? கல்வி
3. மனித சமுதாயத்தில் வளர்ச்சியிலும் அதைச் சீர்திருத்தி இட்டுச் செல்வத்திலும் ----- பெரும்பங்கு வகிக்கிறது? கல்வி
4. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது எது? கல்வி
5. கல்வி பயிற்சிக்கு உரிய பருவம் எது? இளமை
6. எட்டடுக்கல்வியுடன் நாம் எதை பெற வேண்டும்? தொழிற்கல்வி
7. ஐ. நா அவையின் முதல் பெண் தலைவர்? விஜயலட்சுமி பண்டிட்
8. "கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று, அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்" என கூறியவர்? விஜயலட்சுமி பண்டிட்
9. வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் ஒன்று? காவிய இன்பம்
10. தாய்மொழி வழியாக கல்வி பெறுதல் சிறப்பு என்று கூறியவர் யார்? திரு. வி. க
11. தமிழை வளர்க்கும் முறையில் எதைக் கலப்பு கொள்வது சிறப்பு என்று திரு. வி. க கூறுகிறார்? பிற மொழிகளின் அறிவுக் கலை நூல்களை தமிழ் மொழிபெயர்த்து
12. திரு. வி. கஇயற்கை ஓவியம் என்று எந்த நூலை கூறுகிறார்? பத்துப்பாட்டு 13. திரு. வி. க இயற்கை இன்பக்கலம் என்று எந்த நூலை கூறுகிறார்? கலித்தொகை
14. திரு. வி. க இயற்கை வாழ்வில்லாம் என்று எந்த நூலைக் கூறுகிறார்? திருக்குறள்
15. திரு. வி. க இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் என்று எந்த நூலை கூறுகிறார்? சிலப்பதிகாரம். மணிமேகலை
16. திரு. வி. க இயற்கை தவம் என்று எந்த நூலைக் கூறுகிறார்? சிந்தாமணி
17. திரு. வி. க இயற்கை அன்பு என்று எந்த நூலைக் கூறுகிறார்? பெரியபுராணம்
18. திரு. வி. க இயற்கை பரிணாமம் என்று எந்த நூலைக் கூறுகிறார்? கம்பராமாயணம்
19. திரு. வி. க இயற்கை இறையுறையுள் என்று எந்த நூலைக் கூறுகிறார்? தேவார, திருவாசக, திருவாய் மொழிகள்
20. தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது என கூறியவர்? திரு. வி. க
21. தமிழ் இன்பத்திலும் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ என்றுக் கூறியவர் யார்? திரு. வி. க
22. தமிழ் காவியங்களை படியுங்கள் இன்பன் நுகருங்கள் என்றவர் யார்? திரு. வி. க
23. இயற்கை கோலத்தை எழுத்தோவியத்தில் இறக்கிய சங்கப் புலவர்கள் யார்? இளங்கோ, திருத்தக்கதேவர், திருநானசம்பந்தர், ஆண்டாள் சேக்கிழார், கம்பர், பரன்சோதி
24. ஏடன்று கல்வி, சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி, பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி, ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி, அது வளர்ச்சி வாயில் என கூறியவர் யார்? குலோத்துங்கள்
25. கொடிய காட்டு வேழங்களை யாருடைய யாழ் மயங்கச் செய்யும்? பாணர் 26. நாடகத்தை நல்வழிப்படுத்தி மாணாக்கரை அதன்கண் தலைப்படுமாறு செய்யத் தமிழ்ப் பெரியோர் முயல்வாராக என கூறியவர்? திரு. வி. க
27. உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது? அறிவியல் என்னும் அறிவுக்கலை
28. புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் ----- போன்றது? கொழுகொம்பு
29. அரசியல், சமுதாயம், சமயம் தொழிலாளர் நலன் என்ப பல துறைகளில் ஈடுபாடு கொன்டவர் யார்? திரு. வி. க
30. சிறந்த மேடைப் பேச்சாளர் யார்? திரு. வி. க.
31. சிறந்த மேடைப் பேச்சாளர் யார்? திரு, வி, க
32. தமிழ் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்? திரு, வி, க
33. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு போன்ற நூல்களை எழுதியவர் யார்? திரு, வி, க
34. அறியாமை நீக்கி அறிவை விளக்குவது எது? கல்வி
35. கல்விப் பயிற்ச்சிக்குரிய பருவம் எது? இளமை
36. இன்றைய கல்வி ----- நூழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது? தொழிலில்
37. கலப்பில் ----- உண்டென்பது இயற்கை நுட்பம் என்ன? வளர்ச்சி
38. புற உலக ஆராய்ச்சிக்கு ----- கொழுகொம்பு போன்றது? அறிவியல்
39. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது ----- இன்பம் ஆகும்? காவிய

Book Back

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது -------------
    (A) விளக்கு
    (B) கல்வி
    (C) விளையாட்டு
    (D) பாட்டு
    [விடை : (B) கல்வி]


  1. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ----------
    (A) இளமை
    (B) முதுமை
    (C) நேர்மை
    (D) வாய்மை
    [விடை : (A) இளமை]


  1. இன்றைய கல்வி -------- நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
    (A) வீட்டில்
    (B) நாட்டில்
    (C) பள்ளியில்
    (D) தொழிலில்
    [விடை : (D) தொழிலில்]

நிரப்புக.

1. கலப்பில் வளர்ச்சிஉண்டென்பது இயற்கை நுட்பம்

2. புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.

3. வாழ்விற்குரிய இன்பத் துறைகளில் தலையாயது காவிய இன்பம் ஆகும்.

 பொருத்துக.

1. இயற்கை ஓவியம் – அ) சிந்தாமணி

2. இயற்கை தவம் – ஆ) பெரிய புராணம்

3. இயற்கைப் பரிணாமம் – இ) பத்துப்பாட்டு

4. இயற்கை அன்பு – ஈ) கம்பராமாயணம்

விடை

1. இயற்கை ஓவியம் – இ) பத்துப்பாட்டு

2. இயற்கை தவம் – அ) சிந்தாமணி

3. இயற்கைப் பரிணாமம் – ஈ) கம்பராமாயணம்

4. இயற்கை அன்பு – ஆ) பெரிய புராணம்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.