| 7th விஜயநகர் மற்றும் பாமினி அரசுகள் | 
|---|
| 
 7th விஜயநகர், பாமினி அரசுகள் 1. பாமினி அரசு பரவி இருந்த பகுதி : ● மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும். ● கர்நாடகா மாநிலம் சில பகுதி. 2. 18 முடியரசர்களால் ஆளப்பட்ட பாமினி அரசு எத்தனை ஆண்டுகள் நீடித்தது - 180 3. பாமினி அரசு வீழ்ச்சியடைந்து எத்தனை சுல்தானியங்களாக பிரிந்தது : 5. ● பீஜப்பூர் ● அகமதுநகர் ● கோல்கொண்டா ● பீடார் ● பீரார் 4. விஜயநகர அரசு வலுவான அரசாக எத்தனை ஆண்டுகள் கோலோச்சியது-200 ஆண்டுகள். 5. தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு – 1565. 6. வெற்றி நகரம் என்று அறியப்படும் விஜயநகரம் எந்த இரு சகோதரர்களால் நிறுவப்பட்டது - ஹரிஹரர், புக்கர். 7. ஹரிஹரர், புக்கர் இருவரும் எந்த அரசிடம் பணிபுரிந்தனர் - துக்ளக் அரசு. 8. சிருங்கேரி சைவ மடத்தின் தலைவர் – வித்யாரண்யர். 9. ஹரிஹரர், புக்கர் ஆன்மீக குரு - வித்யாரண்யர். 10. வித்தியாரண்யருக்கு மதிப்பளிக்கும் விதத்தில் குறிப்பிட்ட காலம் வரை விஜயநகர் எவ்வாறு அழைக்கப்பட்டது- வித்யாநகர். 11. வித்யாநகர் பின்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது - விஜயநகர். 12. விஜயநகர அரசு எத்தனை அரசுகளால் ஆளப்பட்டது: 4. ● சங்கம வம்சம் - 1336 - 1485 ● சாளுவ வம்சம் - 1485 - 1505 ● துளுவ வம்சம் - 1505 - 1570 ● ஆரவீடு வம்சம் - 1570 - 1646 13. விஜய நகர அரசுகள், பாமினி சுல்தான்கள், ஒடிசாவை சேர்ந்த அரசுகளுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்த நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப்பகுதி- கிருஷ்ணா-துங்கத்ரா, கிருஷ்ணா-கோதாவரி. 14. ஹரிஹரர், புக்கர் எந்த வம்சத்தை சேர்ந்தவர்கள்- சங்கம வம்சம். 15. விஜயநகர அரசு உருவாகிப் எத்தனை ஆண்டுகளுக்கு பிறகே பாமினி அரசு நிறுவப்பட்டது – 10 ஆண்டுகள். 16. முதலாம் புக்கர் மகன்- குமார கம்பணா. 17. மதுரை சுல்தானியத்திற்க முற்றுப்புள்ளி வைத்து அங்கு ஒரு நாயக்க அரசை நிறுவுவதில் வெற்றி பெற்றவர்- குமார கம்பணா. 18. குமார கம்பணாவின் மனைவி – கங்காதேவி. 19. மதுரா விஜயம். எனும் எழுதிய நூல் - கங்காதேவி. 20. சங்கம வம்சத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளர் - இரண்டாம தேவராயர். 21. இஸ்லாமிய வீரர்களை படையில் பணியாற்றும் முறையைத் தொடங்கி வைத்தவர் - இரண்டாம் தேவராயர். 22. விஜயநகரப் பேரரசின் திறமைமிக்க படைத்தளபதி - சாளுவ நரசிம்மர். 23. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் - இரண்டாம் விருபாக்சி ராயர். 24. இரண்டாம் விருபாக்சி ராயரை கொலை செய்துவிட்டு துளுவ வம்ச ஆட்சியை தொடங்கிய படை தளபதி - நரசநாயக்கர். 25. துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர் – கிருஷ்ணதேவராயர். 26. கிருஷ்ணதேவராயரின் இரண்டு முக்கியமான இலக்கு. ● துங்கபத்ரா நதி பள்ளத்தாக்கு பகுதியில் சுதந்திரமாக செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்குவது. ● குல்பர்காவை கைப்பற்றுவது. 27. பாமினி சுல்தான் முகமது ஷா யை சிறையிலிருந்து விடுவித்து மீண்டும் அரியணையில் அமர வைத்தவர் – கிருஷ்ணதேவராயர். 28. ஓடிசாவை சேர்ந்த கஜபதி வம்ச அரசர் பிரதாபருத்ரனோடு போர் மேற்கொண்டவர் - கிருஷ்ணதேவராயர். 29. கிருஷ்ணதேவராயர் கோல்கொண்டா சுல்தானை யாருடைய பீரங்கி படை வீரர்களின் உதவியோடு தோற்கடித்தார் – போர்ச்சுகீசியர்கள். 30. மழைநீரைச் சேமிப்பதற்காகப் பெரிய நீர்ப்பாசனக் குளங்களையும் நீர்த்தேக்கங்களையும் உருவாக்கியவர் - கிருஷ்ணதேவராயர். 31. கிருஷ்ணதேவராயர் தமது தலைநகரான ஹம்பியில் கட்டிய கோவில்கள்: கிருஷ்ணசாமி கோயில், ஹசாரா ராமசாமி கோயில், விட்டலாசாமி கோயில் 32. போர்களின் மூலம் தான் பெற்ற செல்வங்களை மிகப்பெரும் தென்னிந்திய கோயில்களுக்கு வழங்கியவர் - கிருஷ்ணதேவராயர். 33. அரேபியாவில் இருந்தும் ஈரானில் இருந்தும் பெரும் எண்ணிக்கையில் குதிரைகளை இறக்குமதி செய்தவர் – கிருஷ்ணதேவராயர். 34. போர்த்துக்கீசிய, அராபிய வணிகர்களுடன் அவர் சிறந்த நட்புறவை கொண்டிருந்தவர்- கிருஷ்ணதேவராயர். 35. கிருஷ்ணதேவராயர் அவையை அலங்கரித்த 8 இலக்கிய மேதைகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்- அஷ்டதிக்கஜங்கள். 36. 8 - இலக்கிய மேதைகளுள் மகத்தானவர் - அல்லசானி பெத்தண்ணா. 37. கிருஷ்ணதேவராய தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள்: அச்சுதராயர், முதலாம் வேங்கடர், சதாசிவராவ். 38. சதாசிவராவ்-ற்கு பகர ஆளுநராக பொறுப்பேற்றிருந்த தளபதி – ராமராயர். 39. சதாசிவராயரை பெயரளவிற்கு அரசராக வைத்துக்கொண்டு உண்மையான அரசராக ஆட்சி புரிந்தவர் – ராமராயர். 40. ராக்சச தங்கடி போர் - தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு- 1565. 41. கிழக்கு கர்நாடகத்தில் துங்கபத்ரா நதியின் கரையில் உள்ள விஜயநகரம் இருந்த இடம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது- ஹம்பி. 42. ஹம்பியை பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது- யுனெஸ்கோ. 43. சந்திரகிரியில் ஆர வீடு வம்சத்தின் ஆட்சியை தொடங்கியவர் - திருமலை தேவராயர். 44. விஜயநகரப் பேரரசின் நிர்வாக முறை : ● பேரரசு. ● மண்டலங்கள் (மாநிலங்கள்) – மண்டலேஸ்வரா. ● நாடுகள். (மாவட்டங்கள்). ● ஸ்தலங்கள். (வட்டங்கள்). ● கிராமங்கள். 45. ஆரவீடு வம்சத்தார் புதிய தலைநகர் – பெனுகொண்டா. 46. விஜயநகர அரசு வீழ்ச்சியுற்ற ஆண்டு - 1646. 47. கிராமம் தொடர்பான விடயங்களை நிர்வகித்தவர் – கௌளடா (கிராமத்தலைவர்). 48. விஜயநகரப் பேரரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் – வராகன். 49. போர்த்துகீசிய கட்டுமானக் கலைஞர்களின் உதவியுடன் மிகப்பெரும் ஏரி கட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ள பாரசீக பயணி- அப்துர் ரஸாக். 50. கில்டுகள் என்று அழைக்கப்படும் தொழில்சார் அமைப்புகள் - கைவினை குடிசைத்தொழில்களை முறைப்படுத்தின. 51. கைவினைஞர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தனித்தனியே கில்டுகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் - அப்துர் ரஸாக். 52. விஜயநகர வணிகம்: ● சீனா - பட்டு. ● மலபார் - வாசனைப்பொருட்கள். ● பர்மா - விலையயர்ந்த ஆபரண கற்கள். 53. அமுக்த மால்யதா எனும் நூலை எழுதியவர்– கிருஷ்ணதேவராயர்-தெலுங்கு. 54. ஜாம்பவதி கல்யாணம் எனும் நூலை எழுதியவர்-கிருஷ்ணதேவராயர்- சமஸ்கிருதம். 55. பாண்டுரங்கமாகத்தியம் நூலை எழுதியவர் - தெனாலி ராமகிருஷ்ணா. 56. சமஸ்கிருத, பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட நூல்களை தெலுங்கு மொழியில் மொழியாக்கம் செய்த புலவர்கள் : ● ஸ்ரீநாதர் ● பெத்தண்ணா ● ஜக்கம்மா ● துக்கண்ணா 57. தெலுங்கு இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாக கருதப்படுவது- அமுக்த மால்யதா. 58. பெரியாழ்வாரின் மகளான கோதை தேவியை பற்றியது- அமுக்த மால்யதா. 59. கடவுள் ரங்கநாதனுக்கு அணிவிப்பதற்காக தொடுக்கப்பட்ட மாலைகளை கடவுள் சூடுவதற்கு முன்பாக சூடிக்கொள்பவர்- கோதை தேவி. 60. அமுக்த மால்யதா என்பதன் பொருள் - தான் அணிந்த பின்னர் கொடுப்பவர். 61. விஜயநகர அரசர்களின் கோவில் கட்டுமான பாணி - விஜயநகர பாணி. 62. விஜய நகர கட்டடக் தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு - குதிரை. 63. 1347 - பாமினி அரசு யாரால் நிறுவப்பட்டது - அலாவுதீன் ஹசன், ஹசன் கங்கு. 64. தெளலதாபாத் நகரை கைப்பற்றி பாமன் ஷா என்ற பெயரில் சுல்தானாக அறிவித்துக் கொண்டவர்- அலாவுதீன் ஹசன். 65. 2 ஆண்டுகளில் அலாவுதீன் ஹாசன் பாமன் ஷா தலைநகரை மாற்றிய இடம்- குல்பர்கா. 1429 தலைநகரை மீண்டும் - பீடாருக்கு மாற்றப்பட்டது. 66. பாமினி வம்சத்தில் இடம்பெற்றுள்ள அரசர்கள் எத்தனை பேர் - 18. 67. அலாவுதீன் ஹசன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் - 11 ஆண்டுகள். 68. அலாவுதீன் ஹசன் தமது அரசை நான்கு மாகாணங்களாகப் பிரித்தார். அவை எவ்வாறு அழைக்கப்பட்டன – தராப். 69. பாமன் ஷாவை தொடர்ந்து அரச பதவி ஏற்றவர் - முதலாம் முகமது ஷா. 70. 1368 வாரங்கல் அரசோடு போராட்டத்தின் மூலம் கோல்கொண்டா கோட்டை, பச்சை கலந்த நீல வண்ண கற்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் உட்பட பெரும் செல்வத்தை இழப்பீடாகப் பெற்றவர்- முதலாம் முகமது ஷா. 71. பாரசீக அரசர்களின் அணிகலன்களில் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களில் இத்தகைய பச்சை கலந்த நீல வண்ண கல்லாலான அரியணையும் ஒன்றாகுமெனப் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளவர் – பிர்தெளசி. 72. ஷா நாமா எனும் நூலை எழுதியவர் - பிர்தெளசி. 73. ஹைதராபாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் ஒரு குன்றின் மீது 120 மீட்டர் உயரத்தில் உள்ளது- கோல்கொண்டா கோட்டை. 74. ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு பெயர் பெற்றது-கோல்கொண்டா கோட்டை. 75. கோல்கொண்டா கோட்டையின் உயரமான இடம் - பால ஹிசார். 76. பாமினி அரசிற்கு வலுவான ஒர் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் - முதலாம் முகமது ஷா. 77. குல்பர்காவில் முதலாம் முகமது ஷா இரண்டு மகசூதிகளை கட்டினார். அதில் 1367 கட்டிமுடிக்கப்பட்ட முதல் மசூதி – மகாமசூதி. 216 அடி x16 அடி 78. முகமது ஷா மகன்- முஜாகித். 79. முகமது ஷாவைத் தொடர்ந்து பதவியேற்றவர் - முஜாகித். 80. தாவூத் என்பவரின் சகோதரனின் மகன் என்ன பெயரில் அரியணை ஏற்றப்பட்டார் - இரண்டாம் முகமது. 81. யாருடைய அரசில் அமைதி நிலவியது - இரண்டாம் முகமது. 82. தமது அரசவையை பண்பாட்டு, கல்வி மையமாக மாற்றுவதில் தனது நேரத்தின் பெரும்பகுதியை செலவிட்டவர் - இரண்டாம் முகமது. 83. முகமது கவான் யாருடைய ஆட்சிக்காலத்தில் சிறந்த அமைச்சராக விளங்கினார் - மூன்றாம் முகமது. 84. இஸ்லாமிய கோட்பாடுகளிலும், பாரசீக மொழியிலும், கணிதத்திலும் பெரும் புலமை பெற்றவராய் இருந்தவர்- முகமது கவான் பிறப்பால் பாரசீகர். 85. ராணுவ நடவடிக்கைகளுக்கும் நிர்வாக சீர்திருத்தங்களும் பெயர் பெற்றவர்- முகமது கவான். 86. பாரசீக வேதியல் வல்லுநர்களை அழைத்து வெடிமருந்து தயாரிப்பதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் படையினருக்கு பயிற்சி அளித்தவர் - முகமது கவான். 87. பெல்காம் நடைபெற்ற விஜய நகருக்கு எதிரான போரில் வெடிமருந்தை பயன்படுத்தியவர்- முகமது கவான். 88. முகமது கவானத்துக்கு மரண தண்டனை வழங்கிய சுல்தான் - மூன்றாம் முகமது. 89. மூன்றாம் முகமதுவின் இறப்பிற்குப் பின்னர் முடி சூடிய சுல்தான்- முகமது (அ) சிகாபுதீன் முகமுது. 90. பாமினி அரசில் உள்ள 8 அமைச்சர்கள் : ● வக்கீல் - உஸ்-சல் தானா (அ) அரசின் பிரதம (அ) முதலமைச்சர் - அரசருக்கு அடுத்த நிலையில் துணை அதிகாரியாக செயல்படுவர். ● பேஷ்வா - நாட்டின் பிரதம மந்திரியோடு இணைந்து செயல்பட்டவர். ● வஸிரி- குல் - ஏனைய அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிட்டவர். ● அமிர் - இ- ஜூம்லா – நிதியமைச்சர். ● நஷீர் - உதவி நிதி அமைச்சர். ● வஷிர் - இ - அசாரப் - வெளியுறவுத்துறை அமைச்சர். ● கொத்தவால் - காவல்துறை தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர். ● சதார் - இ - ஜகான் - தலைமை நீதிபதி, சமயம் மற்றும் அறக்கொடைகளின் அமைச்சர். 91. பாமினி சுல்தான்கள் கட்டிட கலை காணப்படும் இடம்- குல்பர்கா. 92. அலாவுதீன் ஹசன் ஷா யாருடைய முயற்சியால் மூல்தானில் கல்வி கற்றார் –ஜாபர்கான். 93. கல்வி கற்பதை ஆதரித்த சுல்தான் - முதலாம் முகமது. 94. பீடாரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மதரஸாவை (கல்வி நிலையம்) அமைத்தவர்- முகமது கவான். 3000 - கையெழுத்துப் பிரதிகளை கொண்ட பெரிய நூலகத்தை கொண்டிருந்தது. 95. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்கு கொண்டு வந்தவர் - குமார கம்பணா. 96. பாமினி அரசில் சிறந்த மொழி அறிஞராகவும் கவிஞராகவும் விளங்கியவர் - சுல்தான் பெரோஸ். 97. ஆரவீடு வம்சத்தின் தலைநகரம்- பெனு கொண்டா. 98. ஓடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர் – பிரதாபருத்ரன். 99. விஜய நகர நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை கவனித்தவர்- கெளடா. 100. பொருத்துக: ● விஜய நகரம் - வெற்றியின் நகரம். ● பிரதாப ருத்ரா - ஒடிசாவின் ஆட்சியாளர். ● கிருஷ்ண தேவராயர் - அஷ்டதிக்கஜம். ● அப்துர் ரசாக் - பாரசீக சிற்பக் கலைஞர். ● தெனாலி ராமகிருஷ்ணா- பாண்டுரங்கமகாமத்தியம். ● மதுரா விஜயம் - கங்காதேவி. | 
| 11th விஜயநகர & பாமினி அரசுகள் | 
|---|
| 11th பாமினி - விஜயநகர பேரரசுகள் 1. ஷா நாமாவை எழுதியவர் – பிர்தெளசி. 2. விஜயநகர அரசின் முத்திரை - வராகம் / பன்றி. 3. கோல்கொண்டா கோட்டை கட்டியவர் காகத்திய வம்ச அரசர் -இராஜா கிருஷ்ண தேவ் 4. தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு -1565. 5. விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பு ஹரிஹரர், புக்கர் இருவரும் யாரிடம் பணி செய்தனர் - ஹொய்சாளர். 6. பாமினி அரச வம்சத்தை தோற்றுவித்தவர்-பாமன் ஷா/ ஜாபர்கான். 7. ஜாபர்கான் தன் தலைநகரை தேவகிரி யிலிருந்து எங்கு மாற்றினார்- குல்பர்கா. 8. விஜயநகர அரசின் வம்சாவழி, அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தகவல்களை தரும் இலக்கியங்கள் - மனு சரிதம், சாளுவவையுதயம். 9. கிருஷ்ணதேவராயரின் கீழ் இருந்த நாயக்க முறை பற்றிய தகவல்களை தரும் இலக்கியம் -ராயவாசகமு. 10. இபன் பதூதா - மொராக்கோ பயணி. 11. அப்துர் ரசாக் - பாரசிகப் பயணி. 12. நிகிடின் - ரஷ்ய பயணி. 13. டோமிங்கோ பயஸ், நூனிஸ் -போர்த்துக்கல் பயணி. 14. “வராகன்" என்ற குறிப்பிடப்பட்ட தங்க நாணயங்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டவர்கள்- விஜயநகர அரசு. 15. பாமன் ஷா சுமூகமான நிர்வாகத்திற்காக தன் ஆட்சிப் பகுதியை நான்கு பிரிவாகப் பிரித்தார் –குல்பர்கா, தெளலதாபாத், பீடார், பெரார். 16. பாமன் ஷா தான் பெற்ற வெற்றிகளை கூறும் வகையில் நாணயங்களில் தன் பெயரை எவ்வாறு பொறுத்துக் கொண்டார் - இரண்டாம் அலெக்சாண்டர். 17. கிருஷ்ண தேவராயர் ஆண்டாளைப் பற்றி எழுதிய நூல் -ஆமுக்த மால்யதா. 18. ஆகாய நீல வண்ணத்தில் உள்ள ரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட அரியணை பாரசீக அரசர்களின் ஒரு சிம்மாசனமாக இருந்தது எனக் குறிப்பிட்டவர்- பிர்தெளசி. 19. முதலாம் முகமது 1363 ஆம் ஆண்டுவாரங்கள் மீது படையெடுத்து கைப்பற்றியவை - கோல்கொண்டா, கருவூலங்கள், ரத்தினக்கற்கள், ரத்தினச் சிம்மாசனம். 20. குல்பர்காவில் இரு மசூதிகளை எழுப்பியவர்- முதலாம் முகமது. ஒரு மசூதி 1367 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. 21. முகமது கவான் யாருடைய ஆட்சிக்காலத்தில் சிறந்த அமைச்சராக விளங்கினார் -மூன்றாம் முகமது. 22. பீடாரில் ஒரு மதராசவை நிறுவியவர்- முகமது கவான். ● நூலகத்தில் - 3000 கையெழுத்து நூல்கள் இருந்தன. 23. பாமினியின் 5 அரசுகள் இணைந்து விஜயநகரை எதிர்த்து போரில் சந்தித்தன - இந்தப் போர் எவ்வாறு அழைக்கப்படுகிறது - தலைக்கோட்டை போர்/ராச்ஷி தங்கடி போர். 24. 1495-1496 கோல்கொண்டா கோட்டை எந்த சுல்தானுக்கு ஒரு ஜாகீராக-(நிலம்) தரப்பட்டது - குலிகுதப் ஷா. 25. 17 நூற்றாண்டில் கோல்கொண்டா ஒரு சிறந்த வைரச் சந்தையாக திகழ்ந்தது- கோஹினூர் வைரம். 26. கோல்கொண்டா கோட்டை கட்டியவர் - ராஜா கிருஷ்ணதேவ். 27. கோல்கொண்டா கோட்டை ஹைதராபாத்தில் 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 28. கோல்கொண்டா கோட்டை 120 மீட்டர் உயரத்தில் மலைமீது அமைந்துள்ளது. 29. ஒலி அம்ச அடிப்படையில் சிறந்த கட்டட கலையின் அம்சம் - கோல்கொண்டா கோட்டை. 30. குதுப்ஷாக்கின் கல்லறை உள்ள இடம் - கோல்கொண்டா கோட்டை. 31. கோல்கொண்டா கோட்டையின் உயர்ந்த பகுதி - பாலா ஹிசார் என்று அழைக்கப்படுகிறது. 32. நுழைவாயில் பகுதி - பதோதர் வாசா (அ) வெற்றி நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது. 33. கோல்கொண்டா கோட்டையில் – 4 சிறிய கோட்டைகள் உள்ளன. 34. 1687 ல் கோல்கொண்டா கோட்டை 8 மாதங்கள் முற்றுகையிட்டு கைப்பற்றியவர்- ஒவுரங்கசீப். 35. பாமினி சுல்தான்கள் எத்தனையாக பிரிந்தது: 5. ● பீஜப்பூர் ● அகமது நகர் ● பெரார் ● கோல்கொண்டா ● பீடார் 36. 1347- தெலதாபாத் நகரை கைப்பற்றி சுல்தானாக அறிவித்துக் கொண்டவர்-அலாவுதீன் ஹசன். 37. வெற்றியின் நகரம் என்று பொருள்படும் பேரரசு -விஜயநகர பேரரசு. 38. ஹரிகரர், புக்கர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் - சங்கம் வம்சம். 39. சிருங்கேரி சைவ மடத்தின் தலைவர்- வித்யாரண்யர். 40. விஜயநகர பேரரசு நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர்-வித்யாரண்யர். 41. விஜயநகர் அரசு உருவாகி எத்தனை ஆண்டுகளுக்கு பாமினி அரசு உருவானது-10. 42. மதுரா விஜயம் என்னும் நூல் எழுதியவர் - கங்காதேவி. 43. சங்கம வம்சத்தின் தலைசிறந்த அரசர் - இரண்டாம் தேவராயர். 44. சங்கம வம்சத்தின் கடைசி அரசராக இருந்தவர்- இரண்டாம் விருபாக்சி ராயர். 45. வீர நரசிம்மர் தம்பி - கிருஷ்ண தேவராயர். 46. துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்குரிய அரசர்- கிருஷ்ணதேவராயர். 47. போர்த்துக்கிசியப் பீராங்கிபடை வீரர்களின் உதவியோடு கோல்கொண்டா சுல்தானை தோற்கடித்தவர்- கிருஷ்ணதேவராயர். 48. ஹசாரா ராமசாமி கோவில் விட்டலா சுவாமி கோவில் போன்ற புகழ்பெற்ற கோவிலை கட்டியவர் - கிருஷ்ணதேவராயர். 49. அரேபியாவிலிருந்தும் ஈரனிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் குதிரைகளை இறக்குமதி செய்தவர் - கிருஷ்ணதேவராயர். 50. கிருஷ்ண தேவராயர் அரசவையை அலங்கரித்த தலைசிறந்த புலவர்- அல்லசானி பெத்தண்ணா. 51. பாமினி அரசின் மொழியியல் அறிஞரும் கவிஞரும் ஆக விளங்கியவர்-சுல்தான் பெரோஸி. 52. ஒலி தொடர்பான கட்டடக்கலைக்கு பெயர் பெற்ற இடம்-கோல்கொண்டா கோட்டை. 53. விஜயநகர் அரசின் கைவினைஞர்களுக்கு வர்த்தகர்களுக்கும் தனித்தனியே கில்டுகள் இருந்ததாக கூறியவர்- அப்துர்ரஸாக். 54. ஜாபர்கான் என்பவர் யாருடைய படைத்தளபதிகளின் ஒருவராக இருந்தார்-அலாவுதீன் கில்ஜி 55. விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு- குதிரை. 56. ஓடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர்-பிரதாபருத்திரா. 57. துளுவ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தவர்-நரசநாயக்கர். 58. அலாவுதீன் ஹசன் தமது அரசை எத்தனை மாகாணங்களாகப் பிரித்தார்- 4. அவை தராப் என அழைக்கப்பட்டன. 59. தெலுங்கு இலக்கியத்தின் தலைச்சிறந்த படைப்பாக கருதப்படும் நூல்-அமுக்தமால்யதா. 60. சமஸ்கிருத மொழியில் ஜாம்பவதி கல்யாணம் என்னும் நாடக நூலை எழுதியவர்-கிருஷ்ணதேவராயர். 61. முதலாம் முகமது ஷா வாரங்கல் அரசோடு போரிட்டு கோல்கொண்டா கோட்டையை கைப்பற்றிய ஆண்டு-1368. 62. விலைமதிக்க முடியா செல்வங்களேடு சந்திரகிரியைச் சென்றடைந்தார்- திருமலைதேவராயர். 63. சந்திரகிரியில் ஆரவீடு வம்சத்தின் ஆட்சியைக் தொடங்கியவர்- திருமலைதேவராயர். 64. ஆரவீடு வம்சத்தார் புதிய தலைநகரை எங்கு உருவாக்கினார்- பெனுகொண்டா. 65. பாண்டுரங்க மகாத்தியம் என்னும் நூலை எழுதியவர்- தெனாலி ராமகிருஷ்ணா. 66. மூன்றாம் முகமதுவின் கீழ் தனித்தன்மை மிக்க பிரதம அமைச்சராக பணிபுரிந்தவர்-முகமது கவான். 67. பாமினி பேரரசை தோற்றுவித்தவர் -அலாவுதீன் ஹசன் பாமன் ஷா / ஹசன்கங்கு பாமினி / ஜாபர்கான். 68. விஜய நகர 4 அரசுகள்: ● சங்கம வம்சம் தோற்றுவித்தவர்- ஹரிஹரர். புக்கர் - 1336 - 1485 . ● சாளுவ வம்சம் தோற்றுவித்தவர் - சாளுவ நரசிம்மர் - 1485 - 1505. ● துளுவ வம்சம் தோற்றுவித்தவர் -வீர நரசிம்மர்-1505 - 1570. ● ஆரவீடு வம்சம் தோற்றுவித்தவர்- ராமராஜாவின் சகோதரர் -1570 - 1650. 69. மதுரா விஜயம் என்ற நூலை எழுதியவர்- கங்கா தேவி. சமஸ்கிருத மொழி. 70. கிருஷ்ண தேவராயர் தனது வெற்றிகளின் நினைவாக வெற்றித்தூணை எங்கு நிறுவினார் -சிம்மாச்சலம். 71. கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் விஜயநகர பேரரசுக்கு இராணுவ உதவிகளை அளித்தவர்கள் - போர்த்துகீசியர்கள் – பத்கல். 72. பாரசீக வேதியியல் வல்லுநர்களின்வழிகாட்டுதலின் அடிப்படையில் வெடிமருந்தை பயன்படுத்தியவர்-முகமது கவான். 73. கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் விஜய நகருக்கு வருகை தந்த சமகாலத்து வெளிநாட்டு பயணிகள் -நூனிஸ், டோமிங்கோ பயஸ். 74. கிருஷ்ணா- துங்கபத்திரா நதிகளுக்கு இடைப்பட்ட வளம் மிக்க பகுதி- ரெய்ச்சூர். 75. பாமினி பேரரசு நிர்வாகம்: ● வகில் - உஸ் - சுல்தானா - படைத் தலைவர், அரசருக்கு அடுத்த நிலை. ● வசீர் –குல் - மற்ற அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிடுபவர். ● அமீர் - இ – ஜீம்லா - நிதி அமைச்சர். ● வசீர் - இ - அஷ்ரப் - வெளியுறவு அமைச்சர். ● நசீர் - நிதித்துறை இணை அமைச்சர். ● பேஸ்வா - அரச படைகளின் பொறுப்பாளர். ● கொத்வால் - காவல்துறை தலைவர், தலைநகரின் நீதிபதி. ● சதர் - இ - ஜஹான் - தலைமை நீதிபதி, சமய அறநிலையத் துறை அமைச்சர். 76. நாயக் முறையை அறிமுகப்படுத்தியவர் -கிருஷ்ண தேவராயர். 77. 1565 - தலைக்கோட்டைப் போரில் தோல்வியடைந்தது - விஜயநகர் பேரரசு. 78. பிரதானி என்றால் – ஆளுநர். 79. நாயக்குகள் - பேட்டை எனும் வணிகமையத்தின் நிறுவினர் 80. ராஜ்யா - மண்டலங்கள் பிரிக்கப்பட்டது. 81. சில கல்வெட்டு சான்றுகளின்படி வித்யாரண்யர் 14 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்தவர். 82. பாரசீகத்தில் பிறந்தவர்- முகமது கவான். 83. விஜயநகர பேரரசின் தலைநகரம் - ஹம்பி. 84. குமார கம்பணணாவின் தன் நம்பிக்கைக்குரிய தளபதி - மாரையா நாயக்கர். 85. தமிழகத்தின் வட மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டல பகுதியை ஆட்சி செய்தவர்-சம்புவராயர். 86. கொச்சி சாமுத்திரி அரசவைக்கும் - விஜயநகரத்திற்கும் வருகை தந்த வெளிநாட்டு பயணி (இரண்டாம் தேவராயர்) -அப்துர் ரசாக். 87. சாளுவ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர்-சாளுவ நரசிம்மர். 88. எந்த இரு பகுதிகளுக்கு இடைபடு நாடாக புதுக்கோட்டை இருந்தது -சோழ மற்றும் பாண்டிய அரசுகள். 89. விஜயநகர அரசு 200 க்கும் மேற்பட்ட நாயக்குகளாக பிரிக்கப்பட்டு இருந்ததாக கூறியவர்- நூனிஸ். 90. அரசருக்கு ராணுவ உதவி செய்தது - நாயக். குதிரைப்படை, காலாட்படை. ● மகா பிரதானி - முதலமைச்சர். ● தளவாய் - தளபதி. ● வாசல் - அரண்மனை பாதுகாவலர். ● ராயசம் - செயலர் / கணக்கர். ● காரிய கர்த்தா - செயல் முகவர். | 
 

minnal vega kanitham