Type Here to Get Search Results !

ஒருமை பன்மை அறிதல்

0
தான், தாம் என்னும் சொற்கள் (8th New Tamil Book Unit - 9)
அறிந்து பயன்படுத்துவோம். தான், தாம் என்னும் சொற்கள்
● தான் என்பது ஒருமையைக் குறிக்கும்.
● தாம் என்பது பன்மையைக் குறிக்கும்.
இவ்வேறுபாட்டினை அறிந்து தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.
தான், தன்னை, தன்னால், தனக்கு, தனது ஆகியவற்றை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.
தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது ஆகியவற்றைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.
(எ.கா.) தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்.
● மாணவன் தனது கையால் பெற்றுக் கொண்டான்.
● (இங்குத் தலைவர் என்பது ஒருவரைக் குறித்தாலும் இது மரியாதைப் பன்மை ஆகும்)
(எ.கா) மாடுகள் தமது தலையை ஆட்டின.
● கன்று தனது தலையை ஆட்டியது.
கோடிட்ட இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக.
1. சிறுமி தனது (தனது/தமது) கையில் மலர்களை வைத்திருந்தாள்.
2. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் தமது (தனது/தமது) உழைப்பை நல்கினார்.
3. உயர்ந்தோர் தம்மைத்தாமே (தம்மைத்தாமே/தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ளமாட்டார்கள்.
4. இவை தாம் (தான்/தாம்) எனக்குப் பிடித்த நூல்கள்.
5. குழந்தைகள் தம்மால் (தன்னால்/தம்மால்) இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்.

தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தம்முடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள்தான் இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.
விடை
முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தன்னுடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள் இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்