Type Here to Get Search Results !

Day 39 New syllabus அடிப்படையில் 10th தமிழ் இயல் - 4

0
கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
அ) இயற்கை - செயற்கை
இயற்கையுடன் வாழ் செயற்கையுடன் வாழாதே.
ஆ) கொடு - கோடு
மணி கொடுத்த அளவுகோலைக் கொண்டு கோடு வரைந்தேன்.
இ) கொள் - கோள்
கோள்களின் இயக்கம் பற்றி அறிந்து கொள்
ஈ) சிறு - சீறு
சிறு புற்றிலிருந்து வந்த பாம்பு சீறுவதைக் கண்டேன்
உ) தான் - தாம்
தான் செய்யும் தவறு தாம் அறிந்தே செய்யக்கூடாது.
ஊ) விதி - வீதி
ஹரிச்சந்திரனின் தலை விதி அவனை வீதியில் நிறுத்தியது

பெருமாள் திருமொழி - குலசேகராழ்வார்
நூல் வெளி
• நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691ஆவது பாசுரம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
• பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது.
• இதில் 105 பாடல்கள் உள்ளன.
• இதனைப் பாடியவர் குலசேகராழ்வார்.
• இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.

பரிபாடல் - கீரந்தையார் (எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று)
நூல் வெளி
• பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
• பாடப்பகுதியிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார்.
• இந்நூல் "ஓங்கு பரிபாடல்" எனும் புகழுடையது.
• இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்.
• உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
• இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன.
• ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு அறிவாற்றல், இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம்.

நீதிவெண்பா - கா.ப. செய்குதம்பிப் பாவலர்
நூல் வெளி
• ‘சதாவதானம்’ என்னும் கலையில் சிறந்து விளங்கிய செய்குதம்பிப் பாவலர் (1874 – 1950), கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்;
• பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்;
• சீறாப்புராணத்திற்கு -உரை எழுதியவர்;
• 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்று பாராட்டுப்பெற்றார்.
• இவர் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் உள்ளன.
• இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

சொல்லும் பொருளும்
• விசும்பு - வானம்
• ஊழி - யுகம்
• ஊழ் - முறை
• தண்பெயல் - குளிர்ந்த மழை
• ஆர்தருபு - வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
• பீடு - சிறப்பு
• ஈண்டி - செறிந்து திரண்டு

இலக்கணக் குறிப்பு
• ஊழ்ஊழ் - அடுக்குத் தொடர்
• வளர்வானம் - வினைத்தொகை
• செந்தீ - பண்புத்தொகை
• வாரா (ஒன்றன்)- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

கலைச் சொல் அறிவோம்
• Nanotechnology - மீநுண்தொழில்நுட்பம்
• Biotechnology - உயிரித் தொழில்நுட்பம்
• Ultraviolet rays - புற ஊதாக் கதிர்கள்
• Space Technology - விண்வெளித் தொழில்நுட்பம்
• Cosmic rays - விண்வெளிக் கதிர்கள்
• Infrared rays - அகச்சிவப்புக் கதிர்கள்
• தனிநபர் கணினிகளின் (Personal Computers)
• மின்னணுப் புரட்சிக்குக் (Digital Revolution)
• இயல்பான மொழிநடையை உருவாக்குதல் (Natural Language Generation)
• மென்பொருள் (Software)
• கணினிச் செயல்திட்ட வரைவு (Computer Program)
• உலாவியில் (browser)
• காணொலிகளைத் தொகுக்கும் மென்பொருள்களில் (Video Editing)
• மென்பொருளை (Chatbot)
• தரவு அறிவியலாளர்களின் (Data Scientists)
• மின்னணுக் கல்வியறிவையும் (Digital Literacy)
• மின்னணுச் சந்தைப்படுத்துதலையும் (Digital Marketing)
• பக்கவாதம் (Amyotrophic lateral Scleroses)
• அடுத்த தலைமுறை (The next generation),
• பெருவெடிப்புக் கோட்பாடு (The Bigbang Theory)
• இயந்திர மனிதன் (Robo)
• திறன் பேசி (Smart Phone)

கருத்துரையிடுக

0 கருத்துகள்