தான், தாம் என்னும் சொற்கள் |
---|
அறிந்து பயன்படுத்துவோம்.
தான், தாம் என்னும் சொற்கள்
● தான் என்பது ஒருமையைக் குறிக்கும். ● தாம் என்பது பன்மையைக் குறிக்கும். இவ்வேறுபாட்டினை அறிந்து தொடர்களில் பயன்படுத்த வேண்டும். ● தான், தன்னை, தன்னால், தனக்கு, தனது ஆகியவற்றை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும். ● தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது ஆகியவற்றைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும். ● (எ.கா.) தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார். ● மாணவன் தனது கையால் பெற்றுக் கொண்டான். ● (இங்குத் தலைவர் என்பது ஒருவரைக் குறித்தாலும் இது மரியாதைப் பன்மை ஆகும்) ● (எ.கா) மாடுகள் தமது தலையை ஆட்டின. ● கன்று தனது தலையை ஆட்டியது. கோடிட்ட இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக. 1. சிறுமி தனது (தனது/தமது) கையில் மலர்களை வைத்திருந்தாள். 2. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் தமது (தனது/தமது) உழைப்பை நல்கினார். 3. உயர்ந்தோர் தம்மைத்தாமே (தம்மைத்தாமே/தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ளமாட்டார்கள். 4. இவை தாம் (தான்/தாம்) எனக்குப் பிடித்த நூல்கள். 5. குழந்தைகள் தம்மால் (தன்னால்/தம்மால்) இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர். தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக. முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தம்முடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள்தான் இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார். விடை முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தன்னுடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள் இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார். |
பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் |
---|
1) 'இன்பதுன்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
அ) இன்பம் + துன்பு ஆ) இன்பம் + துன்பம் இ) இன்ப + அன்பம் ஈ) இன்ப + அன்பு [விடை : ஆ) இன்பம் + துன்பம்]
2) குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல். அ) குணங்கள் எல்லாம் ஆ) குணமெல்லாம் இ) குணங்களில்லாம் ஈ) குணங்களெல்லாம் [விடை : ஈ) குணங்களெல்லாம்]
3) விழித்தெழும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….. அ) விழி + எழும் ஆ) விழித்து + எழும் இ) விழி + தெழும் ஈ) விழித் + தெழும் [விடை : ஆ) விழித்து + எழும்]
4) 'போவதில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) போவது + இல்லை ஆ) போ + இல்லை இ) போவது + தில்லை ஈ) போவது + தில்லை [விடை : அ) போவது + இல்லை]
5) 'படுக்கையாகிறது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) படுக்கை + யாகிறது ஆ) படுக்கையா + ஆகிறது இ) படுக்கையா + கிறது ஈ) படுக்கை + ஆகிறது [விடை : ஈ) படுக்கை + ஆகிறது]
6) தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அ) தூக்கிகொண்டு ஆ)தூக்குக்கொண்டு இ) தூக்கிக்கொண்டு ஈ) தூக்குகொண்டு [விடை : இ) தூக்கிக்கொண்டு]
7) விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல். அ) விழியெழும் ஆ) விழித்தெழும் இ) விழித்தழும் ஈ) விழித்துஎழும் [விடை : ஆ) விழித்தெழும்]
கூடுதல் வினாக்கள் பெண்ணரசி என்னும் சொல்லை பிரித்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….. பெண் + அரசி பெண்மை + அரசி பெண்ண + அரசி பெண் + ணரசி [விடை : பெண் + அரசி]
9.1அறிவருள் = அறிவு + அருள் இன்பதுன்பம் = இன்பம் + துன்பம் குறைவற = குறைவு + அற குணங்களெல்லாம் = குணங்கள் + எல்லாம் பூத்தேலோ = பூத்து + ஏலோ பெண்ணரசி = பெண் + அரசி 9.2 மட்டுமல்ல = மட்டும் + அல்ல போவதில்லை = போவது + இல்லை உனக்கொரு = உனக்கு + ஒரு தூக்கிக்கொண்டு = தூக்கி + கொண்டு கைக்குழந்தைகள் = கை + குழந்தைகள் குழந்தைகளல்ல = குழந்தைகள் + அல்ல ஒருவருமில்லையா = ஒருவரும் + இல்லையா படுக்கையாகிறது = படுக்கை + ஆகிறது பாதையாகிறது = பாதை + ஆகிறது விழித்தெழும் = விழித்து + எழும் நம்முடையது = நம் + உடையது |
மு. மேத்தா |
---|
நூல் வெளி
● வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு. மேத்தா. புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்; ● கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம், சோழநிலா, மகுடநிலா உள்ளிட்ட பல நூல்களையும் திரையிசைப்பாடல்களையும் எழுதியுள்ளார்; கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ● இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. |
சொல்லும் பொருளும் |
---|
● நிறை - மேன்மை
● பொறை - பொறுமை ● பொச்சாப்பு - சோர்வு ● மையல் - விருப்பம் ● ஓர்ப்பு - ஆராய்ந்து தெளிதல் ● அழுக்காறு - பொறாமை ● மதம் - கொள்கை ● இகல் - பகை ● மன்னும் - நிலைபெற்ற ● நிறை – மேன்மை ● பொறை – பொறுமை ● மதம் – கொள்கை ● மையல் – விருப்பம் ● நிறை – மேன்மை ● பொறை – பொறுமை ● மதம் – கொள்கை ● மையல் – விருப்பம் பொறாமை என்னும் பொருள் தரும் சொல் ……………….. அழுக்காறு மதம் கல் நிறை [விடை : அழுக்காறு]
“இகல்” என்னும் சொல்லின் பொருள் ……………….. பொறாமை கொள்கை நிலைபெற்ற பகை [விடை : பகை]
|
கலைச்சொல் அறிவோம். |
---|
1. குறிக்கோள் – Objective
2. நம்பிக்கை – Confidence 3. முனைவர் பட்டம் – Doctorate 4. வட்ட மேசை மாநாடு – Round Table Conference 5. இரட்டை வாக்குரிமை – Double voting 6. பல்கலைக்கழகம் – University 7. ஒப்பந்தம் – Agreement 8. அரசியலமைப்பு – Constitution |
பின்வரும் வினாக்களைப் படித்து இருவினாக்களுக்கு ஒரு விடை தருக. |
---|
(எ.கா) குழம்பும் கூட்டும் மணப்பது ஏன்?
குருதி மிகுதியாய்க் கொட்டுவது ஏன்? பெருங்காயத்தால் 1. ஆடை நெய்வது எதனாலே? அறிவைப் பெறுவது எதனாலே? நூலால் 2. மாடுகள் வைக்கோல் தின்பது எங்கே? மன்னர்கள் பலரும் இறந்தது எங்கே? போரில் 3. கதிரவன் மறையும் நேரம் எது? கழுத்தில் அழகாய்ச் சூடுவது எது? மாலை 4. வானில் தேய்ந்து வளர்வது எது? வாரம் நான்கு கொண்டது எது? திங்கள் |
சொல்லக் கேட்டு எழுதுக. |
---|
அம்பேத்கர் தமது வாழ்க்கையில் 'புதிய திருப்பம்' காண வழி ஒன்றைக் கண்டறிந்தார். அது 'படிப்பு,படிப்பு, படிப்பே ஆகும். அதை அடையும் முயற்சியில் அயராது உழைக்கத் தொடங்கினார். எப்போதும் புத்தகமும் கையுமாகவே திகழ்ந்தார். இதைக் கண்ட அவருடைய தந்தை வேறு செலவுகளைக் குறைத்துக் கொண்டும் கடன் வாங்கியும் புத்தகங்களை வாங்கித் தந்தார். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை அம்பேத்கர் கடைசிவரை கடைப்பிடித்தார். வட்டமேசை மாநாட்டிற்காக அம்பேத்கர் இங்கிலாந்து சென்றார். மாநாடு முடிந்தபிறகு அமெரிக்கா சென்ற அவர் தம் பழைய நண்பர்களையும் பேராசிரியர்களையும் கண்டு மகிழ்ந்தார். தாய்நாடு திரும்பிய போது பதினான்கு பெட்டிகள் நிறையப் புத்தகங்களைக் கொண்டுவந்தார். |
minnal vega kanitham