| 8th கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் | 
|---|
| 8th கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 1.    காலனி ஆதிக்கத்திற்கு
முன் இந்தியப் பொருளாதாரமானது - வேளாண்மையை அடிப்படையாக கொண்ட பொருளாதாரமாக இருந்தது. 2.    மக்களின் முதல்நிலைத்
தொழில்- வேளாண்மை. 3.    வேளாண்மை சார்ந்த பிற
தொழில்கள்: ● நெசவுத் தொழில் ● சக்கரை தொழில் ● எண்ணெய் தொழில் 4.    ஆங்கிலேய அரசு இந்தியாவில்
அறிமுகப்படுத்திய மூன்று பெரிய நில வருவாய் மற்றும் நில உரிமை திட்டம்: ● நிலையான நிலவரி திட்டம் ● மகல்வாரி திட்டம் ● இரயத்துவாரி திட்டம் 5.    1765 ல் வங்காளம், பீகார், ஓரிசா ஆகிய பகுதிகளில் ஓராண்டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
- இராபர்ட் கிளைவ். 6.    ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை
ஐந்தாண்டு நிலவருவாய் திட்டமாக மாற்றிய பின்பு ஓராண்டு திட்டமாக மாற்றிய ஆளுநர் -
வாரன் ஹேஸ்டிங்ஸ். 7.    நிலையான நிலவரி திட்டத்தை
பிறகு பத்தாண்டு நிலவருவாய் திட்டமாக மாற்றியவர் - காரன் வாலிஸ் பிரபு. 8.    காரன் வாலிஸ் நிலையான
நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆண்டு -1793. 9.    நிலையான நிலவரி திட்டம்
கொண்டுவரப்பட்ட பகுதிகள்: ● வங்காளம் ● பீகார் ● ஒரிசா  ● வடக்கு கர்நாடகம் ● உத்திர பிரதேசத்தில் (வாரணாசி) 10.   நிலையான நிலவரி திட்டம்
இந்தியாவில் மொத்த - 19% நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 11.   நிலையான நிலவரி திட்டத்தின்
வேறு பெயர்கள்: ● ஜமீன்தாரி ● ஜாகீர்தாரி ● மல்குஜாரி ● பிஸ்வேதாரி 12.   ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற
பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை - ஜமீன்தாரி முறை. 13.   ஜமீன்தார்கள் விவசாயிகளிடமிருந்து
வசூலித்த வரியினை எத்தனை பங்கு ஆங்கில அரசுக்கு செலுத்தினர் - 10/11 பங்கு. 14.   ஆங்கிலேயர்களால் நிலவுடைமையாளர்களாக
அங்கீகரிக்கப்பட்டவர்கள்- ஜமீன்தார்கள். 15.   விவசாயிகளிடமிருந்து
வரியை வசூல் செய்யும் அரசின் முகவர்களாக செயல்பட்ட வர்கள்- ஜமீன்தார்கள். 16.   ஜமீன்தார்கள் வணிகக் குழுவிற்கு செலுத்தும் வரி
நிர்ணயிக்கப்பட்டு எந்த சூழ்நிலையிலும் உயர்த்தப்படமாட்டாது என உறுதியளிக்கப்பட்டது. 17.   ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு
பட்டா வழங்கினர். இதன்மூலம் விவசாயிகள் அந்நிலத்தை உழும் காலம் வரை குத்தகைதாரர்களாக
கருதப்பட்டனர். 18.   1820 ல் இரயத்துவாரி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் -
தாமஸ் மன்றோ, கேப்டன் ரீ்ட். 19.   இரயத்துவாரி முறை கொண்டுவரப்பட்ட
பகுதிகள்: ● பம்பாய் ● அசாம் ● மதராஸ் ● கூர்க் 20.   நிலத்தின் உரிமையானது
விவசாயிகளின் வசம் ஒப்படைக்கப்பட்டது முறை- இரயத்துவாரி முறை. 21.   இரயத்துவாரி முறையில்
தொடக்கத்தில் நில வருவாய் நிர்ணயிக்கப்பட்டது- விளைச்சலில் பாதி. 22.   இரயத்துவாரி முறையில்
விளைச்சலில் 1/3 பங்கு குறைத்தவர் - தாமஸ் மன்றோ. 23.   இரயத்துவாரி முறையில்
20 மற்றும் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலத்தின்
மீதான குத்தகை மாற்றியமைக்கப்பட்டது. 24.   ஆங்கிலேயரால் இரயத்துவாரி
முறை அறிமுகப்படுத்தபடாத பகுதி – வங்காளம். 25.   மகல்வாரி முறை யாருடைய
சிந்தனையில் உதித்த ஜமீன்தாரி முறையின் மாற்றப்பட்ட வடிவம் - ஹோல்ட் மெகன்சி. 26.   மகல்வாரி முறையை 1833 இராபர்ட் மெர்கின்ஸ் பர்ட் என்பவரின்
வழிகாட்டுதலின் படி மாற்றியமைத்தவர்- வில்லியம் பெண்டிங் பிரபு. 27.   1822 ல் மகல்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பகுதி: ● கங்கை சமவெளி ● வடமேற்கு மாகாணங்கள் ● மத்திய இந்தியாவில் சில பகுதிகள் ● பஞ்சாப் 28.   மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர்
- வில்லியம் பெண்டிங் பிரபு. மகல்வாரி முறையில் "மகல்” என்றால் - கிராமம். 29.   மகல்வாரி முறையையில்
நிலவருவாய் தொடக்கத்தில் மொத்த விளைச்சலில் அரசின் பங்காக நிர்ணயிக்கப்பட்டது -
2/3 பங்கு. 30.   மகல்வாரி முறையையில்
மொத்த விளைச்சலில் நிலவருவாய் 50 % என குறைத்தவர்- வில்லியம் பெண்டிங் பிரபு. 31.   மகல்வாரி முறையில் நில
வருவாயை கிராமம் முழுவதும் வசூல் செய்து அரசுக்கு செலுத்த நியமித்தவர் - கிராமத்
தலைவர். 32.   1833-ல் மகல்வாரி முறை
முதன் முதலில் அறிமுகப்படுத்திய பகுதிகள் - ஆக்ரா, அயோத்தி. 33.   மகல்வாரி முறையில் அரசுக்கும், கிராம மக்களுக்குமிடையே இடைத் தரகராக செயல்பட்டவர்- கிராமத்
தலைவர். 34.   ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட
முறை - மகல்வாரி முறை. 35.   ஆங்கிலேயர்களுக்கும்
ஜமீன்தார்களுக்கும் எதிராக விவசாயிகள் பல புரட்சிகளில் ஈடுபட்ட நூற்றாண்டு. – 19,
20 ஆம் நூற்றாண்டு. 36.   ஜமீன்தார்கள், மக்களுக்கும் ஆங்கிலேயர் அரசுக்கும் இடைத்தரகராக செயல்பட்ட திட்டம்
- நிரந்தர நிலவரி திட்டம். 37.   விவசாயிகளுக்கும், ஆங்கிலேயர் அரசும் நேரடி தொடர்பு- இரயத்துவாரி முறை. 38.   1855-1856 விவசாயிகளின் எழுச்சியாகக் கருதப்பட்ட முதலாவது கலகம் - சாந்தல்
கலகம். 39.   சாந்தல் மக்கள் வேளாண்மை
செய்து வந்த பகுதி – பீகார், ராஜ்மகால். 40.   சாந்தல் கிளர்ச்சியினை
தலைமை தாங்கிய சாந்தல் சகோதரர்கள் – சித்து, கங்கு 41.   1856-ல் ஆயுதம் ஏந்திய
புரட்சிக்கு இட்டுச் சென்ற விவசாயிகளின் கலகம் - சாந்தல் கலகம். 42.   சாந்தலர்களை பாதுகாக்க
கொண்டுவரப்பட்ட சட்டம் - சாந்தல் மண்டலம், சாந்தல் பர்கானா மண்டலம் 43.   இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி
நடைபெற்ற ஆண்டு -1859 செப்டம்பர். 44.   இண்டிகோ கிளர்ச்சி யாரால்
தலைமையேற்று நடத்தப்பட்டது- திகம்பர் பிஸ்வாஸ், பிஸ்ணு பிஸ்வாஸ். 45.   இண்டிகோ கலகம் நடைபெற்ற
இடம் - வங்காளம் - நாதியா மாவட்டம். 46.   இண்டிகோ கலகத்தின் நிலைமையை
கட்டுக்குள் கொண்டுவர அரசு அவுரி ஆணையத்தை அமைத்த ஆண்டு -1860. 47.   அவுரி ஆணையத்தின் பரிந்துரைப்படி
1862 சட்டம் - பாகம் VI யை உருவாக்கியது. 48.   ஜரோப்பிய பண்ணையாளர்களின்
அடக்குமுறைக்கு பயந்து வங்காளத்தின் அவுரி விவசாயிகள் குடியேறிய பகுதிகள்- பீகார், உத்திரபிரதேசம். 49.   இண்டிகோ சாகுபடியாளர்களின்
துயரங்களை வெளிப்படுத்திய பத்திரிகை - இந்து, தேசபக்தன். 50.   வங்காள அவுரி சாகுபடியாளர்களின்
துயரங்களை மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வர - நீல் தர்பன் என்ற ஒரு
நாடகத்தை எழுதியவர்- தீனபந்து மித்ரா. 51.   பாப்னா கலகம் (1873-76)
வங்காளத்தில் யாரால் ஆரம்பிக்கப்பட்டது- கேசப் சந்திர ராய். 52.   தக்காணத்தில் விவசாயிகளின்
குறைகளை போக்குவதற்கு உருவாக்கப்பட்ட சட்டம்- தக்காண விவசாயிகள் மீட்பு சட்டம். 53.   பூனா மாவட்டத்தில் உள்ள
விவசாயிகள் தக்காண கலகத்தில் ஈடுபட்ட ஆண்டு -1875. 54.   பஞ்சாப் விவசாயிகளை பாதுகாப்பதற்காக
பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு – 1900. 55.   ஆங்கிலேய இராணுவத்திற்குகு
வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட இடம் – பஞ்சாப். 56.   1917-1918 சம்பரான் சத்தியாகிரகம் நடைபெற்ற மாநிலம் - பீகார். 57.   சம்பரான் விவசாயிகள்
தங்களது மொத்த நிலத்தில் - 3/20 பங்கில் அவுரியை சாகுபடி
செய்தனர் 58.   ஐரோப்பிய தோட்டக்காரர்களுக்கு
அவர்கள் நிர்ணயித்த விலைக்கே விற்க - சம்பரான் தீன்கதியா என்ற நடைமுறைக் கொண்டு
வரப்பட்டது. 59.   மகாத்மா காந்தி அவர்கள்
எந்த மக்களுக்கு உதவ முன்வந்தார் – சம்பரான். 60.   கேடா (கைரா) சத்தியாகிரகம்
நடைபெற்ற ஆண்டு-1918 சர்தார் வல்லபாய் படேல் முக்கிய தலைவராக உருவானார். 61.   சம்பரான் விவசாய சட்டம்
நிறைவேற்றப்பட்ட ஆண்டு - மே 1918. 62.   மாப்ளா விவசாயிகள் ஜமீன்தார்களின்
அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆண்டு-1921 ஆகஸ்ட். 63.   மாப்ளா கிளர்ச்சியின்
போது அரசு தலையீட்டின் விளைவாக 2337 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். 1650 காயமடைந்தனர், 45000 சிறைபிடிக்கப்பட்டனர். 64.   1937 ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபொழுது – விவசாயிகளின் நிலம்
அனைத்தும் அவர்களுக்கே திரும்பி தரப்பட்டது – பர்தோலி. 65.   பொருத்துக: ● நிரந்தர நிலவரி திட்டம் - வங்காளம் ● மகல்வாரி முறை - வடமேற்கு மாகாணம் ● இரயத்துவாரி முறை - மதராஸ் ● நீல் தர்பன் - வங்காளம் இண்டிகோ
விவசாயிகளின் துயரம் ● சந்தால் கலகம் - முதல் விவசாயிகள்
கிளர்ச்சி. | 
| 8th மக்களின் புரட்சி | |||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 
 8th - மக்களின் புரட்சி 1) பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு என்ன? 1757. 
 151) பெருங்கலகத்தின் தோல்விக்கான காரணங்கள்: 
 
 | 
| 7th வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் | 
|---|
| 1. பந்தேல்கண்டை ஆட்சி புரிந்தவர்கள்? சந்தேலர்கள் 2. ஹரியானாவை ஆட்சி புரிந்தவர்கள்? தோமரர்கள் 3. அனைத்து ராஜபுத்திர இனக்குழுவிற்கும் ஒருங்கிணையும் மையமாக விளங்கியது? சித்தூர் 4. பால அரசவம்சத்தை உருவாக்கியவர் யார்? கோபாலர் 5. ராஜபுத்திரர்களின் மூன்று குலங்கள்? சூரிய குலம், சந்திர குலம், அக்னி குலம் 6. ஆறாம் நூற்றாண்டில் கூர்ஜர அரச வமசத்தை தோற்றுவித்தவர்? ஹரிசந்திரா 7. பௌத்தர்களுக்கு ஐந்து கிராமங்களை கொடையாக வழங்கியவர்? தேவபாலர் 8. ஜேம்ஸ் டாட் எனும் கீழ்த்திசை புலமையாளர் கி.பி.1829 ஆண்டு எத்தனை ராஜபுத்திர அரச குலங்கள்
இருந்ததாக பட்டியலிட்டார்? 36 ராஜபுத்திர அரச குலங்கள் 9. பால அரசை வடஇந்திய அரசியலில் ஒரு வலிமைமிக்க சக்தியாக உருவாக்கியவர்? தர்மபாலர் 10. சித்தூரின் ராணா (அரசர்) எந்த பகுதியை வெற்றி கொண்டதன நினைவாக
'ஜெய ஸ்தம்பா' எனும் வெற்றி
தூண் சித்தூரில் நிறுவப்பட்டது? மாளவத்தை 11. பிரதிகார அரசர்களுள் முதலாவது மற்றும் முக்கியமான அரசர் யார்? முதலாம் நாகபட்டார் 12. சௌகான் வம்சத்தின் கடைசி அரசர்? பிருதிவிராஜ் சௌகான் 13.
1191 ஆண்டு நடைபெற்ற முதல் தரெய்ன் போரில்
முகமது கோரியை தோற்கடித்தவர்? பிருதிவிராஜ் சௌகான் 14. பௌத்த கல்விக்கான மிகச்சிறந்த மையமாக விளங்கிய விக்கிரமசீலா
மடாலயத்தை உருவாக்கியவர்? தர்மபாலர் 15. சௌகான்களின் தலைநகராக விளங்கியது எது? சாகம்பரி 16. பிரதிகாரர்களுக்கு கட்டுப்பட்ட குருநில மன்னர்களாக இருந்தவர்கள்
யார்?
சௌகான்கள் 17. தர்மபாலர், தேவபாலர் ஆகியோரின்
ஆட்சிக்காலம் வங்காள வரலாற்றின் சிறப்பு மிக்க ஒளிரும் அத்தியாயங்கள் என கூறிய வரலாற்றாளர்? ஆர்.சி.மஜீம்தார் 18. சுமத்ரா மற்றும் ஜாவாவை சேர்ந்த இந்து பௌத்த சைலேந்திர அரசுடன்
நட்புறவு கொண்டவர்கள்? பாலர்கள் 19. சௌகான்கள் அரச வம்சத்தை தோற்றுவித்தவர்? சிம்மராஜ் 20. பிருதிவிராஜ ராசோ' எனும் நீண்ட காவியத்தை எழுதியவர்? சந்த் பார்தை 21. ரக்க்ஷாபந்தன் (ராக்கி) எனும் பண்பாட்டு மரபானது யாருக்கு உரியது? ராஜபுத்திரர்கள் 22. முதலாம் மகிபாலர் படையெடுப்பு வாரணாசிக்கு அப்பால் தனது அதிகாரத்தை
விரிவுபடுத்த முடியாமல் போக காரணமாக இருந்த தென்னிந்திய அரசர்? இராஜேந்திர சோழன் 23.
1192 ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தரெய்ன்
போரில் பிருதிவிராஜ்சொனை ரோற்கொலைசெய்கவர்? முகமதுடகோரி 24. இரண்டாம் பாலவம்சத்தை தோற்றுவித்தவர்? முதலாம் மகிபாலர் 25. திபெத்திய பௌத்தத்தை சீர்திருத்தம் செய்தவர் மற்றும் விக்கிரமசீலா
மடாலயத்தின் தலைவராக இருந்தவர்? அதிசா 26. ஆஜ்மீர் நகரை தோற்றுவித்தவர்? சிம்மராஜ் 27. பாலர்கள் எந்த மதத்தை பின்பற்றினர்? மகாயான பௌத்தம் 28. இஸ்லாமை தோற்றுவித்தவர்? இறைதூதர் முகமது நபிகள் நாயகம் 29.
1905 ஆண்டு வங்கப்பிரிவினையின் போது இந்து
முஸ்லீம் ஒற்றுமைக்காக ரக்ஷாபந்தன் விழாவை தொடங்கியவர்? இரவீந்திரநாத் தாகூர் 30. கலீஃபா என்பது? இறைத்தூதர் முகமது நபிகளின் பிரதிநிதி 31. சந்துவின மது படைஎடுத்து, சிந்துவின அரசர தாகரை தோற்கடித்து கொலைசெய்தவர்? முகமது-பின்-காசி 32. ரக்ஷாபந்தன் என்பதன் பொருள்? சகோதரத்துவத்தையும், அன்பையும் கொண்டாடும் விழா 33. உமையது அரசின் படைத்தளபதி? முகமது-பின்-காசிம் 34. இஸ்லாம் எங்கு தோன்றியது? அரேபியாவில் உள்ள மெக்காவில் 35. ஓர் இஸ்லாமிய அரசு அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் ஒரே நபரால் ஆளப்பட்டால் அவ்வரசு எவ்வாறு அழைக்கப்படும்? கலீஃபத் 36. பஞ்சாபிலுள்ள நாகர்கோட், டெல்லிக்கு அருகே தானேஸ்வர் ஆகிய நகரங்கள் சூறையாடப்பட்ட ஆண்டு? 1011 ஆண்டு 37. கஜினி மாமூது மரணமடைந்த ஆண்டு? 1030 ஆண்டு 38. கஜினி மாமூது 1001 ஆண்டு ஷாகி அரசுக்கு எதிரான போரில் யாரை தோற்கடித்தார்? அரசர் ஜெயபாலர் 39. புஜியத்தின் முக்கியத்துவத்தை அரேபியர்கள் எங்கு இருந்து கற்றுக்கொண்டனர்? இந்தியாவில் 40. கஜினி மாமூது புனித நகரான மதுராவை கொள்ளையடித்த ஆண்டு? 1018 ஆண்டு 41. கஜினிக்கு கப்பம் கட்டிய குறுநில தலைவராக இருந்தவர்? முகமது கோரி 42. கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது? துருக்கி 43. கஜினி மாமூது கன்னோஜ் மீது படைஎடுத்து எந்த அரசரை நாட்டை விட்டு
ஓடவைத்தார்?
அரசர் ராஜ்யபாலர் 44. புகழ்பெற்ற சோமநாதபுரம் கோவிலை கொள்ளையடித்து அங்கிருந்த கடவுள்
சிலையை உடைத்தவர் யார்? கஜினி மாமூது 45. முகமது கோரிக்கு சொந்தம்மான இந்தியப்பகுதிகளை தனது கட்டுப்பாடிற்கு
கொண்டுவந்த தளபதி? குத்புதீன் ஐபக் 46. கஜினி மாமூதுவை போல் இல்லாமல், இந்தியாவை கைப்பற்றி தனது பேரரசை விரிவாக்கம் செய்ய நினைத்தவர்? முகமது கோரி 47. முகமது கோரி மரணமடைந்த ஆண்டு? 1206 ஆண்டு 48. முகமது-பின்-காசிம் எந்த பகுதி மக்களுக்கு "பாதுகாக்கப்பட்ட
மக்கள்" எனும் தகுதி வழங்கப்பட்டது? சிந்துபகுதிவாழ் மக்கள் 49. கஜினி மாமுது 1008 ஆண்டு பெஷாவருக்கு அருகே வைகிந்த் என்னும் இடத்தில் யாரை தோற்கடித்தார்? ஆனந்தபாலர் 50. தன்னை டெல்லியின் முதல் சுல்தான் என பிரகடனப்படுத்திக் கொண்டவர்? குத்புதீன் ஐபக் 51. கஜினி மாமூதின் 17 முறை படைஎடுப்பிற்கு காரணம்? இந்தியாவில் செல்வதை கொள்ளையடிப்பது 52. கஜினி மாமூது 1024 ஆண்டு சோலங்கி அரசர் முதலாம் பீமதேவரை தோற்கடித்து எந்த நகரை
சூறையாடினர்?
அன்கில்வாட் 53. இந்திய வரலாற்றில் முஸ்லீம்களின் புதிய சகாப்தம் ஏற்பட காரணமாக
அமைந்த போர்?
இரண்டாம் தரெய்ன் போர் - 1192 | 
| 8th கிராம சமூகமும் வாழ்க்கை முறையும், 8th மக்களின் புரட்சி, 7th வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் | 
|---|
|  | 
 

minnal vega kanitham