Type Here to Get Search Results !

8th தமிழ் நூல் வெளி


இயல் 1 : தமிழ் இன்பம்
பாடம் 1.1. தமிழ்மொழி வாழ்த்து
நூல் வெளி
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் சி. சுப்பிரமணிய பாரதியார்
இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
• கவிதைகள் மட்டுமன்றி, சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர்.
சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.

பாடம் 1.2. தமிழ்மொழி மரபு
நூல் வெளி
• தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
• தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
• இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
• ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் (91, 92,93) இங்குத் தரப்பட்டுள்ளன.

பாடம் 1.4. சொற்பூங்கா
நூல் வெளி
செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா. இளங்குமரனார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
• நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.
திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும் பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார்.
• இவரது தமிழின் தனிப்வருஞ் சிறப்புகள் என்னும் நூவிலிருந்து செய்திகள் ஏதாகுத்து இங்குத் தரப்பட்டுள்ளன.

இயல் 2 : ஈடில்லா இயற்கை
பாடம் 2.1. ஓடை
நூல் வெளி
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்.
அரங்கசாமி என்கிற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும்.
• இவர் பாரதிதாசனின் மாணவர்.
தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்.
கவிகுரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர்.
• இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது.
தமிழ்ச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களுள் சிலவாகும்.
• பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.

பாடம் 2.2. கோணக்காத்துப் பாட்டு
நூல் வெளி
• நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாகப் பாடினர்.
பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன.
புலவர் செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டிச் சிந்திலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

பாடம் 2.3. நிலம் பொது
நூல் வெளி
• இக்கட்டுரை பக்தவத்சல பாரதி எழுதிய தமிழகப் பழங்குடிகள் எனும் நூலில் இருந்து எடுத்துத்தரப்பட்டுள்ளது.

பாடம் 2.4. வெட்டுக்கிளியும் சருகுமானும்
நூல் வெளி
மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ் ஆகியோர் காடர்களின் கதைகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர்.
• அவற்றை யானையோடு பேசுதல் என்னும் தலைப்பில் வ. கீதா தமிழாக்கம் செய்துள்ளார்.
• அந்நூலில் இருந்து ஒரு கதை இங்குத் தரப்பட்டுள்ளது.

பாடம் 2.5. திருக்குறள்
நூல் வெளி
பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
• திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும்.
• இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது.
பொருட்பால் அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது.
இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.

இயல் 3 : உடலை ஓம்புமின்
பாடம் 3.1. நோயும் மருந்தும்
நூல் வெளி
• நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.
• இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
• கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது.
• சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
• நீலகேசிக் காப்பியத்தின் தருமவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

பாடம் 3.2. வருமுன் காப்போம்
நூல் வெளி
கவிமணி எனப் போற்றப்படும் தேசிக விநாயகனார், குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்;
முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
• இவர், ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்
மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

பாடம் 3.4. தலைக்குள் ஓர் உலகம்
நூல் வெளி
சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன் என்பதாகும்.
• இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் புனைவுக்கதைகள், திரைப்படக் கதை வசனம் எனப் பலதுறைகளில் பணியாற்றியுள்ளார்.
மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் இவர் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார்.
என் இனிய எந்திரா, மீண்டும் ஜீனோ, ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், தூண்டில் கதைகள் உள்ளிட்ட பலநூல்களை எழுதியுள்ளார்.
• இவரது தலைமைச்செயலகம் என்னும் நூலிலிருந்து செய்திகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

இயல் 4 : கல்வி கரையில
பாடம் 4.1. கல்வி அழகே அழகு
நூல் வெளி
• குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
• இவர் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.
• கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும்.
• மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.
• கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன.
• இந்நூலின் பதின்மூன்றாம் பாடல் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.

பாடம் 4.2. புத்தியைத் தீட்டு
நூல் வெளி
• ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ்பெற்றவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.
• தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
• இவரது திரையிசைப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

பாடம் 4.3. பல்துறைக் கல்வி
நூல் வெளி
• திரு.வி.க. என்று அனைவராலும் குறிப்பிடப்படும் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்; சிறந்த மேடைப் பேச்சாளர்:
• தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர்.
• இவர் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
• இவரது இளமை விருந்து என்னும் நூலிலிருந்து சிலபகுதிகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

பாடம் 4.4. ஆன்ற குடிப்பிறத்தல்
நூல் வெளி
• பி.ச. குப்புசாமி சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர்.
• இவர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
• ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னும் நூலை எழுதியுள்ளார்.
• இவர் எழுதிய ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி இங்குத் தரப்பட்டுள்ளது.

இயல் 5 : குழலினிது யாழினிது
பாடம் 5.1. திருக்கேதாரம்
நூல் வெளி
• சுந்தரர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
• இவர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
• இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
• இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார்.
• திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
• இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
• இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாரப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.
• தே + ஆரம் - இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும், தே + வாரம் - இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும்.
• பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.

பாடம் 5.2. பாடறிந்து ஒழுகுதல்
நூல் வெளி
• கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
• இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல்;
• நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டது.
• குறிஞ்சிக்கவி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது.
• கலித்தொகையைத் தொகுத்த நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
• நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவரும் இவரே.

இயல் 6 : வையம்புகழ் வணிகம்
பாடம் 6.1. வளம் பெருகுக
நூல் வெளி
• ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை.
• தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது.
• இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை.
• இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.

பாடம் 6.2. மழைச்சோறு
நூல் வெளி
• பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு என்னும் கட்டுரையிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது.
• இந்நூலின் பதிப்பாசிரியர் அ. கௌரன்.

பாடம் 6.4. காலம் உடன் வரும்
நூல் வெளி
• கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னிவாடியில் பிறந்தவர்.
• சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர்.
• நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.
• சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர்.
• கன்னிவாடி, குணச்சித்திரங்கள், உப்புக்கடலைக் குடிக்கும் பூனை முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
• அவர் எழுதிய சிறுகதைகளில் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு
பாடம் 7.1. படை வேழம்
நூல் வெளி
• செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர் என்பர்.
• இவர் முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்.
• இவரைப் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் புகழ்ந்துள்ளார்.
• கலிங்கத்துப்பரணி தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சார்ந்த நூல்.
• தமிழில் முதல்முதலில் எழுந்த பரணி இந்நூலே ஆகும்.
• இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது.
• இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்.
• கலிங்கத்துப் பரணி கலித்தாழிசையால் பாடப்பெற்றது; 599 தாழிசைகள் கொண்டது.
• போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

பாடம் 7.2. விடுதலைத் திருநாள்
நூல் வெளி
• மீ. இராசேந்திரன் என்னும் இயற்பெயரை உடைய மீரா கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
• அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர்.
• ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
• இவர் எழுதிய கோடையும் வசந்தமும் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்
பாடம் 8.1.ஒன்றே குலம்
நூல் வெளி
• அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினென் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் திருமூலர் இவர் இயற்றிய திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
• எனவே, இந்நூலைத் தமிழ் மூவாயிரம் என்பர்.
• இது பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
• திருமந்திரம் என்னும் நூலிலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

பாடம் 8.2. மெய்ஞ்ஞான ஒளி
நூல் வெளி
• குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர்.
• இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார்.
• சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார்.
• எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
• நம் பாடப்பகுதி குணங்குடியார் பாடற்கோவை என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

பாடம் 8.4.மனித யந்திரம்
நூல் வெளி
• சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.
• சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர் என்று இவரைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர்.
• நூற்றுக்குமேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார்.
• சில திரைப்படங்களுக்குக் கதை, உரையாடலும் எழுதியுள்ளார். கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம், ஒருநாள் கழிந்தது போன்றன இவரது சிறுகதைகளுள் புகழ்பெற்றவை.
• மணிக்கொடி இதழில் வெளியான புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்
பாடம் 9.1. உயிர்க்குணங்கள்
நூல் வெளி
• இறையரசனின் இயற்பெயர் சே. சேசுராசா என்பதாகும்.
• கல்லூரி ஒன்றில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
• ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார்.
• அந்நூலில் இருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

பாடம் 9.2. இளைய தோழனுக்கு
நூல் வெளி
• வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு. மேத்தா.
• புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்;
• கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம், சோழநிலா, மகுடநிலா உள்ளிட்ட பல நூல்களையும் திரையிசைப்பாடல்களையும் எழுதியுள்ளார்;
• கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
• இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
• மு. மேத்தா கவிதைகள் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

பாடம் 9.4. பால் மனம்
நூல் வெளி
• கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி
• சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்.
• இவரது அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.
• தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார்.
• உயிர் அமுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள், அன்பின் சிதறல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
• பால் மனம் எனும் இக்கதை அ. வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.