Type Here to Get Search Results !

Day 44 New syllabus அடிப்படையில் 10th தமிழ் இயல் - 9

0
நூல் வெளி
ஜெயகாந்தம் - நினைவு இதழ்
• ஜெயகாந்தன் பேசி, 'எதற்காக எழுதுகிறேன்?' என்ற தலைப்பில் கட்டுரையாகத் தொகுக்கப்பட்ட பகுதியும் 'யுகசந்தி' என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'தர்க்கத்திற்கு அப்பால்' என்னும் சிறுகதையும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
• தான் வாழ்ந்த காலத்தில் சிக்கல்கள் பலவற்றை ஆராய, எடுத்துச்சொல்ல, தன் பார்வைக்கு உட்பட்ட தீர்ப்பைச் சொல்ல அவர் மேற்கொண்ட நடவடிக்கையே படைப்பு.
• அவருடைய படைப்புகள் உணர்ச்சி சார்ந்த எதிர்வினைகளாக இருக்கின்றன.
• இதுவே அவருக்குச் ‘சிறுகதை மன்னன்’ என்ற பட்டத்தைத் தேடித்தந்தது.
• இவர் குறும்புதினங்களையும் புதினங்களையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் படைத்துள்ளார்;
• தன் கதைகளைத் திரைப்படமாக இயக்கியிருக்கிறார்;
• தலைசிறந்த உரத்த சிந்தனைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்;
• சாகித்திய அகாதெமி விருதையும் ஞானபீட விருதையும் பெற்ற இவருடைய கதைகள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
சித்தாளு - நாகூர்குமி
• முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர் ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்;
• இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர்.
• கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர்.
• மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
• இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன.
• மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் 'கப்பலுக்குப் போன மச்சான்' என்னும் நாவலையும் படைத்துள்ளார்.
தேம்பாவணி - வீரமாமுனிவர்
• தேம்பா + அணி எனப் பிரித்து வாடாதமாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்து தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது.
• கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது.
• இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.
• 17 ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது தேம்பாவணி.
• இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர்.
• இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி.
• தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குருகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை இவர் படைத்துள்ளார்.
ஒருவன் இருக்கிறான் - கு. அழகிரிசாமி
• ஒருவன் இருக்கிறான் கதை 'கு.அழகிரிசாமி சிறுகதைகள்' என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
• கு.அழகிரிசாமி, அரசுப்பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர்; மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக் கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர்; கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் எனலாம்.
• கி.ரா.வுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை.
• படைப்பின் உயிரை முழுமையாக உணர்ந்திருந்த கு.அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றியவர்; மலேசியாவில் இருந்தபோது அங்குள்ள படைப்பாளர்களுக்குப் படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தவர்.
• இவர் பதிப்புப் பணி, நாடகம் எனப் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர்.
• தமிழ் இலக்கியத்தில் ஆர்வம்கொண்டு திறனாய்வு நூல்களையும் படைத்தவர்.

ஜெயகாந்தம்
ஜெயகாந்தம் – விருதுகள்
• குடியரசுத் தலைவர் விருது (உன்னைப்போல் ஒருவன்- திரைப்படம்)
• சாகித்திய அகாதெமி விருது - சில நேரங்களில் சில மனிதர்கள் (புதினம்)
• சோவியத் நாட்டு விருது (இமயத்துக்கு அப்பால்)
• ஞானபீட விருது
• தாமரைத்திரு விருது
எதற்காக எழுதுகிறேன்? – ஜெயகாந்தன்
• சமூக அமைப்பின் முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர்.
• நேர்முக எதிர்முக விளைவுகளைப் பெற்றவர்.
• உள்ளடக்க விரிவால் மனிதாபிமானத்தை வாசக நெஞ்சங்களில் விதைத்தவர்.
• தன்னையறிதல் என்பதிலும் தன்னை உணர்த்துதல் என்பதிலும் முனைப்பாக இருந்தவர்.
• அவர்தான் ஜெயகாந்தன்
ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு
• குருபீடம்
• யுகசாந்தி
• ஒரு பிடி சோறு
• உண்மை சுடும்
• இனிப்பும் கரிப்பும்
• தேவன் வருவாரா
• புதிய வார்ப்புகள்
ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள்
• பிரளயம்
• கைவிலங்கு
• ரிஷிமூலம்
• பிரம்ம உபதேசம்
• யாருக்காக அழுதான்?
• கருணையினால் அல்ல
• சினிமாகவுக்குப் போன சித்தாளு
ஜெயகாந்தன் எழுதிய புதினங்களை எழுதுக.
• பாரீசுக்குப் போ
• சுந்தர காண்டம்
• உன்னைப் போல் ஒருவன்
• கங்கை எங்கே போகிறாள்
• ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
• இன்னும் ஒரு பெண்ணின் கதை
• ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
ஜெயகாந்தன் எழுதிய மொழிபெயர்ப்பு நூல்களை எழுதுக.
• வாழ்விக்க வந்த காந்தி
• ஒரு கதாசிரியனின் கதை
ஜெயகாந்தன் எழுதிய திரைப்படமான படைப்புகளை எழுதுக.
• சில நேரங்களில் சில மனிதர்கள்
• ஒரு நடிகை நாடகம் பார்க்கிறார்
• ஊருக்கு நூறு பேர்
• உன்னைப் போல் ஒருவன்
• யாருக்காக அழுதான்

கலைச்சொல் அறிவோம்
• Humanism - மனிதநேயம்
• Cultural Boundaries - பண்பாட்டு எல்லை
• Cabinet - அமைச்சரவை
• Cultural values - பண்பாட்டு விழுவியங்கள்

உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.
1. தாமரை இலை நீர் போல
என் நண்பன் தாமரை இலை நீர் போல பட்டும் படாமலும் பழகுவான்.
2. மழைமுகம் காணாப் பயிர்போல
தாயை இழந்த கருணையன் மழை முகம் காணாப் பயிர்போல வாடினான்.
3. கண்ணினைக் காக்கும் இமைபோல
காக்கை தன் குஞ்சுக் காக்கையை (பறவையை) கண்ணினைக் காக்கும் இமைபோல காக்கும்.
4. சிலை மேல் எழுத்து போல
சிறு வயதில் கற்கும் அடிக்கருத்துகள் சிலை மேல் எழுத்து போல மனதிலே நிலைத்து நின்று நம் வாழ்வை வழி நடத்தும்.

சொல்லும் பொருளும்
• சேக்கை - படுக்கை
• யாக்கை - உடல்
• பிணித்து - கட்டி
• வாய்ந்த - பயனுள்ள
• இளங்கூழ் - இளம்பயிர்
• தயங்கி - அசைந்து
• காய்ந்தேன் - வருந்தினேன்
• கொம்பு - கிளை
• புழை - துளை
• கான் - காடு
• தேம்ப - வாட
• உய்முறை - வாழும் வழி
• ஓர்ந்து - நினைத்து
• கடிந்து – விலக்கி
• உவமணி - மணமலர்
• படலை - மாலை
• துணர் – மலர்கள்

இலக்கணக் குறிப்பு
• காக்கென்று - காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
• கணீர் - கண்ணீர் என்பதன் இடைக்குறை
• காய்மணி உய்முறை செய்முறை - வினைத்தொகைகள்
• மெய்முறை - வேற்றுமைத்தொகை
• கைமுறை - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

பொருத்தமான நிறுத்தற் குறியிடுக.
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
• சேரர்களின் பட்ட பெயர்களில் “கொல்லி வெற்பன்'', "மலையமான்" போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும், பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்