| நூல் வெளி | 
|---|
| ● குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர். ● இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார். ● சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார். ● எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார். ● நம் பாடப்பகுதி குணங்குடியார் பாடற்கோவை என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது. | 
| நூல் வெளி | 
|---|
| ● குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ● இவர் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார். ● கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும். ● மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. ● கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன. ● இந்நூலின் பதின்மூன்றாம் பாடல் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது. | 
| மெய்ஞ்ஞான ஒளி | 
|---|
| 1. எப்படியும் வாழலாம் என்பது ----- இயல்பு? விலங்குகளின் 2. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது ----- பண்பு? மனிதன் 3. "கள்ளக் கருத்துக்களைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? குணங்குடி மஸ்தான் சாகிபு 4. "அடக்கத் தாம்மாய ஐம்பொறியை கட்டிப்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? குணங்குடி மஸ்தான் சாகிபு 5. பகராய் என்பதன் பொருள் என்ன? தருவாய் 6. ஆனந்த வெள்ளம் என்பதன் பொருள் என்ன? இன்பப்பெருக்கு 7. பராபரம் என்பதன் பொருள் என்ன? மேலான பொருள் 8. அறுத்தவருக்கு என்பதன் பொருள்? நீக்கியவர்க்கு 9. ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிக அறிய செயல் என்றவர் யார்? குணங்குடி மஸ்தான் சாகிபு 10. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன? சுல்தான் அப்துல்காதர் 11. இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தவர் யார்? குணங்குடி மஸ்தான் சாகிபு 12. சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி நானம் பெற்றவர் யார்? குணங்குடி மஸ்தான் சாகிபு 13. எக்காளக் கன்னி மனோன்மனிக் கன்னி, நந்தீசுவரக் கன்னி முதலான நூல்கள் இயற்றியவர் யார்? குணங்குடி மஸ்தான் சாகிபு 14. மனிதர்கள் தம் ----- தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்? ஐம்பொறிகளை 15. நானியர் சிறந்த கருத்துக்களை மக்களிடம் ----- ? பகர்தனர் 16. "ஆனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? ஆனந்தம் + வெள்ளம் 17. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? உள்ளிருக்கும் | 
| மெய்ஞ்ஞான ஒளி | 
|---|
| கள்ளக் கருத்துகளைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே! காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே! அறிவை அறிவோருக்கு ஆனந்த வெள்ளமதாய்க் கரையறவே பொங்கும் கடலே பராபரமே! அடக்கத் தாம்மாய ஐம்பொறியைக் கட்டிப் படிக்கப் படிப்பு எனக்குப் பகராய் பராபரமே! - குணங்குடி மஸ்தான் சாகிபு | 
| மெய்ஞ்ஞான ஒளி | 
|---|
| கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக்கு அழகுசெய் வார் - குமரகுருபரர் | 
| கல்வி அழகே அழகு | 
|---|
| 1. மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன் எது என கூறும் நூல்? நீதிநெறி விளக்கம் 2. "கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? குமரகுருபரர் 3. மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தருவது எது? கல்வி 4. கலன் என்பதன் பொருள் என்ன? அணிகலன் 5. முற்ற என்பதன் பொருள் என்ன? ஒளிர 6. எவருக்கு அழகு தரும் அணிகலன் தேவையில்லை? கல்வி கற்றவர்க்கு 7. குமரகுருபரர் எந்த நூற்ராண்டைச் சேர்ந்தவர்? 17 - ம் நூற்றாண்டு 8. கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ், முத்துத்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களை எழுதியவர் யார்? குமரகுருபரர் 9. நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் யார்? குமரகுருபரர் 10. நீதிநெறி விளக்கத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன? கடவுள் வாழ்த்து உள்பட 102 வெண்பாக்கள் 11. கற்றவருக்கு அழகு தருவது எது? கல்வி 12. "களனல்லால்"என்னும் சொல்லைப் பிரித்து எழுதாக் கிடைப்பது? கலன் + அல்லால் | 
Book Back
1. மனிதர்கள் தம் ------------- தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.
(A) ஐந்திணைகளை
(B) அறுசுவைகளை
(C) நாற்றிசைகளை
(D) ஐம்பொறிகளை
[விடை : (D) ஐம்பொறிகளை]
2. ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் --------------
(A) பகர்ந்தனர்
(B) நுகர்ந்தனர்
(C) சிறந்தனர்
(D) துறந்தனர்
[விடை : (A) பகர்ந்தனர்]
3. 'ஆனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) ஆனந்த + வெள்ளம்
(B) ஆனந்தன் + வெள்ளம்
(C) அனந்தம் + வெள்ளம்
(D) ஆனந்தர் + வெள்ளம்
[விடை : (C) அனந்தம் + வெள்ளம்]
4. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
(A) உள்ளேயிருக்கும்
(B) உள்ளிருக்கும்
(C) உளிருக்கும்
(D) உளருக்கும்
[விடை : (B) உள்ளிருக்கும்]
 

minnal vega kanitham