Type Here to Get Search Results !

Top 50 lessons || Lesson - 27

Contents
12th காந்தியடிகளின் தேசிய தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றினைத்தல்
1. மோகன் தாஸ் கரஞ்சந்த் காந்தி 1868இல் எங்கு பிறந்தார்? கடற்கரையோர நகரான போர் பந்தரில்
2. இந்தியாவை விட்டு காந்தியடிகள் எத்தனை ஆண்டுகள் வெளியே இருந்தார்? 20 ஆண்டுகள்
3. யார் அறிவுரையை ஏற்று காந்தியடிகள் இந்தியா திரும்பினார்? கோபால கிருஷ்ண கோகலே
4. சபர்மதி ஆசிரமம் எங்கு உள்ளது? அகமதாபாத்
5. சபர்மதி ஆசிரமம் யாரால் நிறுவப்பட்டது? காந்தியடிகள்
6. அகிம்சையும் உண்மையும் தைரியமானவர்கள் மற்றும் அச்சமற்றவர்களின் ஆயுதங்களாக விளங்கும் என கூறியவர்? காந்தியடிகள்
7. பீகாரின் சம்பரான் மாவட்டத்தில் உள்ள எந்த விவசாயிகள் ஐரோ ப்பிய வர்த்தகர்களால் பெரிதும். ஏமாற்றப்பட்டனர்? கருநீல சாய விவசாயிகள்
8. கருநிலச் சாய விவசாயிகளிடம் இருந்த எத்தனை பங்கு நிலத்தில் அவர்கள் கரு நீல சாயத்தை கட்டாயம் விளைவிக்க வேண்டும்? 3:20 பங்குகள்
9. சம்பரான் இயக்கம் எந்த ஆண்டு நடைபெற்றது? 1917
10. மிகக். குறைவான ஊதியம் பெற்ற பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்ற முதலாளிகள் மறுத்ததை அடுத்து எத்தனை சதவீத ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு காந்தியடிகள் அவர்களுக்கு அறிவுரை கூறினார்? 35 சதவீத ஊதிய உயர்வு.
11. எந்த ஆண்டு நில வருவாய் வசூலை ரத்து செய்யுமாறு காலணி ஆட்சி நிர்வாகத்திடம் கேதா மாவட்ட விவசாயிகள் கோரினார்? 1918
12. அரசின் பஞ்சகால விதியின் படி பயிர் சாகுபடி சரா சரியாகேத்தனை சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் பயிரிடுவோர் முழு நில வரி ரத்துக்கு தகுதி பெறுவர்? 25சதவீதம்
13. பிளேக் நோயாலும் அதிக விலை ஏற்றத் தாலும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்திய பணியாளர் சங்கத்தின் உறுப்பினராக இருந்த யாரிடம் உதவி கோரி அணுகினர்? காந்தியடிகள்
14. இந்தியர்களுக்கு நலப்பணிகளில் பயிற்சி வழங்க இந்திய பணியாளர் சங்கத்தை எப்போது தோற்றுவித்தனர்? 1905
15. இந்திய பணியாளர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார்? கோபாலகிருஷ்ண கோகலே
16. பின்தங்கிய,ஊரக மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட நாட்டின் முதலாவது மதசார்பற்ற அமைப்பு எது? இந்திய பணியாளர் சங்கம்
17. இந்திய பணியாளர் சங்கத்தின் தலைமையகம் எங்கு இருந்தது? மஹாராஷ்டிரா வின் பூனாவில்
18. இந்திய பணியாளர் சங்கத்தின் முக்கிய கிளைகள் எங்கு இருந்தது? சென்னை, மும்பை, அலகாபாத், நாக்பூர்
19. இந்தியாவுக்கான பிரிட்டிஷ் வெய்யிரவு துறை அமைச்சராக யார் இருந்தார்? எட்வின் மாண்டேகு
20. 1919இன் இந்திய கவுன்சில் சட்டம் என அழைக்கப்பட்டது எது? இந்தியாவுக்கான அரசியல் சாசன மாற்றம்
21. மத்திய சட்டப் பேரவையில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தனர்? 144
22. மத்திய சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்களில் எத்தனை உறுப்பினர்கள் நியமனம் செய்யபட வேண்டும்? 41
23. மாநிலங்களவையில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள்? 60
24. மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்களில் எத்தனை நபர்கள் நியமன உறுப்பினர்களாக இருந்தனர்? 26 நபர்கள்
25. வங்காளத்திலும் இந்தியாவின் கிழக்கு பகுதிகளிலும் தொடங்கப்பட்ட இயக்கம் எது? நாமசூத்ரா இயக்கம்
26. இந்தியாவின் வட மேற்கு பகுதியில் தொடங்கப்பட்ட இயக்கம் எது? ஆதிதர்மா இயக்கம்
27. மேற்கு இந்தியாவில் தொடங்கப்பட்ட இயக்கம் எது? சத்ய சோதக் இயக்கம்
28. 1972 ஆம் ஆண்டு ஜோதி ராவ் பூலேவின் எந்த புத்தகம் வெளி வந்தது? குலாம் கிரி
29. 1919 ஒரே ஆண்டில் இயற்றப்பட்ட இரண்டு சட்டம் எது? இந்திய கவுன்சில் கள் சட்டம் மற்று ரௌலட்சட்டம்
30. எப்போது ரௌ லட் சட்டத்துக்கு எதிராக வேலை நிறுத்தத்தை கடைபிடிக்கும் மாறு காந்தியடிகள் அழைப்பு விடுத்த தவுடன் நாடு முழுவதும் ஊக்கம் பிறந்தது? 1919 மார்ச் - ஏப்ரல் மாதங்களில்
31. அமிர்த சரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் பகுதியில் நிராயுதபணியாக மக்கள் திரள் மீது மிகக் கொடுமையான அரசியல் குற்றங்கள் இழை க்கபட்டன? 1919 ஏப்ரல்13
32. 1919 பஞ்சாபின் துணை ஆளுனர் யார்? மைக்கேல் ஓ டையர்
33. ரௌலட் சட்டத்துக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் இங்கு நடந்தது? பம்பாய் ,டெல்லி, கல்கத்தா,லாகூர்
34. கிலாபத்,பஞ்சாப் கொடுமை ஆகிய காரணங்களால் தொடங்கப்பட்ட இயக்கம் எது? ஒத்துழையாமை இயக்கம்
35. கிலாபத் மாநாட்டில் காந்தியடிகளின் வற்புறுத்தலின் பேரில் எப்போது ஓத்துழையாமை இயக்கத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது? 1920 ஆகஸ்டு 31
36. எப்போது கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலணி ஆதிக்க அரசுடன் ஓத்துழையாமையை கடைபிடிப்பது என்ற காந்தியடிகளின் யோசணைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது? 1920ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்
37. காங்கிரஸின் அடிப்படையை விரிவாக்கும் நடவடிக்கையாக பணியாளர்கள் கிராமங்களுக்கு சென்று எவ்வளவு கட்டணத்தில் கிராம த்தினரை காங்கிரஸில் சேர்க்க வேண்டும்? 4 அணா
48. இந்தியாவில் யார் 1921இல் மேற்கொண்ட பயணங்கள் புறக்கணிக்க பட்டது? வேல்ஸ் இளவரசர்
39.யார் தலைமையில் தமிழ்நாட்டில் ஒத்துதுழையாமை இயக்கம் நடத்தப்பட்டது? சி.ராஜாஜி, எஸ்.சத்தியமூர்த்தி, தந்தை ஈ. வெ. ரா பெரியார்
40. கேரளாவில் யாருக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்? ஜென்மி
41. காந்தியடிகள் எப்போது சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்க போவதாக அறிவித்தார்? 1922 பிப்ரவரி
42. கரையோர ஆந்திராவின் ராம்பா பகுதியில் யார் தலைமையில் பழங்குடியினர் கிளர்ச்சி செய்தனர்? அல்லூரி சீத்தாராம ராஜூ
43. மலபாரில் முஸ்லிம் விவசாயிகள் ஆயுதமேந்தி யாருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்? உயர்வகுப்பு நிலப்பிரபுக்கள் மற்றும் பிரிட்டிஷார்
44. சௌரி சௌரா இங்கு உள்ளது ? உத்திர பிரதேச மாவட்டம் கோரக்பூர்
45. மத்திய சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் சுயராஜிய கட்சி எத்தனை இடங்களை கைப்பற்றியது? 42
46. மதவாதப் போக்கு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் காந்தியடிகள் எத்தனை நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்? 21 நாட்கள்
47. மத்திய சட்டப்பேரவை அரங்குக்குள் 1929 ஏப்ரல் 8 இல் வெடிகுண்டு ஒன்றை யார் எறிந்தனர்? பகத்சிங், படுகேஸ்வர்
48. 1929 இல் எந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று டஜன் கம்யூனிச தலைவர்கள் நீண்ட கால சிறை தண்டனைகளை பெற்றனர்? மீரட் சதிதிட்ட வழக்கு
49. 1927 இல் மதராசில் நடந்த காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் எந்த குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது? சைமன் குழு
50. டிசம்பர் 1929 இல் கல்கத்தா கூடிய அனைத்து கட்சிகளும் எந்த விஷயத்தை ஏற்க்க தவறின? வகுப்புவாத பிரதிநிதித்துவம்
51. 1928 இல் காங்கிரஸ் மாநாட்டி ற்கு தலைமை வகித்தவர் யார்? மோதிலால் நேரு
52. 1929 இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் யார்? ஜாவகர்லால் நேரு
53. இந்திய விடுதலை மற்றும் காங்கிரஸ் வரளலாற்றில் காங்கிரஸ் கட்சியின் எந்த மாநாடு சிறப்பு வாய்ந்தது? லாகூர்
54. 1929 டிசம்பர் 31 இல் எங்கு மூவர்ண கொடி ஏற்றப்பட்டது? லாகூர்
55. தண்டி யாத்திரை எத்தனை கிலோமீட்டர் நடந்தது? 375 கிலோமீட்டர்
56. காந்தியடிகள் எத்தனையாவது நாளில் யாத்திரையாக நடந்து தண்டியை அடைந்தார்? 25 வது நாளில்
57. ஒரு பிடி உப்பை கையில் அள்ளி உப்புக்கு வரி செலுத்தும் சட்டத்தை தவிடுபொடி யாக்கியவர் யார்? மகாத்மா காந்தி
58. தமிழ் நாட்டில் யார் தலைமையில் உப்பு சத்தியாகிரகம் வேதாரண்யம் நோக்கி நடந்தது? ராஜாஜி
59. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் மொத்தம் எத்தனை கிலோமீட்டர் நடந்தது? 150 மைல்கள்
60. வேதான்ரண்ய உப்பு சத்தியாகிரகம் எப்போது ஆரம்பித்தது? 1930 ஏப்ரல் 13
61. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் எப்போது நடந்து முடிந்தது? 1930 ஏப்ரல் 28
62. தெனிந்திய மக்களை தட்டி எழுப்பி காலணி ஆதிக்க ஆட்சிக்கு எதிராக விழிப்புணர்வை ஊட்டி போராட்டத்தில் பங்கேற்க தூண்டியது எது? வேதாரன்யம் இயக்கம்
63. சைமன் குழு அறிக்கையை புறக்கணித்தது எது? லீக் காங்கிரஸ், இந்து மகா சபை, முஸ்லிம் 
64. காந்தி இர்வின் ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது? மார்ச் 5இல் 1931
65. காங்கிரசின் ஒரேயொரு பிரதிநிதியாக இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் யார்? காந்தியடிகள்
66. 1920 உள் ஒடுக்கப்பட்டவர்களின் மையப்புள்ளியாக விளங்கியவர் யார்? அம்பேத்கர்
67. எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்த அம்பேத்கர் கல்வி உதவித்தொகை பெற்று எப்போது பட்டதாரி ஆனார்? 1912
68. யார் உதவி பெற்று அமெரிக்கா சென்று பட்டமேற்பட்டதையும் ,கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை பெற்றார்? பரோடா மன்னர்
69. சட்டம் மற்றும் பொருளாதார படிப்புகளுக்காக அம்பேத்கர் எங்கு சென்றார்? இலண்டன்
70. 1916இல் மானுடவியல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு அம்பேத்கர் சமர்ப்பித்த ஆராய்ச்சி கட்டுரை பெயர் என்ன? இந்தியாவின் சாதிகள்
71. அரிய இந்திய புத்தகம் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட கட்டுரை எது? இந்தியாவின் சாதிகள்
72. வாய் பேச முடியாதவர்கள் தலைவர் யார்? மூக் நாயர்
73. அம்பேத்கார் தனது கருத்துகளை வெளிபடுத்த தொடங்கிய பத்திரிக்கை எது? மூக் நாயக்
74. அம்பேத்கர் தனது செயல்பாடுகளுக்கு தொடங்கிய அமைப்பு எது? ப ஹிஸ் கிரினாத் ஹிடாகரினி சபை
75. ஊருணிகள் மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத்தர அம்பேத்கர் தொடங்கிய அமைப்பு எது? மஹத் சத்தியாகிரகம்
76. வகுப்பு வாரித் தொகுதி ஒதுக்கீடு குறித்து பிரிட்டிஷ் அரசு எப்போது அறிவித்தது? 1932 ஆகஸ்ட்
77. அம்பேத்கார் மற்றும் காந்தியடிகள் இருவருக்கும் இடையே நாய் பெற்ற ஒப்பந்தம் எது? பூனா ஒப்பந்தம்
78. அம்பேத்கர் எத்தனை கட்சிகளை ஆரம்பித்தார்? இரண்டு
79. சுதந்திர தொழிலாளர் கட்சி எப்போது தோன்றியது? 1937
80. பட்டியல் இனத்தவர் கூட்டமைப்பு எப்போது தோன்றியது? 1942
81. 1942 ஆம் ஆண்டு பாதுகாப்பு துறை ஆலோசனை குழுவின் உறுப்பினராக நியமிக்க பட்டவர் யார் ? அம்பேத்கர்
82. சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசன குழுவின் தலைவராக தேர்ந்தடுக்கப்பட்டவர் யார்? அம்பேத்கர்
83. ஜாலியன் வாலாபாக் படுகொலை பிறகு யார் தனது அரச பட்டதை உடனடியாக துறந்தார்? ரவீந்திரநாத் தாகூர்
84. அரசப்பிரதி நிதிக்கு 1919 ஆம் ஆண்டு மே மாதம் யார் அரச பிரதிநிதிக்கு கடிதம் எழுதினார்? ரவீந்திரநாத் தாகூர்
85. இனக்கமற்ற சூழல் நிலவும் வேலையில் அவமானத்தின் சின்னமாக விளங்குகிறது என எந்த பட்டத்தை ரவீந்திரநாத் கூறுகிறார்? அரசப் பட்டம்
86. மனிதர்களாக கருத முடியாத நிலையில் மதிபிழந்து போன எனது நாட்டு மக்களுக்கு ஆதரவாக எனது தரப்பில் நான் மேற்கொள்ளும் செயலாக எனக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்பு பட்டங்களையும் ஒப்படைகிறேன் என கூறியவர் யார்? ரவீந்திரநாத் தாகூர்.
87. துருக்கி மக்கள் யார் தலைமையில் கிளர்ந்து எழுந்து சுல்தானி டம் இருந்து அரசியல் அதிகாரத்தை பறித்தனர்? முஸ்தபா கமால் பாட்சா
88. மாற்றம் விரும்பதோர் என அழைக்கப்பட்டவர் கள் யார்? ராஜாஜி, சர்தார் வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத்
89. காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் போது எத்தனை கைதிகளை விடுவிக்க இர்வின் ஒப்புக்கொண்டார்? 10000 கைதிகள்
90. காந்தி - இர்வின் ஒப்பந்தத்தை எங்கு நடத்த காங்கிரஸ் மாநாடு ஏற்றுக்கொண்டது? கராச்சி
91. எந்த் சிறையில் அடைக்கப்பட்ட போது காந்தியடிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்றார்? எர வாடா
92. அவுரி விவசாயிகள் இயக்கம் எங்கு நடைபெற்றது? சம்பரான்
92. விவசாயிகள் சத்தியாகிரகம் இங்கு நடைபெற்றது? கேதா
93. பருத்தி ஆலை தொழிலாளர்கள் சத்தியாகிரகம் எங்கு நடைபெற்றது? அகமதாபாத் (குஜராத்)
94. வேதாரன்யம் நடை பயணத்தில் ஈடுபடுவோருக்கு அடைக்கலம் தந்தால் கடும் நடவடிக்கைகளைசந்திக்க நேரிடும் என கூறிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் யார்? ஜெ. ஏ.தார்ன்
95. எந்த வழியாக நடந்த போது வேதாரண்யம் சத்தியாகிரக தொண்டர்களுக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது? கும்பகோணம், செம்மங்குடி, திருத்துறைப்பூண்டி
96. தீண்டத்தகாவர்கலுக்கு தனித் தொகுதிகள் வழங்கப்பட்டு உள்ளதை தன் வாழ் நாள் முழுவதும் எதிர்க்க போவாதாக மிகவும் வருத்தத்துடன் அறிவித்தவர் யார்? காந்தியடிகள்
97. காந்தியடிகள் தாண்டி யாத்திரையை எங்கு ஆரம்பித்தார்? குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில்
98. தமிழ்நாட்டில் இருந்து சுய ராஜ்யம் என்ற குழுவில் இணைந்தவர் யார்? சத்திய மூர்த்தி
99. இந்தியர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை பின்பற்றினால் எத்தனை ஆண்டுக்குள் சுதந்திரத்தை பெற்று தருவதாக காந்தியடிகள் கூறினார்? ஒரு ஆண்டு
100. மொழி சார்ந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு வகை செய்யும் மற்றொரு முக்கியத் தீர்மானம் எந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது? நாக்பூர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.