| நூல் வெளி |
|---|
|
● நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று. ● இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது. ● கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது. ● சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. ● நீலகேசிக் காப்பியத்தின் தருமவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன. |
| 8th நோயும் மருந்தும் (நீலகேசி) |
|---|
|
1. மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவது? நோய்கள்
2. "போர்த்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி தீர்தற்குஉரிய திரியோக மருந்துஇவை"என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்? நீலகேசி 3. தீர்வன என்பதன் பொருள் என்ன? நீங்குபவை 4. உவசமம் என்பதன் பொருள் என்ன? அடங்கி இருத்தல் 5. நிழல்இகழும் என்பதன் பொருள் என்ன? ஒளிபொருந்திய 6. பேர்தற்கு என்பதன் பொருள் என்ன? அகற்றுவதற்கு 7. திரியோகமருந்து என்பதன் பொருள் என்ன? மூன்று யோகமருந்து 8. தெளிவு என்பதன் பொருள் என்ன? நற்காட்சி 9. திறந்தன என்பதன் பொருள் என்ன? தன்மையுடையன 10. கூற்றுவா என்பதன் பொருள் என்ன? பிரிவுகளாக 11. பூணாய் என்பதன் பொருள் என்ன? அணிகலன்களை அணிந்தவளே 12. பிணி என்பதன் பொருள் என்ன? துன்பம் 13. ஓர்தல் என்பதன் பொருள் என்ன? நல்லறிவு 14. பிறவார் என்பதன் பொருள் என்ன? பிறக்கமாட்டார் 15. பிறவித்துன்பங்களை தீர்க்கும் மூன்று மருந்துகள் எவை? நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் 16. ஐஞசிறுகாப்பியங்களும் ஒன்று? நீலகேசி 17. நீலகேசி எத்தனை சருக்கங்களைக் கொண்டது? பத்து 18. நீலகேசியின் ஆசிரியர் பெயர்? பெயர் தெரியவில்லை 19. நீலகேசி எந்த சமயத்தைச் சார்ந்த நூல்? சமண சமயம் 20. உடல்நலம் என்பது ----- இல்லாமல் வாழ்தல் ஆகும்? பிணி 21. நீலகேசி கூறும் நோயின் வகைகள்? மூன்று 22. இவையுண்டார் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? இவை + உண்டார் 23. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? தாமினி |
| சொல்லும் பொருளும் |
|---|
|
● தீர்வன - நீங்குபவை
● திறத்தன - தன்மையுடையன ● உவசமம் - அடங்கி இருத்தல் ● கூற்றவா - பிரிவுகளாக ● நிழல்இகழும் - ஒளிபொருந்திய ● பூணாய் - அணிகலன்களைஅணிந்தவளே ● பேர்தற்கு - அகற்றுவதற்கு ● பிணி - துன்பம் ● திரியோகமருந்து - மூன்று யோகமருந்து ● ஓர்தல் - நல்லறிவு ● தெளிவு - நற்காட்சி ● பிறவார் - பிறக்கமாட்டார் |
| 8th நோயும் மருந்தும் (நீலகேசி) |
|---|
|
● தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின்
ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும் யார்வினவும் காலும் அவைமூன்று கூற்றவா நேர்வனவே ஆகும் நிழல்இகழும் பூணாய் (பா.113) ● பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார் பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே* (பா.116) |
| நிலம் பொது (சுகுவாமிஷ் பழங்குடியினர்) |
|---|
|
1. சுகுவாமிஸ் பழங்குடியினர் எங்கு வாழ்ந்தனர்? அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தில் 2. சுகுவாமிஸ் பழங்குடியினரின் தலைவர் யார்? சியாட்டல் 3. சுகுவாமிஸ் பழங்குடியினரின் தலைவர் சியாட்டல் தன் பகுதியில் உள்ள இயற்கையை காக்க யாருக்கு கடிதம் எழுதினார்? அமெரிக்க குடியரசுத்தலைவர் 4. இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்குப் புனிதமானதாகும் என கூறியவர் யார்? சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் 5. சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் தாயரக எதைக் கூறுகிறார்? பூமியை 6. சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் தந்தையாக எதைக் கூறுகிறார்? வானத்தை 7. சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் எதை தங்கள் சகோதரிகள் என்று கூறுகிறார்? நறுமணம் மிகுந்த மலர்கள் 8. சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் எதை தங்கள் சகோதரர்கள் என்று கூறுகிறார்? மான்கள், குதிரைகள், கழுகுகள், ஆறுகள் 9. தமிழக பழங்குடிகள் என்ற நூலை எழுதியவர் யார்? பக்தவத்சல பாரதி 10. செவ்விந்தியர்கள் நிலத்தை ----- மதிக்கின்றனர்? தாயாக 11. இன்னோசை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? இனிமை + ஓசை 12. பால் + ஊரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? பாலூறும்
|
Book Back
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
-
உடல்நலம் என்பது --------- இல்லாமல் வாழ்தல் ஆகும்.
(A) அணி
(B) பணி
(C) பிணி
(D) மணி
[விடை : (C) பிணி]
-
நீலகேசி கூறும் நோயின் வகைகள்
(A) இரண்டு
(B) மூன்று
(C) நான்கு
(D) ஐந்து
[விடை : (B) மூன்று]
-
'இவையுண்டார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) இ + யுண்டார்
(B) இவ் + உண்டார்
(C) இவை + உண்டார்
(D) இவை + யுண்டார்
[விடை : (C) இவை + உண்டார்]
-
தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
(A) தாம்இனி
(B) தாம்மினி
(C) தாமினி
(D) தாமனி
[விடை : (C) தாமினி]
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
-
செவ்விந்தியர்கள் நிலத்தைத் ------------ மதிக்கின்றனர்.
(A) தாயாக
(B) தந்தையாக
(C) தெய்வமாக
(D) தூய்மையாக
[விடை : (A) தாயாக]
-
"இன்னோசை'' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) இன் + ஓசை
(B) இனி + ஓசை
(C) இனிமை + ஓசை
(D) இன் + னோசை
[விடை : (C) இனிமை + ஓசை]
-
பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
(A) பால்ஊறும்
(B) பாலூறும்
(C) பால்லூறும்
(D) பாஊறும்
[விடை : (B) பாலூறும்]

minnal vega kanitham