சொல்லும் பொருளும் |
---|
சொல்லும் பொருளும் இயல் -
1 • நிருமித்த - உருவாக்கிய • சமூகம் - மக்கள் குழு • விளைவு - வளர்ச்சி • அசதி – சோர்வு • வினைவுக்கு - நீர் • அறிவுக்கு - தோள் • இளமைக்கு - பால் • புலவர்க்கு – வேல் • ஆழிப் பெருக்கு - கடல் கோள் • மேதினி - உலகம் • ஊழி - நீண்டதொருகாலப்பகுதி • உள்ளப்பூட்டு - உள்ளத்தின் அறியாமை • மா - விலங்கு • தொன்மை – பழமை • 'மா'- என்னும் ஒரு சொல் மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு இயல் - 2 • திங்கள் - நிலவு • கொங்கு- மகரந்தம் • அலர் - மலர்தல் • திகிரி - ஆணைச்சக்கரம் • பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில் • மேரு - இமயமலை • நாமநீர் - அச்சம் தரும் கடல் • அளி - கருணை • காணி - நில அளவைக் குறிக்கும் சொல் • மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள் • சித்தம் - உள்ளம். • கடல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களைத்
திரட்டுக - ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி என்பனவாம். • கதிரவனின் - ஞாயிறு • திகிரி - சக்கரம் • நாம - அச்சம் • கிணறு - கேணி • சித்தம் - உள்ளம் • மாடங்கள் - அடுக்குகள் இயல் - 3 • இயன்றவரை - முடிந்தவரை • ஒருமித்து - ஒன்றுபட்டு • ஔடதம் - மருந்து இயல் - 4 • மாசற - குற்றம் இல்லாமல் • சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்தால் • தேசம் – நாடு • தூற்றும்படி - இகழும்படி • மூத்தோர் - பெரியோர் • மேதைகள் - அறிஞர்கள் • மாற்றார் - மற்றவர் • நெறி - வழி • வற்றாமல் – குறையாமல் • "மன்னன்" - கோ • "நெறி" - வழி இயல் - 5 • நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை
மறவாமை • ஒப்புரவு - எல்லோரையும் சமமாக பேணுதல் • நட்டல் - நட்புக் கொள்ளுதல் • நந்தவனம் - பூஞ்சோலை • பண் - இசை • பார் - உலகம் • இழைத்து - பதித்து • பார் - உலகம் • பண் - இசை • தால் - நாக்கு இயல் - 6 • மல்வெடுத்த - வலிமைபெற்ற • சமர் – போர் • நல்கும் - தரும் • கழனி - வயல் • மறம் - வீரம் • எக்களிப்பு - பெருமகிழ்ச்சி • கலம் - கப்பல் • ஆழி – கடல் • கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி • மின்னல்வரி - மின்னல் கோடு • அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துகள் இயல் - 7 • மெய் - உண்மை • தேசம் - நாடு இயல் - 8 • தண்டருள் - குளிர்ந்த கருணை • கூர் – மிகுதி • செம்மையருக்கு - சான்றோருக்கு • ஏவல் - தொண்டு • பணி - தொண்டு • எய்தும் – கிடைக்கும் • எல்லாரும் - எல்லா மக்களும் • அல்லாமல் - அதைத்தவிர • சுயம் - தனித்தன்மை • உள்ளீடுகன் - உள்ளே இருப்பவை இயல் - 9 • அஞ்சினர் - பயந்தனர் • முற்றும் - முழுவதும் • கருணை – இரக்கம் • மாரி - மழை • வீழும் - விழும் • கும்பி - வயிறு • ஆகாது - முடியாது • நீள்நிலம் - பரந்த உலகம் • பூதலம் - பூமி • பார் – உலகம் |
சொல்லும் பொருளும் (6th New Tamil Book)
பிப்ரவரி 14, 2025
0
minnal vega kanitham