Type Here to Get Search Results !

Top 50 lessons || Lesson - 26

Contents
12th இந்திய விடுதலை போரில் முதல் உலக போரின் தாக்கம்
1. தெனிந்தியாவில் தனாட்சி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது? டாக்டர் அன்னி பெசன்ட்
2. 1916இல் இந்திய தேசத்திற்கு வலிமை சேர்த்தது எது? இந்துக்கள் முஸ்லிம்கள் இடையே கையெழுத்தான லக்னோ ஒப்பந்தம்.
3. ஆங்கில அரசு கொண்டு வந்த சட்டங்களில் மிக கொடுமையானது எது? ரௌலட் சட்டம்
4. முதல் உலகப் போரில் துருக்கி தோற்றதும் ,அதன் பின் கையெழுத்து இடப்பட்ட உடன்படிக்கை எது? செவ்ரேஸ்
5. டாக்டர் அன்னி பெசன்ட் எந்த நாட்டை சார்ந்தவர்? அயர்லாந்து
6. அயர்லாந்து தன்னாட்சி இயக்கம் ,ஃபேபியன் சோச லிசவாதிகள் ,குடும்ப கட்டுப்பாடு இயக்கங்கள் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றிய பெண் யார்? அன்னி பெசன்ட்
7. பிரம்ம ஞான சபையின் உறுப்பினராக அன்னி பெசன்ட் எப்போது இந்தியா வந்தார்? 1893
8. மத்திய இந்து கல்லூரியை பனாரசில் நிறுவியவர் யார்? அன்னி பெசன்ட
9. பனாரஸ் இந்து கல்லூரி யாரால் 1916 ஆம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது? மதன்மோகன். மாளவியா
10. யார் மறைவிற்கு பிறகு பிரம்ம ஞான சபையின் உலக அளவிலான தலைவராக பெசன்ட் அம்மையார் பதவி வகித்தார்? எச்.எஸ். ஆல்காட்
11. பிரம்ம ஞான சபையின் தலைமையகம் எது? சென்னையின் அடையார்
12. அன்னிபெசன்ட் அம்மையார் ஆதரவாளர்கள் யார்? ஜம்னாதாஸ் துவாரகா தாஸ்,ஜார்ஜ் அருண்டேல், சங்கர் லால் பண்கர், இந்துலால் யக்னிக்,சி.பி.ராமசாமி,பி.பி.வாடியா
13. பிரிட்டன் முதல் உலக போரில் ஈடுபடும் அறிவிப்பை எப்போது வெளியிட்டது?1914
14. முதல் உலகப் போரில் யாரை ஆதரித்து சுல்தான் போரில் நுழைந்தார்? மைய நாடுகள்
15. தி காமன் வீல் பத்திரிக்கை யார் தொடங்கினார்? அன்னி பெசன்ட்
16. தி காமன்வீல் பத்திரிக்கை தொடங்கப்பட்ட ஆண்டு? 1914
17. சமய சுதந்திரம் தேசியக் கல்வி,சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்திய பத்திரிக்கை எது? தி காமன்வீல்
20. இங்கிலாந்தின் கடினமான தருணம் இந்தியாவின் வாய்ப்புக்கான தருணம் என முழக்கம் இட்டவர் யார்? அன்னி பெசன்ட்
21. 1915 ஜூலை 14 இந்தியா என்ற தினசரி யாரால் தொடங்கப்பட்டது? அன்னி பெசன்ட்
22. எங்கு நிகழ்த்திய உரையில் தன்னாட்சி குறித்த தனது கொள்கையினை அன்னி பெசன்ட் வெளிப் படுத்தினார்? பம்பாய்
23. தன்னாட்சி என்பது என்ன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபைகள் மூலமாகவும் அவர்கள் சபைக்கு கடமைபட்டவர் களாகவும் விளங்க நடை பெறும் ஆட்சி.
24. அயர்லாந்து தன்னாட்சி இயக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை துவக்கப்பேவதாக முறைப்படி எப்போது அன்னி பெசன்ட் அறிவித்தார்? 1915 செப்டம்பர் 28
25. 1916 இல் எத்தனை தன்னாட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன? இரண்டு
26. தன்னாட்சி உடைய இரட்டைக் குறிக்கோள்கள் யாவை? பிரிட்டிஷ் இந்தியாவில் தான்னாட்சியை ஏற்படுத்துவது. தாய்நாடு பற்றிய பெருமைஉணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவது.
27. திலகர் 1916 இல் பெல்காமில் நடந்த பம்பாய் மாகாண மாநாட்டில் நிறுவப்பட்ட தன்னாட்சி இயக்கம் எது? திலகர் தன்னாட்சி இயக்கம்
28. திலகர் தன்னாட்சி இயக்கம் செயல்பட்ட பகுதி எது? பம்பாய்,மஹாராஷ்டிரா, கர்நாடகா,மத்திய மாகாணங்கள்,பெரார்
29. 1917 ஏப்ரல் இல் எத்தனை உறுப்பினர்கள் திலகர் தன்னாட்சி இயக்கத்தில் இருந்தனர்? 14 ஆயிரம்
30. 1918இன் தொடக்கத்தில் திலகர் தன்னாட்சி இயக்கத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தனர்? 32 ஆயிரம்
31. தன்னாட்சி பற்றிய கொள்கைகளை பரப்பியதற்காக1916 ஜூலை 23இல் அறுபதாவது வயதில் பிறந்த நாளில் கைது செய்யப்பட்டவர் யார்? திலகர்
32. அயர்லாந்தில் தன்னாட்சி இயக்கம் எப்போது முடுக்கம் பெற்றது? 1880
33. 1920 இல் அயர்லாந்து சட்ட இயக்கத்தில் வட அயர்லாந்தின் எத்தனை நாடுகளில் தன்னாட்சி இயக்கம் அமையபெற்றது? ஆறு நாடுகள்
34. 1921 இல் தெற்கில் ஆங்கிலோ அயர்லாந்து ஒப்பந்தத்தின் கீழ் எஞ்சிய நாடுகள் எத்தனையில் தன்னாட்சி அமைய பெற்றது? 26 நாடுகள்
35. மதராசில் தன்னாட்சி இயக்கத்தை எப்போது அன்னி பெசன்ட் தொடங்கினார்? செப்டம்பர் 1916
36. மதராஸ் தன்னாட்சி இயக்கத்தின் கிளைகள் எங்கெங்கு அமைந்தன? கான்பூர், அலகாபாத்,பனாரஸ்,மதுரா, கள்ளிக்கோட்டை,அகமது நகர்.
37. இந்திய விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை என்று அறிவித்தவர் யார்? அன்னி பெசன்ட்
38. 1917 ஜூன் மாதத்தில் ஊட்டியில் அரசியல் காரணங்களுக்காக சிறை பிடிக்க பட்டவர்கள் யார்? அன்னி பெசன்ட்,பி.பி.வாடியா,ஜார்ஜ் அருண்டேல்
39. அன்னி பெசன்ட் அம்மை யாருக்கு ஆதரவாக அரசப்பட்டதை துறந்தவர் யார்? சர்.எஸ்.சுப்ரமணியம்
40. தலைவர்கள் விடுதலை ஆகாவிட்டால் சட்ட மறுப்பு இயக்கத்தை அரசுக்கு எதிராக பயன்படுத்துவது குறித்து எப்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் திலகர் வலியுறுத்தினார்? 1917 ஜூலை 28
41. தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதே இந்திய பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என கூறியவர் ? மாண்டேகு
42. 1917 ஆகஸ்டு 20 இல் இந்தியாவின் புதிய வெளியுறவு துறை அமைச்சர் யார்? மாண்டேகு
43. 1917 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கல்கத்தா மாநாட்டிற்கு தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டவர் யார்? அன்னி பெசன்ட்
44.  காங்கிரஸ்,முஸ்லிம் லீக்,பிரம்ம ஞான சபையாளர்கள்,தொழிலாளர் அமைப்பினர் என பலதரப்பட்ட உறுப்பினர்களை கொண்ட முதல் இந்திய அரசியல் இயக்கம் எது? தன்னாட்சி இயக்கம்
46. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை யார் ஏற்றுக்கொண்ட பிறகு தன்னாட்சி இயக்கம் வீழ்ச்சி கண்டது? அன்னி பெசன்ட
47. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கோருவதற்காக மாற்றப்பட்ட தன்னாட்சி இயக்கம் பெயர் என்ன? இந்திய காமன்வெல்த் லீக்
48. 1929 இல் தன்னாட்சி இயக்கத்தை வி.கே.கிருஷ்ண மேனன் மாற்றம் செய்த பெயர் என்ன? இந்திய லீக்
49. மிதவாத தேசியவாதிகள் மற்றும் முஸ்லிம் லீக்கின் ஆதரவை பெரும் நோக்கிலும் தீவிர தேசிய வாதிகளைச் தனிமைப்படுத்தும் நோக்கிலும் பிரிட்டிஷார் 1909 இல் எந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டனர் ? மிண்டோ மார்லி சீர்திருத்தம்
50. எந்த காங்கிரஸ் தலைவர் தீவிர தேசிய தன்மைகளை கொண்டவர்களை வரவேற்றார்? அம்பிகா சரண் மஜூம்தார்
51. எந்த ஒப்பந்தத்தின் கீழ் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஒன்று இணைப்பதில் அன்னி பெசன்ட் மற்றும் திலகர் முக்கிய பங்காற்றினார்? லக்னோ ஒப்பந்தம் அல்லது காங்கிரஸ் ஒப்பந்தம்
52. மத்திய மாகாண சட்ட மேலவைகளின் உறுப்பினர்களில் எத்தனை நபர்கள் தேர்ந்து எடுக்க பட வேண்டும்? 4:5 பங்கு
53. மத்திய மாகாண சட்ட மேலவைகளில் நியமனம் செய்யப்பட்ட நபர்கள் எண்ணிக்கை? 1:5 பங்கு
54. மாகாண மற்றும் மத்திய சட்ட பேரவைகளின் எத்தனை உறுப்பினர்கள் பரந்துபட்ட வாக்குபதிவின் மூலம் தேர்ந்து எடுக்க படவேண்டும்? 4:5 பங்கு உறுப்பினர்
55. மத்திய நிர்வாக சபை உட்பட நிர்வாக சபை உறுப்பினர்களில் எவ்வளவு நபர்கள் அந்தந்த சபைகள் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட இந்தியர்களாக இருக்க வேண்டும்? 1:2 பங்கு
56. லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பி யார்?  ஜின்னா
57. இந்து முஸ்லிம் ஒற்றுமை தூதர் என அழைக்கப்படுபவர் யார்? ஜின்னா
58. ஜின்னாவை இந்து முஸ்லிம் ஒற்றுமை தூதர் என அழைத்தவர் யார்? சரோஜினி அம்மையார்
59. குற்ற உளவுத்துறை யாரால் உருவாக்கப்பட்டது? கர்சன் பிரபு
60. கர்சன் பிரபு எப்போது குற்ற உளவு துறையை உருவாக்கினார்? 1903
61. கூற்று: குற்ற உளவுத்துறை 1903 இல் கர்சன் பிரபுவால் உருவாக்கப்பட்டது. காரணம் : தேசியவாதிகளின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை ரகசியமாக சேகரிப்பதற்கு குற்ற துறை உருவாக்கப்பட்டது. கூற்று காரணம் சரி.காரணம் கூற்றை விளக்குகிறது
62. தேச துரோக கூட்டங்கள் தடுப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது? 1911
63. வெளிநாட்டினர் அவசர சட்டம் என்பது என்ன? வெளிநாட்டினர் நுழைவு களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டம்.
64. வெளிநாட்டினர் அவசர சட்டம் எப்போது இயற்றப்பட்டது? 1914
65. இந்திய பாதுகாப்பு ஒழுங்கு முறைச் சட்டம் என்பது என்ன? முதல் உலக போரின் போது தேசியவாத மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர கிரிமினல் சட்டமாக இயற்றப்பட்ட சட்டம் ஆகும.;
66. முதல் லாகூர் சதிதிட்ட வழக்கு விசாரணையின் போது பயன்படுத்த பட்டசட்டம் எது? இந்திய பாதுகாப்பு ஒழுங்குமுறை சட்டம்
67. கிலாபாத் இயக்கத்தை யார் தொடங்கினார்கள்? மௌலானா முகமது அலி,மௌலானா சௌகத் அலி என்ற முஸ்லிம் சகோதரர் கள்
68. ஆட்டோமன் அரசை ஆதரிப்பதையும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்ப்பதை யும் நோக்கங்களாக கொண்ட இயக்கம் எது? கிலாபத் இயக்கம்
69. கிலாபத் இயக்கத்தில் இணைந்து கொண்ட முஸ்லிம் தலைவர்கள் யார்? மௌலானா அபுல் கலாம் ஆசாத்,ஆ.யு. அன்சாரி,சேக் சௌகத் அலி சித்திக்,சையது அதுல்லா ஷா புகாரி ஆகியோர்.
70. மார்ச் 1920 இல் யார் பாரீசில் கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளை தூதாண்மை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்? முகமது அலி
71. உத்திரப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் கிலாப் என்ற அர்த்தமுடைய எந்த மொழி சொல்லை நிர்வாகத்துக்கு எதிரான பொதுகிளர்சியின் அடையாளமாக பயன் படுத்தினர்? உருது மொழி
72. தொழிற்சாலை பணியாளர்களின் நலன்களை பாதுகாக்க தங்களின் குரல் எழுப்பிய வர்கள் யார்? பம்பாய்யின் சோரப்ஜி ஷ பூ ர்ஜி,என்.எம். லோக்கான்டே ,வங்காளத்தின் சசிபாத பானர்ஜி.
73. 1917 ஆம் ஆண்டு எந்த புரட்சியின் வெற்றி இந்திய தொழிலாளர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது? போல்ஷ்விக் புரட்சி
74. இந்தியாவில் தொழிலாளர் இயக்க வரலாற்றில் முக்கிய பங்காற்றியது எது? மதராஸ்
75. 1918 இல் முதன் முறையாக அமைக்கப்பட்ட தொழிசங்கம் எது? மதராஸ் தொழிற்சங்கம்
76. முதல் தொழிற்சங்கம் யாரால் அமைக்கப்பட்டது? பி.பி.வாடியா
77. இந்திய தொழிலாளர்களின் உலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது எது? வகுப்பு பேதம் பற்றிய விழிப்புணர்வு,அறிவார்ந்த சிந்தனை
78. இந்திய தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எது ? முதல் உலக போர்
79. காங்கிரசில் ஏற்பட்ட பிளவு காரணமாக உருவான அரசியல் டாக்டர் அன்னி பெசன்ட் அம்மையார் தலைமையில் எது தோன்ற வலியமைத் தது? தன்னாட்சி இயக்கம்
80. இந்தியாவிற்கு தன்னாட்சி வேண்டும் என்று யார் தலைமையிலான இரு தன்னாட்சி இயக்கங்கள் கோரின? திலகர் மற்றும் பெசன்ட் அம்மையார்
81. இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம் வளர வழி வகுத்தது எது? ரஷ்யப் புரட்சி
82. இந்திய கடற்படை வீரர்கள் சங்கம் எங்கு தோன்றியது? கல்கத்தா மற்றும் பம்பாய்
83. பத்திரிக்கை ஊழியர் சங்கம் எங்கு தோன்றியது? பஞ்சாப்
84. இரயில்வே பணியாளர்கள் சங்கம் எங்கு தோன்றியது? பம்பாய்85.இந்திய நிலக்கரி ஊழியர்கள் சங்கம் எங்கு தோற்றுவிக்கப்பட்டது? ஜாரியா
86. துறைமுக பொறுப்பு கழக ஊழியர் சங்கம் எங்கு அமைக்கப்பட்டது? பம்பாய் மற்றும் கொல்கத்தா
87. 1920 இல் அக்டோபர் 30 இல் 1,40 ,854 உறுப்பினர்களை கொண்ட 64 தொழிற்சங்க களை சேர்ந்த பிரதிநிதிகள் பம்பாயில் சந்தித்து யார் தலைமையில் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸை நிறுவினர்? லாலா லாஜபதி ராய்
88. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸை ஆதரித்தவர்கள் யார்? மோதிலால் நேரு, ஜவர்கலால் நேரு,சி.ஆர்.தாஸ்,வல்லபாய் படேல்,சுபாஷ் சந்திர போஸ்
89. மெதுவாக தேசிய இயக்கத்தில் ஈடுபட்டது எது? தொழிற்சங்கங்கள் 90.ஜாலியன் வாலபாக் படு கொலை எப்போது நடந்தது? 1919 ஏப்ரல்
91. 1919 - 20 இல் பதிவு பெற்று இருந்த தொழிற் சங்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 107
92. 1946 - 47 இல் பதிவு பெற்ற தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு ? 1883
93. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்திய கட்சி ஒன்றை ஏற்படுத்த முயன்று தோல்வி கண்ட வர் யார்? அன்னி பெசன்ட்
94. ஆங்கிலேய காலனிகளை போன்று போருக்கு பிறகு இந்தியாவுக்கு தன்னாட்சி கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை பரப்பவும் கோரிக்கையை வலி யுருத்தவும் பொது கூட்டங்களையும் மானாடுகளையும் நடத்தியவர் யார்? அன்னி பெசன்ட்
95. பழங்கால ரோமானிய அரசிலும் , நவீன ஆங்கிலேய அரசிலும் பொதுபடை அம்சமாக இருந்தது எது? தன்னாட்சி
96. சோஹன் சிங் பக்னாவைத் தலைவராக கொண்ட அமைப்பு எது? பசுபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு
97. லாலா ஹர்தயாள் 1913 இல் நிறுவிய அமைப்பு எது? பசுபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு
98. லாலா ஹர்தயாள் எங்கு வசித்து வந்தார்? சான் பிரான்சிகோ
99. கதார் கட்சி என்று அழைக்கப்பட்ட அமைப்பு எது? பசுபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு
100. உருது மொழியில் கதார் என்றால் என்ன பொருள்? கிளர்ச்சி
101. கதார் என்ற பத்திரிகை யை வெளியிட்ட கட்சி எது? கதார் கட்சி
102. பசுபிக் பிரதேச இந்துஸ்தான் கட்சியில் இடம்பெற்று இருந்த பெரும்பாலான மக்கள் யார்? அமெரிக்காவில் மற்றும் கனடாவில் குடியேறிய சீக்கியர்கள்
103. 1913 நவம்பர் முதல் தேதி சான் பிரான்சிஸ்கோ வில் பதிப்பிக்கப்பட்ட வெளியான பத்திரிக்கை எது? கதார் பத்திரிக்கை
104. கதார் பத்திரிக்கை வெளியான மொழிகள் எது? உருது,ஹிந்தி,பஞ்சாபி
105. இந்திய சுதந்திர போராட்டத்தில் எந்த இயக்கம் மிக முக்கியமான அத்தியாயம் ஆகும்? கதார் இயக்கம்
106. இந்தியாவில் இருந்து குடியேறிய வர்களுடன் கனடாவில் இருந்து திரும்பிய கப்பல் எது? கோமக டமரு
107. புரட்சிகர அமைப்புகளின் தீவிர களமாக அமைந்தது எது? மஹாராஷ்டிரா,பஞ்சாப்,வங்காளம்
108. கூற்று : தொழிற்சங்கம் 1918 ஆம் ஆண்டு முதன் முறையாக தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது. காரணம் : பக்கிங்காம்,பெரம்பூர் ,கர் நாட்டிக் மில் ஆகியவற்றின் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்பட்ட தன் காரணமாக இந்த தொழிற் சங்கம் முக்கியமாக ஏற்படுத்தப் பட்டது. கூற்று காரணம் இரண்டும் சரி.கூற்றானது. காரணத்தை விளக்குகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.