| நூல் வெளி | 
|---|
| ● தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். ● அரங்கசாமி என்கிற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும். ● இவர் பாரதிதாசனின் மாணவர். ● தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். ● கவிகுரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர். ● இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது. ● தமிழ்ச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களுள் சிலவாகும். ● பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது. | 
| 8th தமிழ் இயல் 2 ஓடை | 
|---|
| 1. "ஓடை ஆட உள்ளம் துண்டுதே - கல்லில் உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்" - என்ற பாடல் வரியை பாடியவர் யார்? வாணிதாசன் 2. தூண்டுதல் என்பதன் பொருள் என்ன? ஆர்வம் கொள்ளுதல் 3. ஈரம் என்பதன் பொருள் என்ன? இரக்கம் 4. முழவு என்பதன் பொருள் என்ன? இசைக்கருவி 5. பயிலுதல் என்பதன் பொருள் என்ன? படித்தல் 6. நாணம் என்பதன் பொருள் என்ன? வெட்கம் 7. சென்சொல் என்பதன் பொருள் என்ன? திருந்திய சொல் 8. நன்செய் என்பதன் பொருள் என்ன? நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் 9. புன்செய் என்பதன் பொருள் என்ன? குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம் 10. வள்ளைப்பாடடு என்பதன் பொருள் என்ன? நெல்குத்தும்போது பாடப்படும் பாடல் 11. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் யார்? வாணிதாசன் 12. வாணிதாசனின் இயற்பெயர்? அரங்கசாமி என்ற எத்திராசலு 13. வாணிதாசன் யாரின் மாணவர்? பாரதிதாசன் 14. கவிஞரேறு, பாவலர்மணி போன்ற சிறப்புப்பெயர் பெற்றவர் யார்? வாணிதாசன் 15. பிரேஞசு அரசு யாருக்கு செவாலியர் விருது வழங்கியது? வாணிதாசன் 16. தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம் குழந்தை இலக்கியம் போன்ற நூல்களை எழுதியவர் யார்? வாணிதாசன் 17. ஓடை என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? தொடுவானம் 18. பள்ளிக்கு சென்று கல்வி ----- சிறப்பு? பயிலுதல் 19. சென்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்குகேற்ப மீட்டுவது? ஓடை 20. நன்செய் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? நன்மை + செய் 21. செஞ்சொல் என்பதன் பொருள் என்ன? திருந்திய சொல் 22. வன்னைப்பாட்டு என்பதன் பொருள் என்ன? நெல்குத்தும்போது பாடப்படும் பாடல் | 
Book Back
1. பள்ளிக்குச் சென்று கல்வி ……………………. சிறப்பு.
(A) பயிலுதல்
(B) பார்த்தல்
(C) கேட்டல்
(D) பாடுதல்
[விடை : (A) பயிலுதல்]
2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது …………………….
(A) கடல்
(B) ஓடை
(C) குளம்
(D) கிணறு
[விடை : (B) ஓடை]
3. 'நன்செய்' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) நன் + செய்
(B) நன்று + செய்
(C) நன்மை + செய்
(D) நல் + செய்
[விடை : (C) நன்மை + செய்]
4. 'நீளுழைப்பு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) நீளு + உழைப்பு
(B) நீண் + உழைப்பு
(C) நீள் + அழைப்பு
(D) நீள் + உழைப்பு
[விடை : (D) நீள் + உழைப்பு]
5. சீருக்கு + ஏற்ப என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
(A) சீருக்கு ஏற்ப
(B) சீருக்கேற்ப
(C) சீர்க்கேற்ப
(D) சீருகேற்ப
[விடை : (B) சீருக்கேற்ப]
6. ஓடை + ஆட என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
(A) ஓடைஆட
(B) ஓடையாட
(C) ஓடையோட
(D) ஓடைவாட
[விடை : (B) ஓடையாட]
 

minnal vega kanitham