பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் |
---|
1) "நமனில்லை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) நம் + இல்லை ஆ) நமது + இல்லை இ) நமன் + நில்லை ஈ) நமன் + இல்லை [விடை : ஈ) நமன் + இல்லை] 2) நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………… அ) நம்பரங்கு ஆ) நம்மார்க்கு இ) நம்பர்க்கங்கு ஈ) நம்பங்கு [விடை : இ) நம்பர்க்கங்கு] 3) "ஆனந்தவெள்ளம்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) ஆனந்த + வெள்ளம் ஆ) ஆனந்தன் + வெள்ளம் இ) அனந்தம் + வெள்ளம் ஈ) ஆனந்தர் + வெள்ளம் [விடை : இ) அனந்தம் + வெள்ளம்] 4) உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….. அ) உள்ளேயிருக்கும் ஆ) உள்ளிருக்கும் இ) உளிருக்கும் ஈ) உளருக்கும் [விடை : ஆ) உள்ளிருக்கும்] 5) "பெருஞ்செல்வம்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) பெரிய + செல்வம் ஆ) பெருஞ் + செல்வம் இ) பெரு + செல்வம் ஈ) பெருமை + செல்வம் [விடை : ஈ) பெருமை + செல்வம்] 6) "ஊராண்மை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) ஊர் + ஆண்மை இ) ஊ+ ஆண்மை ஆ) ஊராண் + மை ஈ) ஊரு + ஆண்மை [விடை : அ) ஊர் + ஆண்மை] 7) திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அ) திரிந்ததுஅற்று ஆ) திரிந்தற்று இ) திரிந்துற்று ஈ) திரிவுற்று [விடை : ஆ) திரிந்தற்று] |
குணங்குடி மஸ்தான் சாகிபு |
---|
நூல் வெளி
குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர். ● இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார். ● சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார். ● எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார். ● நம் பாடப்பகுதி குணங்குடியார் பாடற்கோவை என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது. |
சொல்லும் பொருளும் |
---|
● நமன் - எமன்
● சித்தம் - உள்ளம் ● நம்பர் - அடியார் ● நாணாமே - கூசாமல் ● உய்ம்மின் - ஈடேறுங்கள் ● ஈயில் - வழங்கினால் ● பகராய் - தருவாய் ● ஆனந்த வெள்ளம் - இன்பப்பெருக்கு ● பராபரம் - மேலான பொருள் ● அறுத்தவருக்கு - நீக்கியவர்க்கு ● கான - காடு ● நகுதல் - சிரித்தல் ● நட்டல்- தவறு செய்தல் ● பிடித்தல் - திருத்துதல் ● ஆய்ந்து - ஆராய்ந்து ● கேண்மை - நட்பு ● கடை - இறுதி ● மண்புக்கு - மண்ணுக்கு ● மாய்வது - அறிவது ● களம் - பாத்திரம் |
கலைச்சொல் அறிவோம். |
---|
1. தொண்டு – Charity
2. ஞானி – Saint 3. தத்துவம் – Philosophy 4. நேர்மை – Integrity 5. பகுத்தறிவு – Rational 6. சீர்திருத்தம் – Reform |
இரண்டு தொடர்களை ஒரே தொடராக்குக. |
---|
(எ.கா) முத்து நன்கு படித்தான். முத்து வாழ்வில் உயர்ந்தான்.
முத்து நன்கு படித்ததால் வாழ்வில் உயர்ந்தான். 1. மழை நன்கு பெய்தது. எங்களால் விளையாட முடியவில்லை. விடை : மழை நன்கு பெய்ததால் எங்களால் விளையாட முடியவில்லை. 2. எனக்குப் பால் வேண்டும். எனக்குப் பழம் வேண்டும். விடை : எனக்குப் பாலும் பழமும் வேண்டும். 3. திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். விடை : திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர். 4. அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்க வேண்டும். அவை கூறும் கருத்துகளைப் பின்பற்ற வேண்டும். விடை : அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்கவும் அவை கூறும் கருத்துகளைப் பின்பற்றவும் வேண்டும். 5. குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி நூலை இயற்றியுள்ளார். நந்தீசுவரச் கண்ணி நூலை இயற்றியுள்ளார். விடை : குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி, நந்தீசுவரக்கண்ணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். |
Super
பதிலளிநீக்குminnal vega kanitham