Type Here to Get Search Results !

Day 38 New syllabus அடிப்படையில் 10th தமிழ் இயல் - 3

0
வட்டார வழக்குச் சொற்கள்
வட்டார வழக்குச் சொற்கள்
பாச்சல் - பாத்தி
பதனம் - கவனமாக
நீத்துப்பாகம் - மேல்கஞ்சி
கடிச்சு குடித்தல் - வாய்வைத்துக்குடித்தல்
மகுளி - சோற்றுக் கஞ்சி
வரத்துக்காரன் - புதியவன்
சடைத்து புளித்து - சலிப்பு
அலுக்கம் - அழுத்தம் (அணுக்கம்)
தொலவட்டையில் - தொலைவில்

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
சிலை – சீலை : சிலையைத் திரைச்சீலையால் மூடியவை.
தொடு - தோடு : மதி பூக்களைத் தொடுத்து அணித்து கொண்டு, தோடுவையும் அணிந்து கொண்டாள்
மடு - மாடு : மடுவில் மாடுகள் தண்ணீர் குடித்தன
மலை - மாலை : மலை மீது ஏறி மாலையில் விளையாடினோம்.
வளி – வாளி : வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சியால் பெருமழை பெய்தவுடன் வாளியில் தண்ணீர் பிடித்தேன்.
விடு – வீடு : மணி விடுதலை பெற்று வீடு திரும்பினேன்

தெரியுமா?, தெரிந்து தெளிவோம்
தெரியுமா?
ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர்
• பண்டைத் தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும்போது, அவர்களைப் பிரிய மனமின்றி வருந்தினர்.
• மேலும், வழியனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்வரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர்.
• "காலின் ஏழடிப் பின் சென்று" - பொருநராற்றுப்படை, 166
தெரிந்து தெளிவோம்
வாழை இலையில் விருந்து
• தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது.
• நம் மக்கள் வாழை இலையின் மருத்துவப் பயன்களை அன்றே அறிந்திருந்தனர்.
• தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர்.
• உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும்.
• ஏனென்றால் வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம். இலையில் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவார்கள்.
• உண்பவர் மனமறிந்து, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறுவர்.
எத்திசையும் புகழ் மணக்க.
• அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் 'வாழையிலை விருந்து விழா'வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.
• தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்டு வாழையிலையில் விருந்து வைக்கின்றனர்.
• முருங்கைக்காய் சாம்பார், மோர்க்குழம்பு, வேப்பம்பூ ரசம், வெண்டைக்காய்க் கூட்டு, தினைப் பாயசம், அப்பளம் எனச் சுவையாகத் தமிழர் விருந்து கொடுக்கின்றனர்.
• அங்கு வாழும் தமிழர்கள் பலரும் இந்த விருந்தில் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர். தொடர்ந்து பல பண்பாட்டு நிகழ்வுகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.
தெரிந்து தெளிவோம்
கரிசல் இலக்கியம்
• கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம்.
• காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் இவை.
• கரிசல் மண்ணின் படைப்பாளி கு. அழகிரிசாமி கி.ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கியவர்.
• கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் கி.ராஜநாராயணன்.
• அந்தக் கரிசல் இலக்கியப் பரம்பரை இன்றளவும் தொடர்கிறது பா.செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ.தர்மன், வேல ராமமூர்த்தி, இன்னும் பலரின் மூலமாக...
தெரியுமா?
• ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடியும் கூட்டு நிலைப் பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம்.
• வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டு நிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.
எ.கா. - கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி

கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன்
நூல் வெளி
• கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே கோபல்லபுரத்து மக்கள்.
• ஆசிரியர் தன் சொந்த ஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார்.
• இதன் ஒரு பகுதியே இங்குப் பாடமாக உள்ளது.
• இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது இந்நூல்.
• இது 1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.
• கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
• இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும்.
• இவரின் கதைகள் அனைத்தும் கி.ராஜநாராயணன் கதைகள் என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன; இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
• இவர் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் 'கரிசல் இலக்கியம்' என்று அழைக்கப்படுகின்றன.
• எழுத்துலகில் இவர் கி.ரா. என்று குறிப்பிடப்படுகிறார்.

மலைபடுகடாம் – பெருங்கௌசிகனார் (பத்துப்பாட்டு நூல்களுள்)
நூல் வெளி
• பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ‘மலைபடுகடாம்’.
• 583 அடிகளைக் கொண்ட இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது;
• மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
• நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்.

காசிக்காண்டம்
நூல் வெளி
• காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்.
• இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது.
• 'இல்லொழுக்கங் கூறிய' பகுதியிலுள்ள பதினேழாவது பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.
• முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்.
• தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்த இவர் இயற்றிய நூலே காசிக்காண்டம்.
• இவரின் மற்றொரு நூலான வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது.
• சீவலமாறன் என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு.
• நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் ஆகியனவும் இவர் இயற்றிய நூல்கள்.

கலைச்சொல் அறிவோம்
செவ்விலக்கியம் - Classical literature
காப்பிய இலக்கியம் - Epic literature
பக்தி இலக்கியம் - Devotional literature
பண்டைய இலக்கியம் - Ancient literature
வட்டார இலக்கியம் - Regional literature
நாட்டுப்புற இலக்கியம் - Folk literature
நவீன இலக்கியம் - Modern literature

பின்வருவனற்றுள் முறையான தொடர்.
(அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கும் இடமுண்டு
(ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
(இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
(ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு)
[விடை: தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு]

இலக்கணக்குறிப்பு
• நன்மொழி - பண்புத்தொகை
• வியத்தல், நோக்கல், எழுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் - தொழிற்பெயர்கள்
• அசைஇ, கெழீஇ - சொல்லிசை அளபெடைகள்

சொல்லும் பொருளும்
• அருகுற - அருகில்
• முகமன் - ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்
• அசைஇ - இளைப்பாறி,
• அல்கி - தங்கி
• கடும்பு - சுற்றம்,
• நரலும் - ஒலிக்கும்
• ஆரி - அருமை,
• படுகர் - பள்ளம்
• வயிரியம் - கூத்தர்,
• வேவை - வெந்தது
• இறடி - தினை,
• பொம்மல் - சோறு
”சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் ”பாக்கம்” என்பது
அ) புத்தூர்
ஆ) மூதூர்
இ) பேரூர்
ஈ) சிற்றூர்.
[விடை: சிற்றூர்]

பழமொழிகளை நிறைவு செய்க.
1. உப்பில்லாப் ------------------------. 2. ஒரு பானை ------------------------. 3. உப்பிட்டவரை ------------------------. 4. விருந்தும் ------------------------. 5. அளவுக்கு ------------------------. விடை : 1. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே 2. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 3. உப்பிட்டவரை உள்ளவும் நினை 4. விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் 5. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

அகராதியில் கண்டு பொருள் எழுதுக.
• ஊண் - உணவு, இரை
• ஊன் - மாமிசம், உடல்
• திணை - ஒழுக்கம்
• தினை - தானிய வகை
• அண்ணம் - மேல்வாய், உள்நாக்கு
• அன்னம் - பறவை, அரிசி (சோறு)
• வெல்லம் – கருப்பஞ்சாற்றின் கட்டி
• வெள்ளம் – நீர்ப்பெருக்கு

பத்தியைப் படித்து கருத்தைச் சுருக்கி எழுதுக.
பழைய சோறு
பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம்வரை சுவைத்தவள் நான். அவித்து காய்ந்து குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாகு முன் கைநிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன். பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும்; விடிந்த இந்தக் காலையில் அதன் பெயர் பழையசோறு அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம் போல் குடிப்பது ஒருவகை. வாழை இலையில் அந்தப் பழைய சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்த்து கொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்டவைத்த முதல் நாள் குழம்பு இன்னும் உச்சம்! நல்ல பழையது மாம்பழ வாசம் வீசுமாம். பழைய சோறு - அது கிராமத்து உன்னதம்.
"மைக்கடல் முத்துக்கு ஈடாய்மிக்க நெல்முத்து“ ....... முக்கூடற்பள்ளு"
கண்ணன், பிரசாந்தி சேகரம் -அடிசில் 2017
விடை :
அறுவடை செய்த நெல்லை நீராவியில் அவித்து காயவைத்து குத்தி எடுத்த புழுங்கல் அரிசியை சோறாக்கி அதனை உச்சி வெயிலுக்கு ஏற்ற உணவாக இரவு நேரத்தில் நீரில் ஊறவைத்து கிடைத்த பழைய சோற்றுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வடுமாங்காய் உப்பு நாரத்தங்காய் மற்றும் சுண்ட வைத்தகுழம்பு இவற்றில் ஒன்றைக் கூட்டாக வைத்து சாப்பிடுவது கிராமத்து உன்னதம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்