Type Here to Get Search Results !

10th நடுவண் அரச & மாநில அரசு || 2025 TNTET Paper - 2

10th மத்திய அரசு
  1. மத்திய அரசின் நிர்வாகம் பற்றி குறிப்பிடும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு எது?பகுதி-5 சட்டப்பிரிவு 52 முதல் 78 வரை
  2. மாநிலங்களவைக்கு இந்தியாவின் மாநில சட்டமன்றங்களில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு238 பேர்
  3. மக்களவைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது543 உறுப்பினர்கள்
  4. மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் எத்தனை பேரை நியமனம் செய்கிறார் கள்12 பேர்
  5. மக்களவைக்கு எத்தனை பேரை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்2 ஆங்கிலோ இந்தியர்கள்
  6. குடியரசுத் தலைவர் நேரடியாகவோ அல்லது அவருடைய சார் நிலை அலுவலர்கள் மூலமாக மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களை அரசியலமைப்பின்படி செயல்படுகிறார் என்று கூறும் சட்டப்பிரிவு எது?சட்டப்பிரிவு 53
  7. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்டாக்டர்.ராஜேந்திர பிரசாத்
  8. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயது எவ்வளவு35 வயது
  9. மத்திய அரசின் நிர்வாக தலைவர் யார்குடியரசு தலைவர்
  10. முப்படைகளின் தலைமைத் தளபதியாக செயல்படுபவர் யார்குடியரசுத் தலைவர்  
  11. குடியரசுத் தலைவரின் இல்லம் எங்கு அமைந்துள்ளதுராஷ்டிரபதி பவன், புது தில்லி
  12. குடியரசுத் தலைவருக்கு இருப்பிடத்தை உடன் கூடிய அலுவலகங்கள் மொத்தம் எத்தனை உள்ளன3 (புதுடெல்லி, ஹைதராபாத், சிம்லா)
  13. குடியரசுத் தலைவரின் ராஷ்டிரபதி நிலையம் எங்கு அமைந்துள்ளது?ஹைதராபாத்
  14. குடியரசுத் தலைவரின் ரிட்ரீட் கட்டடம் எங்கு அமைந்துள்ளதுசிம்லா
  15. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுவில் மொத்தம் எத்தனை பேர் முன்மொழிதல் மற்றும் வழி மொழிய வேண்டும்10 பேர் முன்மொழிய வேண்டும். 10 வாக்காளர்கள் வழிமொழிய வேண்டும்.
  16. குடியரசுத்தலைவர் வாக்காளர் குழுமத்தால் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவம் படி
  17. மாநிலங்களவை மற்றும் மக்களவை யில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுமம் எவ்வாறு அழைக்கப்படுகிறதுவாக்காளர் குழுமம்
  18. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்5 ஆண்டுகள்
  19. மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத்தலைவரின் பெயராலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறும் சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 77
  20. இந்திய குடியரசு தலைவர்களை வரிசைப்படுத்துக: 1. திரு.ராஜேந்திர பிரசாத் 2.திரு.சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் 3. திரு.ஜாகீர் உசேன் 4.வி.வி.கிரி 5. திரு.பக்ருதின் அலி அகமது 6.திரு.நீலம் சஞ்சீவி ரெட்டி 7.திரு கியானி ஜெயில் சிங் 8. திரு.வெங்கட்ராமன் 9. திரு.சங்கர் தயாள் சர்மா 10. திரு. கே.ஆர் நாராயணன் 11. திரு.அப்துல் கலாம் 12.திருமதி.பிரதீபா பாட்டில் 13.திரு.பிரணாப் முகர்ஜி 14.திரு ராம்நாத் கோவிந்த்
  21. இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பெயர்களை பட்டியலிடுக. ராஜ ராஜ கிரி பக்கத்துல நீல கலர் ஜெயில் வெங்கட சர்ம நாராயணா.
  22. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்திருமதி பிரதீபா பாட்டில் 12 வது குடியரசு தலைவர்
  23. இந்தியாவின் தற்போதைய குடியரசுத்தலைவர் யார்ராம்நாத் கோவிந்த் 14 வது குடியரசு தலைவர்
  24.  பிரதமரை நியமிப்பவர் யார்குடியரசுத் தலைவர்
  25. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் இதர நீதிபதிகளை நியமிப்பவர் யார்குடியரசு தலைவர்
  26. மாநில ஆளுநர்களை நியமிப்பவர் யார்குடியரசுத் தலைவர்
  27. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை நியமிப்பவர் யார்குடியரசுத் தலைவர்
  28. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்களை நியமிப்பவர் யார்குடியரசுத் தலைவர்
  29. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிப்பவர் யார்?குடியரசு தலைவர்
  30. இந்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளர் நியமிப்பவர் யார்?குடியரசு தலைவர்
  31. வெளிநாடுகளுக்கான தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்களை நியமிப்பவர் யார்குடியரசுத் தலைவர்
  32. முப்படைகளின் தளபதிகளை நியமனம் செய்பவர் யார்குடியரசுத் தலைவர்
  33. பொதுத் தேர்தலுக்குப்பின் கூடும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்றுபவர் யார்குடியரசு தலைவர்
  34. குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு எத்தனை முறை நாடாளுமன்றத்தை கூட்டுகிறார்இரண்டு முறை
  35. நிதி மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய யாருடைய ஒப்புதல் தேவைகுடியரசுத் தலைவர்
  36. மக்களவையை கலைக்கும் அதிகாரம் யாருக்கு உண்டுகுடியரசுத் தலைவர்
  37. மத்திய அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை மக்களவையில் சமர்ப்பித்தவர் யார்மத்திய நிதியமைச்சர் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்ற பிறகு
  38. இந்திய அவசரகால நிதி இணை நிர்வகிப்பவர் யார்குடியரசுத் தலைவர்
  39. நிதி குழுவினை அமைப்பவர் யார்குடியரசுதலைவர்  ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை
  40. குடியரசுத் தலைவரின் மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் பற்றிய குறிப்பிடும் சட்டப்பிரிவு எது72( மன்னிப்பு என்பது இதயத்தை சார்ந்தது இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும்)
  41. குடியரசுத் தலைவர் மத்திய பாதுகாப்பு படையின் தலைமைத் தளபதியாக செயல்படுவார் என கூறும் சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 53 (2)
  42. மற்ற நாடுகளின் மீது போர் அறிவிக்கவும் அமைதியை ஏற்படுத்தவும் அதிகாரம் பெற்றவர்குடியரசுத் தலைவர்
  43. நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்குடியரசுத் தலைவர்
  44. மாநில நெருக்கடி நிலையை எந்த சட்டப் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் கொண்டு வருகிறார்சட்டப் பிரிவு 356
  45.  குடியரசுத் தலைவர் எந்த சட்டப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி நிலையை அறிவிக்கிறார்சட்டப்பிரிவு 360
  46. இதுவரை எந்த மாநிலத்தில் அதிகபட்சமாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுகேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 9 முறை
  47. குடியரசுத் தலைவர் தனது பணித் துறப்பு கடிதத்தை யாரிடம் வழங்க வேண்டும்துணை குடியரசு தலைவர்
  48. இதுகுறித்து தெரிவித்ததையடுத்து சட்டப்பிரிவு குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 61
  49. குடியரசு தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் தீர்மானமாக கொண்டு வரும்பொழுது குறைந்தபட்சம் எத்தனை பேர் ஆதரவு தெரிவிக்கவேண்டும்அவைக்கு வருகை புரிந்தவர்கள் நான்கில் ஒரு பங்கிற்கு குறையாமல்
  50. குடியரசுத் தலைவர் தன்னுடைய அதிகாரத்தை செயல்படுத்துவதில் எந்த நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை  எனக் கூறும் சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 361(1)
  51. நமது நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவி எதுதுணை குடியரசுத் தலைவர் சட்டப்பிரிவு 63
  52. இந்திய துணை குடியரசுத்தலைவர் எந்த நாட்டின் துணை குடியரசுத் தலைவரின் பதவிக்கு நிகரான அதிகாரத்தை பெற்றுள்ளார்அமெரிக்க துணை குடியரசு தலைவர்
  53. இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவர் யார்டாக்டர் ராதாகிருஷ்ணன்
  54.  துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் எத்தனை வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்35 வயது
  55. துணை குடியரசு தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்மறைமுக தேர்தல் மூலம் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய வாக்காளர் குழுமத்தின் மூலம்
  56. துணை குடியரசு தலைவர் தேர்தல் பற்றி கூறும் சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 66(1)
  57. புதிய துணை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் படும்வரை துணை குடியரசுத் தலைவரின் பணிகளை செய்பவர் யார்மாநிலங்களவையின் துணைத் தலைவர்
  58. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும் பட்சத்தில் குடியரசுத்தலைவரின் பணிகளை செயலாற்றுபவர் யார்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
  59. குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்நீதிபதி எம் இதயத்துல்லா 1969 ஆம் ஆண்டு
  60. துணை குடியரசுத் தலைவரின் பதவிநீக்கம் கொண்டு வரும்பொழுது குறைந்தபட்சம் எத்தனை நாட்களுக்கு முன்னர் துணை குடியரசுத் தலைவருக்கு அறிவிப்பு வழங்க வேண்டும்14 நாட்களுக்கு முன்னர்
  61. குடியரசுத் தலைவர் தனது கடமைகளை ஆற்ற இயலாத போது அல்லது உடல்நலக் குறைவாக இருக்கும் பொழுது அதிகபட்சம் எத்தனை மாதகாலத்திற்கு துணை குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவரின் பணிகளை மேற்கொள்வார்? அதிகபட்சம் ஆறு மாத காலம்
  62. மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்களிப்பு சமநிலையில் இருக்கும் பட்சத்தில் குடியரசுத் தலைவர் வாக்கு அளிக்கலாம் என கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 100. இது முடிவு வாக்கு என்றும் அழைக்கப்படும்.
  63. குடியரசுத் தலைவருக்கு உதவிடவும் அறிவுரை வழங்கும் விரதம் அமைச்சரை தலைவராகக் கொண்ட ஒரு மத்திய அமைச்சரவை குழு இருக்கும் எனக் கூறும் சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 74(1)
  64. இங்கிலாந்தின் நாடாளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறதுவெஸ்ட்மின்ஸ்டர்
  65. இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவி அழகு எந்த ஜனநாயக முறையில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது?இங்கிலாந்தில் வெஸ்ட் மினிஸ்டர் அரசியலமைப்பு ஜனநாயக முறையில்
  66. நாடாளுமன்ற அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் ஒட்டு மொத்தமாகவும் எதற்கு பொறுப்புடையவர்கள் ஆவர்மக்களவைக்கு
  67. நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார் எத்தனை மாதத்திற்குள் அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்ஆறு மாதத்திற்குள்
  68. இந்திய பிரதமர்களை பட்டியலிடுக: 1.திரு.ஜவகர்லால் நேரு 2. திரு.லால் பகதூர் சாஸ்திரி 3 திருமதி.இந்திரா காந்தி 4. திரு.மொரார்ஜி தேசாய் 5. திரு.சரண் சிங் 6.திருமதி இந்திரா காந்தி 7.திரு.ராஜீவ் காந்தி 8. திரு.வி.பி சிங் 9.திரு சந்திரசேகர் 10 திரு.பி.வி.நரசிம்மராவ் 11 திரு.அடல் பிகாரி வாஜ்பாய் 12 திரு.தேவகவுடா 13. திரு.ஐ.கே. குஜரால் 14.திரு.அடல் பிகாரி வாஜ்பாய் 15.திரு.மன்மோகன் சிங் 16.திரு.நரேந்திர மோடி
  69. பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றி கூறும் சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 78
  70. குடியரசுத் தலைவருக்கும் அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல் படுபவர் யார்பிரதம அமைச்சர்
  71. ஒட்டுமொத்த மக்களவை உறுப்பினர்களில் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும்பிரதம அமைச்சர் உட்பட 15 சதவீதம் மட்டும்
  72. மத்திய அமைச்சர்கள் எத்தனை தர நிலைகளில் வகைப்படுத்தப் பட்டுள்ளனர்3 தரநிலைகள்
  73. நிதி மசோதா யாருடைய பரிந்துரையின்படி மக்களவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது?குடியரசுத்தலைவர் பரிந்துரையின்படி
  74. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பு அமைச்சராக செயல்படுகின்றவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்ராஜாங்க அமைச்சர்
  75. இந்திய நாடாளுமன்றம் பற்றி கூறும் சட்டப்பிரிவு எதுபகுதி-5 சட்டப்பிரிவு 79 முதல் 122 வரை
  76. இந்திய நாடாளுமன்றம் எத்தனை பகுதிகளைக் கொண்டதுமூன்று பகுதிகள் குடியரசுத் தலைவர், மக்களவை  மற்றும் மாநிலங்களவை
  77. ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு250 உறுப்பினர்கள்
  78. மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு குறைந்த பட்ச வயது எவ்வளவு30 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்
  79. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு6 ஆண்டுகள்
  80. மாநிலங்களவையின் துணைத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலம்
  81. மாநிலங்களவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில்விகிதாச்சார தேர்ந்தெடுக்கபடுகின்றனர்.
  82. எந்த ஒரு மசோதாவை சட்டமாக்க மாற்றுவதற்கு மாநிலங்களவையில் ஒப்புதல் தேவை இல்லைநிதி மசோதா
  83. குடியரசுத்தலைவர் எப்பொழுது மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து மசோதாவின் முடக்கத்தை தீர்த்து வைக்கிறார்ஒரு மசோதா 6 மாதங்களுக்கு மேல் ஒப்புதல் பெறவில்லை எனில்
  84. மாநில அரசு பட்டியலை உருவாக்குக அதிகாரம் யாரிடம் உள்ளதுமாநிலங்களவை
  85. மாநிலங்களவை அகில இந்திய பணிகளை உருவாக்கவும் நீக்கவும் அதிகாரம் பெற எவ்வளவு பெரும்பான்மை தேவைப்படுகிறதுமூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பெரும்பான்மை
  86. நிதி மசோதாவை திருத்தம் செய்யவோ அல்லது நிராகரிக்கவோ மாநிலங்களவைக்கு அதிகாரம் உண்டா இல்லையாஇல்லை
  87. மாநிலங்களவை நிதி மசோதாவிற்கு எத்தனை நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்14 நாட்கள்
  88.  மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு552 பேர்
  89. மக்களவைக்கு யூனியன் பிரதேசங்களில் இருந்து எத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்13 பேர்
  90. தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு545 உறுப்பினர்கள்
  91. மக்களவை உறுப்பினர் ஆவதற்கு குறைந்த பட்ச வயது எவ்வளவு25 வயது
  92. மக்களவையை கலைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டா இல்லையாநெருக்கடிநிலை சட்டத்தின்படி மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்த ஒரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் குடியரசு தலைவர் மக்களவையை கலைக்க முடியும்.
  93. நம்பிக்கையில்லாத் தீர்மானம் எங்கு அறிமுகப்படுத்தப்படும் மக்களவையில் அல்லது மாநிலங்களவை?மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்.
  94. தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு57 பேர்.  மக்களவை 39 உறுப்பினர்கள். மாநிலங்களவை 18 உறுப்பினர்கள்.
  95. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் யார்மக்களவை சபாநாயகர்
  96. ஒரு மசோதாவை நிதி மசோதா அல்லது சாதாரண மசோதாவை என தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளதுமக்களவை சபாநாயகர்
  97. கட்சி தாவல் தடை சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது1985
  98. கட்சித் தாவல் தடைச் சட்டம் பற்றி குறிப்பிடும் அட்டவணை எதுபத்தாவது அட்டவணை
  99. ஒரு மக்களவை உறுப்பினர் அவர் மக்களவை உறுப்பினராக தகுதி பெற்றவரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளதுமக்களவை சபாநாயகர்
  100. நாடாளுமன்றம் வருடத்திற்கு எத்தனை முறை கூடுகிறது3 முறை பட்ஜெட் கூட்டத்தொடர் மழைக்கால கூட்டத்தொடர் குளிர்கால கூட்டத்தொடர்
  101. பட்ஜெட் கூட்டத்தொடர் எப்பொழுது அல்லது எந்த மாதத்தில் நடைபெறுகிறதுபிப்ரவரி முதல் மே மாதம் வரை
  102. மழைக்கால கூட்டத்தொடர் எந்த மாதத்தில் நடைபெறுகிறதுஜூலை முதல் செப்டம்பர் வரை
  103. குளிர்கால கூட்டத்தொடர் எந்த மாதத்தில் நடைபெறுகிறதுநவம்பர் மற்றும் டிசம்பர்
  104. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழி வகை செய்யும் சட்டப் பிரிவு எதுசட்டப்பிரிவு 76
  105. நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி யார்இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
  106. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்க தகுதி என்னஏதாவது ஒரு உயர் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் நீதிபதியாகவும் அல்லது உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வழக்கறிஞராகவும் அல்லது குடியரசு தலைவரின் பார்வையில் மேம்பட்ட சட்ட வல்லுநராக இருத்தல் வேண்டும்.
  107. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் இன் பதவி காலம் எவ்வளவுகுடியரசுத்தலைவர் விரும்பும் வரை இவர் பதவியில் நீடிக்கலாம்.
  108. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தில்  பங்கு கொள்ளும் உரிமை உள்ளதாபங்கு கொள்ளும் உரிமை உண்டு. ஆனால் வாக்களிக்கும் உரிமை இல்லை.
  109. மத்திய அரசாங்கத்தின் மூன்றாவது அங்கம் என்று அழைக்கப்படுவது எதுநீதித்துறை
  110. புதுதில்லியில் உள்ள இந்திய உச்சநீதிமன்றம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது1950 ஜனவரி 28
  111. இந்திய உச்சநீதிமன்றம் அமைய வழி வகுத்த சட்டம் எதுஇந்திய அரசு சட்டம் 1935
  112. உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் தலைமை நீதிபதியின் பதவி காலம் எவ்வளவு? 65 வயது வரை
  113. உச்சநீதிமன்ற நீதிபதிகளை பதவி விலக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?நாடாளுமன்றம் 
  114. உச்சநீதிமன்றத்தின் நிரந்தர தலைமையிடம் எதுபுதுதில்லி
  115. அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்திட உச்சநீதிமன்றம் எத்தனை நீதிப்பேராணைகளை வழங்குகிறதுஐந்து பேராணைகள்
  116. ஒரு சட்டத்தினை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளதுஉச்சநீதிமன்றம்

 

Choose the correct answer:

  1.  மத்திய அரசின் அரசியல் அமைப்பு தலைவர் யார்குடியரசுத் தலைவர்
  2. நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் உண்மையான நிர்வாக அதிகாரம் பெற்றவர் யார்பிரதமர்
  3. ஒரு மசோதாவை நிதி மசோதாவை அல்லது இதர மசோதாவை என தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளதுலோக்சபாவின் சபாநாயகர்
  4. அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக எதற்கு பொறுப்புடையவர்கள் ஆவர்மக்களவை
  5. சட்டமியற்றும் நடவடிக்கைகளில் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் யார்மக்களவை சபாநாயகர்
  6. லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது எவ்வளவு25 வயது
  7. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்நாடாளுமன்றம்
  8. கீழ்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்சட்டப்பிரிவு 360
  9. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர் யார்குடியரசு தலைவர்
  10. பின்வரும் எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களை தீர்க்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளதுதனக்கே உரிய நீதி வரையறை article131
  11. நீ இந்திய குடியரசுத் தலைவராக தேர்ந்து எடுக்கும் பட்சத்தில் கீழ்க்கண்ட எந்த முடிவினை எடுப்பாய்இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை பரிசீலனைக்கு உட்படுத்த கேட்டுக் கொள்வது.

 

 

Fill in the blanks:

  1. எந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாதுநிதி மசோதா
  2. நாட்டின் உண்மையான தலைவராகவும் நாட்டின் முக்கிய செய்தி தொடர்பாளராகவும் செயல்படுபவர் யார்பிரதமர்
  3. அலுவல் வழியில் மாநிலங்கள் அவையின் தலைவராக செயல்படுபவர் யார்துணை குடியரசுத் தலைவர்
  4. பொதுவாக குடியரசுத் தலைவர் எந்த குடியரசுத்தலைவர் எந்த இனத்திலிருந்து இரண்டு உறுப்பினர்களை மக்களவைக்கு நியமிக்கிறார்?ஆங்கிலோ -இந்தியன்
  5. நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றவும் கூட்டத்தொடரில் பங்கு கொள்ளவும் உரிமை பெற்றவர் யார்குடியரசுத் தலைவர்
  6. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீரில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எவ்வளவு65 வயது
  7. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் என அழைக்கப்படுவது எதுஇந்திய உச்ச நீதிமன்றம்
  8. தற்சமயம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளின் எண்ணிக்கை எவ்வளவு33 பேர்

 

Choose the correct statement:

  1.  ஈ) i, ii, iii சரியானவை

i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.

ii) இலக்கியம் அறிவியல் கலை சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசு தலைவர் நியமிக்கிறார்.

iii) மாநிலங்கள் அவை உறுப்பினர் 30 வயதுக்கு குறைவாக இருத்தல் கூடாது.

  1. அ) ii, iv சரியானவை.                                           

ii) மத்திய அரசின் மூன்றாவது அங்கம் நீதித்துறை ஆகும்.

iv)உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்து பகுதியில் உள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.

  1. கூற்று: மாநிலங்களவை ஒரு நிரந்தர அவையாகும் இதனை கலைக்க முடியாது. காரணம்: மாநிலங்களவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் ஓய்வுபெறுவர். காலியிடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஈ)கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

Match the following:

  1. சட்டப்பிரிவு 53- குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள்
  2. சட்டப்பிரிவு 63 -துணை குடியரசுத் தலைவரின் அலுவலகம் 
  3. சட்டப் பிரிவு 356 -மாநில நெருக்கடி நிலை
  4.  சட்டப்பிரிவு 76 -இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் அலுவலகம் 
  5. சட்டப்பிரிவு 352 -உள்நாட்டு நெருக்கடி நிலை

10th மாநில அரசு
  1. இந்தியாவில் தற்பொழுது எத்தனை யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் உள்ளன28 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்கள் 
  2. அனைத்து மாநிலங்களுக்கான சீரான அமைப்பினைப் பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவு எதுபகுதி-6 சட்டப்பிரிவு 152 முதல் 237 வரை
  3. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு எப்போது நடைமுறைக்கு வந்தது? 1957 நவம்பர் 26 முன்னதாக நவம்பர் 17ஆம் நாள் ஏற்கப்பட்டது.
  4. மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவர் யார்ஆளுநர்
  5. ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை பற்றிக் கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 154
  6. மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் இருக்க வேண்டும் எனக் கூறும் சட்டப்பிரிவு எதுசட்ட பிரிவு 154 (1)
  7. ஆளுநரின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்5 ஆண்டுகள் ஆனால் குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பேரில் அவரது பதவி காலம் நீட்டிக்க படலாம்.
  8. ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க கூடாதுஅவர் நியமிக்கப்படும் மாநிலத்தில் வசிப்பவராக இருத்தல் கூடாது.
  9. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது குடியரசுத்தலைவர் ஓர் ஆணையின் மூலம் ஆளுநரின் ஊதியம் மற்றும் பணிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கலாம் என கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 158 (3A)
  10. மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்னசர்க்காரியா குழு
  11. சர்க்காரியா குழு ஆளுநர் நியமனம் குறித்து மொத்தம் எத்தனை ஆலோசனைகளை வழங்கியுள்ளதுமூன்றுவித ஆலோசனைகள்
  12. ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட தேவையான தகுதிகளை பற்றிக் கூறும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 157 மற்றும் 158
  13. ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்ச வயது எவ்வளவு35 வயது
  14. முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் படி ஆளுநர் குறிப்பிட்ட சில நிகழ்வுகளைத் தவிர மற்ற அதிகாரங்களை செயல்படுத்துகிறார் எனக்கூறும் சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 163
  15. மாநில அரசு பணியாளர் தேர்வாணைய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்பவர் யார்ஆளுநர்
  16. மாநில அரசு பணியாளர் தேர்வாணைய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்பவர் யார்குடியரசுத் தலைவர்
  17. மாநில தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்பவர் யார்ஆளுநர்
  18. குடியரசு தலைவர் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது மாநிலத்தை நேரடியாக ஆட்சி செய்பவர் யார்ஆளுநர்
  19. சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும் ஒத்தி வைக்கவும் சட்டமன்றத்தை கலைக்கவும் உரிமை பெற்றவர் யார்ஆளுநர்
  20. ஆளுநர் ஆங்கிலோ இந்தியன் வகுப்பினர் இலிருந்து எத்தனை உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்கிறார்ஒரு உறுப்பினர்
  21. ஆளுநர் மாநில சட்ட மேலவையில் எத்தனை இடங்களை நியமனம் செய்கிறார்ஆறில் ஒரு பங்கு உறுப்பினரை நியமனம் செய்கிறார்.
  22. மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது ஆளுநர் அவசர சட்டத்தை பிறப்பிக்கலாம் என கூறும் சட்டப்பிரிவு எதுசட்ட பிரிவு 213
  23. ஆளுநர் பிறப்பிக்கும் அவசர சட்டம் எத்தனை மாதத்திற்குள் மாநில சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும்ஆறு மாதத்திற்குள்
  24. மாநிலத்தின் ஆண்டு வரவு செலவு திட்டத்தை தயார் செய்து சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யும் கடமை யாருடையதுஆளுநர்
  25. பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சிகளில் நிதி நிலையை ஆய்வு செய்ய ஆளுநர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதி ஆணையம் அமைக்கிறார்ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை
  26. மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்பவர் யார்ஆளுநர்
  27. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்பவர் யார்குடியரசுத் தலைவர் ஆளுநரின் ஆலோசனையின் பேரில்
  28. மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத பொழுது ஆளுநர் எந்த கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கிறார்எந்த கட்சியையும்ம் ஆட்சி அமைக்க அழைக்கலாம்.
  29. ஆளுநருக்கான சிறப்புரிமைகளை வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 361 (1)
  30. மாநில ஆளுநருக்கு எதிராக எந்த நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகளை தொடர முடியும்?ஆளுநருக்கு எதிராக உரிமையியல் வழக்குகளைத் தொடர முடியாது.
  31. ஆளுநரின் பதவிக் காலத்தில் அவர்மீது குற்றச்சாட்டுகளை சுமத்த அல்லது கைது செய்யவும் அதிகாரம் பெற்ற நீதிமன்றம் எதுஆளுநர் தனது பதவிக்காலத்தில் இருக்கும் பொழுது எந்த நீதிமன்றமும் கைது செய்ய உத்தரவிட முடியாது.
  32. ஆளுநருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை தொடர முடியுமா?முடியாதாமுடியாது.
  33.  முதலமைச்சரை நியமனம் செய்பவர் யார்மாநில ஆளுநர்.
  34. முதலமைச்சரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்நிர்ணயிக்கப்படவில்லை.
  35. தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் யார்? (சுதந்திர இந்தியாவில்)திரு ஓமந்தூர் ராமசாமி
  36. காமராஜர் மொத்தம் எத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றினார்ஒன்பது ஆண்டுகள் 1954 முதல் 1963 வரை
  37. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்திருமதி ஜானகி ராமச்சந்திரன் ஜனவரி 1988
  38. செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் எந்த ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார்1991
  39. மாநில நிர்வாகத்தின் உண்மையான தலைவர் யார்முதலமைச்சர்
  40. அமைச்சரவை கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தி முடிவுகள் எடுப்பவர் யார்முதலமைச்சர்
  41. மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் யாருக்கு உண்டுஆளுநர்
  42. மாநில அமைச்சரவை எதற்கு கூட்டாக பொறுப்பானதுமாநில சட்டமன்றத்திற்கு
  43. சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் அமைச்சராக பதவி ஏற்றால் எத்தனை மாத காலத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்ஆறு மாத காலத்திற்குள்
  44. அமைச்சரவை ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 163
  45. முதலமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும் பொழுது உதவி செய்யவும் ஆலோசனை வழங்கவும் வேண்டும் எனக் கூறும் சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 163 (1)
  46. மாநில அமைச்சரவையில் அதிகபட்ச எத்தனை அமைச்சர்கள் இருக்கலாம் என அரசியல் அமைப்பு கூறுகிறதுமுதல் அமைச்சர் உட்பட மொத்தம் அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காடு.
  47. மாநில அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காடு தாண்டக் கூடாது எனக் கூறும் சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 164 (1A)
  48. ஈரவை சட்டமன்றம் கொண்டுள்ள மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டு தருக. கர்நாடகம் மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் ஆந்திர பிரதேசம் தெலுங்கானா பீஹார்
  49. தமிழக அமைச்சரவையில் அதிகபட்ச அமைச்சர்களின் எண்ணிக்கை எவ்வளவு36 பேர்
  50. ஒரு மாநில சட்டமன்றத்தில் இருக்கவேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச எண்ணிக்கை எவ்வளவுகுறைந்தபட்சம் 60 பேர் அதிகபட்சம் 500 பேர்
  51. மாநில மேலவை உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை எவ்வளவு40-பேர்
  52. மாநில சட்ட மேலவையில் இருக்கவேண்டிய அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவுமாநில சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  53. தமிழக சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை235 பேர்(234+1)
  54. தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்234
  55. சபாநாயகர் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யும் பொழுது அவர் சட்டமன்ற உறுப்பினராக தனது பதவியை தொடர இயலுமாஇயலாது.
  56. சபாநாயகரை பதவி நீக்கம் செய்யும் முன்பு எத்தனை நாட்களுக்கு முன்பு அவருக்கு அறிவிப்பு கொடுத்தல் வேண்டும்14 நாட்களுக்கு முன்பு
  57. சட்டமன்றம் கலக்கப்படும் பொழுது சபாநாயகர் தமது பதவியை தொடர இயலுமா? இயலாதாஇயலும் புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டம் வரை தொடர இயலும்.
  58. மாநில சட்ட மேலவையில் குறைந்தபட்ச எண்ணிக்கை 40 குறையாமலும் அதிகபட்சம் சட்டமன்றப் பேரவையில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமலும் இருக்க வேண்டும் எனக்கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 171 (1)
  59. விதான் பரிஷத் என்று அழைக்கப்படுவது எதுசட்டமேலவை
  60. சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு6 ஆண்டுகள்
  61. தமிழ்நாட்டில் எந்த ஆண்டு சட்ட மேலவை கலைக்கப்பட்டது1986 நவம்பர் 1
  62. ஒருவர் மாநில சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட கொண்டிருக்க வேண்டிய குறைந்த பட்ச வயது எவ்வளவு30 ஆண்டுகள்
  63. மாநில சட்ட மேலவைக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள்
  64. மாநில சட்ட மேலவைக்கு எத்தனை உறுப்பினர்கள் பட்டதாரிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்பன்னிரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பட்டதாரி 12
  65. மாநில சட்ட மேலவைக்கு எத்தனை உறுப்பினர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? 12 இல் ஒரு பங்கு உறுப்பினர்கள்
  66. மாநில சட்ட மேலவைக்கு எத்தனை உறுப்பினர்கள் சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள்
  67. மாநில சட்ட மேலவைக்கு எத்தனை உறுப்பினர்களை ஆளுநர் நேரடியாக நியமனம் செய்கிறார்ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள்
  68. சட்டமேலவை உருவாக்கம் அல்லது நீக்கம் பற்றி கூறும் சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 169
  69. ஒரு மாநில சட்ட மேலவையை கலைக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் எத்தனை உறுப்பினர்கள் அந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள்
  70. மாநில சட்ட மேலவையை கலைக்கும் அதிகாரம் பெற்றது எதுநாடாளுமன்றம்
  71. பொதுப் பட்டியலில் சட்டம் இயற்றும் அதிகாரம் யாருடையது மத்திய அரசு அல்லது மாநில அரசுமாநில அரசு சட்டம் இயற்றலாம். ஆனால் மத்திய அரசு சட்டம் இயற்றும் பொழுது அது செல்லாததாகிவிடும்.
  72. நிதி சார்ந்த நடவடிக்கைகளில் வாக்களிக்கும் அதிகாரம் எந்த அவையிடம் உள்ளதுகீழவையிடம் மட்டுமே உள்ளது.
  73. கல்கத்தா பம்பாய் மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்கள் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது1862
  74. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு என்று ஒரு பொதுவான உயர்நீதி மன்றத்தை நிறுவி நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கிய சட்டத்திருத்தம் எதுஏழாவது சட்டத்திருத்தம் 1956
  75. விக்டோரியா மகாராணி வழங்கிய காப்புரிமை கடிதம் எந்த ஆண்டு வழங்கப்பட்டது1862 ஜூன் 26
  76. உலகிலேயே மிகப்பெரிய நீதிமன்ற வளாகம் எங்கு அமைந்துள்ளதுலண்டன் சென்னை உயர்நீதிமன்றம் இரண்டாவது பெரிய வளாகம் சென்னை
  77. ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் அசாம் நாகலாந்து மணிப்பூர் மிசோரம் மேகாலயா திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான உயர் நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளதுகௌஹாத்தி அஸ்ஸாம்
  78. தனக்கென ஓர் உயர்நீதிமன்றத்தை கொண்டுள்ள யூனியன் பிரதேசம் எதுடெல்லி
  79. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பவர் யார்குடியரசுத் தலைவர்
  80. இந்தியாவில் தற்பொழுது மொத்தம் எத்தனை உயர் நீதிமன்றங்கள் உள்ளன25
  81. ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திற்கும் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார் எனக் கூறும் சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 216
  82. மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வளவு மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை விசாரிக்க இயலும்? ரூபாய் 2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை
  83. ராணுவ தீர்ப்பாயங்கள் இன் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளதா இல்லையாஇல்லை
  84. அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி மற்ற நோக்கங்களுக்காகவும் பேராணைகள் வெளியிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உண்டு எனக் கூறும் சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 226
  85. கீழ் நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் மீதும் ஆணை எவ்வாறு அழைக்கப்படுகிறதுகட்டளை உறுத்தும் நீதிப் பேராணை அல்லது மாண்டமாஸ்
  86. கீழ் நீதிமன்றங்கள் தனது அதிகார எல்லையை தாண்டி செயல்படாமல் தடுக்கும் நீதிப்பேராணை எதுதடை உறுத்தும் நீதிப் பேராணை
  87. புதுப் பதவிக்கு தவறாக வரும் ஒருவரை தடுக்கும் நீதிப்பேராணை எதுதகுதி வினவும் நீதிப்பேராணை
  88. பதிவேடுகளின் நீதிமன்றம் என்று அழைக்கப்படும் நீதிமன்றம் எது?உயர்நீதிமன்றம்
  89. மத்திய மாநில அரசுகள் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்ட அல்லது முரண்பட்ட தான் என்பதை ஆராய உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரம் எதுநீதிபுனராய்வு
  90. உயர் நீதிமன்றத்தின் நீதிபுனராய்வு அதிகாரம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எதுசட்டப்பிரிவு 226 மற்றும் 227
  91. உயர்நீதிமன்றத்தின் நீதிபுனராய்வு அதிகாரத்தை குறைத்த அல்லது தடை செய்த சட்டத்திருத்தம் எது42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1976
  92. எந்த சட்டத்திருத்தம் குறைக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் நீதிபுனராய்வு அதிகாரத்தை மீண்டும் வழங்கியது43 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1977

 

Choose the correct answer:

  1. மாநில ஆளுநரை நியமிப்பவர் யார்குடியரசுத் தலைவர்
  2. மாநில சபாநாயகர் ஒரு மேற்கண்ட எதுவுமில்லை.
  3. கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரம் அல்லதூதரகம்.
  4. ஆங்கிலோ இந்தியன் வகுப்பினரிலிஇருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு நியமிப்பவர் யார்ஆளுநர்.
  5. ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லைஉயர்நீதிமன்ற நீதிபதிகள்.
  6. மாநில முதலமைச்சரை நியமிப்பவர் யார்ஆளுநர்
  7. மாநில அமைச்சரவையின் தலைவர் யார்முதலமைச்சர்
  8. சட்ட மேலவை என்பது நிரந்தர அவை ஆகும்.
  9. மேலவை உறுப்பினர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது எவ்வளவு30 வயது
  10. மேலவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்உள்ளாட்சி அமைப்புகள் பட்டதாரிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிறரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  11. கீழ்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தை பெற்றிருக்கவில்லை ?தமிழ்நாடு
  12. இந்தியாவில் முதன்முதலில் உயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள் யாவைகல்கத்தா பம்பாய் மற்றும் சென்னை
  13. கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதிமன்றத்தை பெற்றுள்ளனபஞ்சாப் மற்றும் ஹரியானா.

 

Fill in the blanks:

  1. ஆளுநர் தனது ராஜினாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்குடியரசுத் தலைவர்
  2. சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பவர் யார்மக்கள்
  3. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் யார்திருமதி.சரோஜினி நாயுடு
  4. மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேந்தராக செயல்படுபவர் யார்ஆளுநர்
  5. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான உயர் நீதிமன்றத்தை அமைக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரமளிக்கும் 7ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது1956
  6. அரசு பணியாளர் தேர்வாணைய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை பணிநீக்கம் செய்பவர் யார்குடியரசுத் தலைவர்

 

Match the following:

  1. ஆளுநர்  -மாநில அரசின் தலைவர்.
  2. முதலமைச்சர்  -அரசாங்கத்தின் தலைவர்.
  3. அமைச்சரவை  - சட்டமன்றத்திற்கு பொறுப்பானவர்கள்.
  4. மேலவை உறுப்பினர்- மானியங்களுக்கு வாக்களிக்க முடியாது.
  5.  ஆயுதப் படையினர் -தீர்ப்பாயங்கள்.

10th நடுவண் அரச & 10th மாநில அரசு








Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.