கலைச்சொல் அறிவோம் |
---|
Emblem - சின்னம்
Thesis - ஆய்வேடு Intellectual - அறிவாளர் Symbolism - குறியீட்டியல் lute music - யாழிசை chamber - அறை to look up - எட்டிப்பார்த்தல் grand-daughter - பேத்தி rote - நெட்டுரு didactic compilation - நீதி நூல் திரட்டு |
வினா வகை (10th New Book) |
---|
அறிவினா, அறியா வினா, ஐயவினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என்று வினா ஆறு வகைப்படும். |
விடை வகை (10th New Book) |
---|
சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்று விடை எட்டு வகைப்படும்.
முதல் மூன்று வகையும் நேரடி விடைகளாக இருப்பதால் வெளிப்படை விடைகள் எனவும் அடுத்த ஐந்து விடைகளும் குறிப்பாக இருப்பதால் குறிப்பு விடைகள் எனவும் கொள்ளலாம். |
"இங்கு நகரப் பேருந்து நிற்குமா?" என்று வழிப் போக்கர் கேட்டது ----------------------- வினா. "அதோ, அங்கே நிற்கும்." என்று மற்றொருவர் கூறியது ----------- விடை. அ) ஐயவினா, வினா எதிர் வினாதல் ஆ) அறிவினா, மறைவிடை இ) அறியா வினா, சுட்டு விடை ஈ) கொளல் வினா, இனமொழி விடை [விடை: அறியா வினா, சுட்டு விடை]
பாரதியின் மொழிபெயர்ப்பு |
---|
Exhibition - காட்சி, பொருட்காட்சி
East Indian Railways - இருப்புப் பாதை Revolution - புரட்சி Strike - தொழில் நிறுத்தி இருத்தல், தொழில் நிறுத்தம், வேலை நிறுத்தம் அருந்துணை என்பதனைப் பிரித்தால் .................... (அ) அருமை + துணை (ஆ) அரு + துணை (இ) அருமை + இணை (ஈ) அரு + இணை [விடை: அருமை + துணை] |
இப்பகுதியிலிருந்து வினாக்களை உருவாக்குக. |
---|
ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு
ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (Translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது. ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது, விளக்குவது (Interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்கத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பர். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக் கொண்டு அவரது மொழியில் புரிந்து கொள்வார். இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக. 1. மொழிபெயர்ப்பு என்பது யாது? 2. ஐ.நா. அவையில் பார்வையாளர், மற்றவர் பேசுவதை எவ்வாறு புரிந்து கொள்வார்? 3. ‘Headphone' என்பதன் தமிழாக்கம் என்ன? 4. ஐ.நா. அவையில் மொழிபெயர்ப்பாளர்களின் பணி யாது? 5. ஐ.நா. அவையில் மொழிபெயர்ப்பாளர்கள் எவ்விடத்தில் இருப்பார்? 6. எந்த அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழியில் புரிந்து கொள்ள எங்கு வசதி செய்யப்பட்டுள்ளது? |
தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க. |
---|
தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான். எ.கா. அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான். 1. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும். குளிர்ந்த நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும். 2. வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது. இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தரும். 3. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும். ஒழுக்கத்துடன் அறிவின் ஊற்றாகிய கல்வியே ஒருவர்க்கு உயர்வு தரும். 4. குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேண்டும். படைப்பாற்றல் மிக்க குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேண்டும். |
தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க. |
---|
1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் ------ யாவும் அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ------- நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும். (புதையல், புதைத்தல்).
2. காட்டு விலங்குகளைச்............... தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் ............. திருந்த உதவகிறது. (சுட்டல், சுடுதல்) 3. காற்றின் மெல்லிய .............. பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான .............. பூக்களை மாலையாக்குகிறது. (தொடுத்தல், தொடுதல்) 4. பசுமையான .............. ஐக் .............. கண்ணுக்கு நல்லது. (காணுதல், காட்சி) 5. பொதுவாழ்வில் .............. கூடாது .............. இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. (நடித்தல், நடிப்பு) விடை : 1. புதையல் - புதைத்தல். 2. சுடுதல் - சுட்டல் 3. தொடுதல் – தொடுத்தல் 4. காட்சி – காணுதல் 5. நடித்தல் - நடிப்பு. |
தெரிந்து தெளிவோம், நூல் வெளி |
---|
தெரிந்து தெளிவோம்
மொழிபெயர்ப்பு • எங்கோ தொலைதூரத்தில் வாழும் மனிதர்கள் தங்களின் மொழியில் சொன்னவற்றை, எழுதியவற்றை இன்னொரு மொழியில் தமக்குத் தெரிந்த மொழியில் மொழிபெயர்த்து அறிந்து கொள்கிறார்கள். அதுதான் மொழிபெயர்ப்பு. • எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவாயினவோ அப்பொழுதே மொழி பெயர்ப்பும் வந்துவிட்டது. கருத்துப்பரிமாற்றம், தகவல் பகிர்வு, அறநூல் அறிதல், இலக்கியம், தத்துவம் என்பன எல்லாம் மொழிபெயர்ப்பு வழியாகவே சர்வதேசத்தன்மை பெறுகின்றன. • ராகுல் சாங்கிருத்யாயன் 1942ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்தபோது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை இந்தி மொழியில் எழுதினார். • 1949ஆம் ஆண்டு இந்நூலை கணமுத்தையா என்பவர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். • இன்றுவரையில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ ஒவ்வொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் நூலாக இருக்கிறது. இதுவரையில் பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. • 1949 - கணமுத்தையா மொழி பெயர்ப்பு, • 2016 – டாக்டர் என். ஸ்ரீதர் மொழி பெயர்ப்பு, • 2016 - முத்து மீனாட்சி மொழி பெயர்ப்பு, • 2018 - யூமா வாசுகி மொழி பெயர்ப்பு. சா. கந்தசாமி எத்திசையும் புகழ் மணக்க..... பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் • பிரான்சு "தேசிய நூற்கூடத்தில் (Bibliothque Nationale) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள. • இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளுமாம். பண்டைக் காலத்தில் முதன்முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் இந்நூற்கூடத்தில் இருக்கின்றன. அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்தபொழுது இன்றும் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன். • "மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத் தமிழ்" முதலிய நூல்களும் அங்கு உள"- தனிநாயக அடிகள் நீதிவெண்பா - கா.ப. செய்குதம்பிப் பாவலர் சதாவதானம் • 'சதம்' என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம். நூல் வெளி • ‘சதாவதானம்’ என்னும் கலையில் சிறந்து விளங்கிய செய்குதம்பிப் பாவலர் (1874 – 1950), கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்; • பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்; • சீறாப்புராணத்திற்கு -உரை எழுதியவர்; • 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்று பாராட்டுப்பெற்றார். • இவர் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் உள்ளன. • இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. திருவிளையாடற்புராணம் - பரஞ்சோதி முனிவர் நூல் வெளி • திருவிளையாடற் கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது. • இந்நூல் மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்களும் 64 படலங்களும் உடையது; • பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர்; • பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்; • சிவபக்தி மிக்கவர். வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி முதலியன இவர் இயற்றிய வேறு நூல்களாகும். புதிய நம்பிக்கை – கமலாலயன் நூல் வெளி • புத்தகம் ஒன்று ஒரு சிறு பெண்ணுடன் வாழ்க்கை நெடுகப் பேசிக்கொண்டே வருகிறது. • ‘'உனக்குப் படிக்கத் தெரியாது“ என்ற கூற்றால் உள்ளத்தில் பெற்ற அடி, பிற்காலத்தில் சமையல் செய்தும் தோட்டமிட்டும் பொது இடங்களில் பாட்டுப்பாடியும் சிறுகச்சிறுகப் பணம் சேர்த்துக் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிடக் காரணமானது. • உலகெங்கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன். • இம் மாபெரும் கல்வியாளரின் வாழ்க்கையை “உனக்குப் படிக்கத் தெரியாது” என்ற தலைப்பில் நூலாகப் படைத்துள்ளார் கமலாலயன். • இவரின் இயற்பெயர் வே. குணசேகரன். • வயதுவந்தோர் கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். |
minnal vega kanitham