இலக்கணக்குறிப்பு |
---|
● எத்தனை எத்தனை, விட்டு விட்டு - அடுக்குத் தொடர்கள்
● ஏந்தி - வினையெச்சம் ● காலமும் - முற்றும்மை ● முத்திக்கனி - உருவகம் ● தெள்ளமுது - பண்புத்தொகை ● குற்றமிலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ● நா - ஓரெழுத்து ஒருமொழி ● செவிகள் உணவான - நான்காம் வேற்றுமைத்தொகை. ● சிந்தா மணி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
கலைச்சொல் அறிவோம் |
---|
● சாப்ட்வேர் [software] - மென்பொருள்
● ப்ரௌசர் [browser) - உலவி ● க்ராப் [crop] - செதுக்கி ● கர்சர் (cursor] - ஏவி அல்லது சுட்டி ● சைபர்ஸ்பேஸ் [cyberspace] - இணையவெளி ● சர்வர் (server] - வையக விரிவு வலை வழங்கி ● ஃபோல்டர் [Folder] - உறை ● லேப்டாப் [Laptop] - மடிக்கணினி மொழி பெயர்க்க : 1. Linguistics – மொழியியல் 2. Literature - இலக்கியம் 3. Philologist - மொழி ஆய்வறிஞர் 4 . Polyglot - பன்மொழி அறிஞர் 5. Phonologist - ஒலியியல் ஆய்வறிஞர் 6. Phonetics – ஒலியியல் கலைச்சொல் அறிவோம் ● உருபன் - Morpheme ● ஒலியன் – Phoneme ● ஒப்பிலக்கணம் - Comparative Grammar ● பேரகராதி - Lexicon தமிழ் - கிரேக்கம் ● ஏறிதிரை - ஏறுதிரான் ● கலன் - கலயுகோய் ● நீர் - நீரிய ● நாவாய் - நாயு ● தோணி - தோணீஸ் ● பா - பாய்யியோனா ● செப்பலோசை - செப்போ ● இளிவரல் - இளகியோ |
குறில், நெடில் வேறுபாடு |
---|
திராவிட மொழிகளில் உயிர் எழுத்துகளில் உள்ள குறில், நெடில் வேறுபாடுகள் பொருளை வேறுபடுத்தத் துணை செய்கின்றன.
● அடி – குறில் ● ஆடி – நெடில் ● வளி - குறில் ● வாளி – நெடில் |
தொடர் இலக்கணம் |
---|
சொல்லும் பொருளும் |
---|
● குறம், பள்ளு - சிற்றிலக்கிய வகைகள்;
● மூன்றினம் - துறை, தாழிசை, விருத்தம் ; ● திறமெல்லாம் - சிறப்பெல்லாம்; ● சிந்தாமணி - சிதறாத மணி(சீவகசிந்தாமணி), என்னும் இருபொருளையும் குறிக்கும் ; ● சிந்து - ஒருவகை இசைப்பாடல். ● முக்குணம் - மூன்று குணங்கள் (சத்துவம்-அமைதி, மேன்மை ஆகியவற்றைச் சுட்டும் குணம்; ● இராசசம் - போர், தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம்; ● தாமசம் - சோம்பல், தாழ்மை போன்றவற்றைக் குறிக்கும் குணம்; ● பத்துக்குணம் - செறிவு, சமநிலை முதலிய பத்துக்குண அணிகள். ● வண்ணங்கள் ஐந்து - வெள்ளை, சிவப்பு, கறுப்பு, மஞ்சள், பச்சை; ● வண்ணம் நூறு - குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு. ● ஊனரசம் - குறையுடைய சுவை; ● நவரசம் - வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை ஆகிய ஒன்பது சுவை; ● வனப்பு- அழக,. அவை அம்மை , அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு. |
அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக. |
---|
1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் திகழ்கின்றது. (திகழ்)
2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் கலந்து கொள்வாள். (கலந்துகொள்) 3. உலகில் மூவாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. (பேசு) 4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா சென்றார்கள். (செல்) 5. தவறுகளைத் திருத்தினான். (திருத்து) |
தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க. |
---|
1. இளமையில் கல்வி முதுமையில் இன்பம்
2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் 3. கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே 4. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு |
அகராதியில் காண்க. |
---|
● நயவாமை - விரும்பாமை
● கிளத்தல் - எழுப்பல், சொல்லுதல், பேசுதல் ● கேழ்பு - நன்மை ● புரிசை - மதில் ● செம்மல் - அரசன், அருகன், தலைமகன், பழம்பூ, புதல்வன், ● பெருமையிற் சிறந்தோம், உள்ளநிறைவு, நீர், தருக்கு. |
திராவிட-மொழிக்குடும்பம் |
---|
1. திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது? தமிழ்
2. தமக்கு தோன்றிய கருத்துக்களை பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி எது? மொழியாகும் 3. மனிதன் தமக்கு தோன்றிய எண்ணங்களை எதன் மூலம் பிறருக்கு தெரிவிக்க முயன்றான்? மெய்ப்பாடுகள், சைகைகள், ஒலிகள், ஓவியங்கள் 4. இந்தியால் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை எவ்வளவு? 1300க்கு மேற்பட்டது 5. இந்தியாவில் உள்ள மொழிகள் எத்தனை மொழிக்குடும்பங்களாக பிரிக்கப்பட்டடுள்ளன? நான்கு (4) 6. இந்திய நாடு மொழிகளின் காட்சிசாலையாக"திகழ்கிறது எனக் கூறியவர் யார்? ச. அகத்தியலிங்கம் 7. திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்? குமரிலபட்டர் 8. தமிழ் என்னும் சொல்லிலிருந்து தான்"திராவிட என்ற சொல் உருவானது என்று கூறியவர் யார்? ஸீராஸ் பாதிரியார் 9. ஸீராஸ் பாதிரியார் தமிழிருந்து தான் திராவிட என்ற சொல் பிறந்தது என்பதை எவ்வாறு விளக்கியுள்ளார்? தமிழ், தமிழா, தமிலா, டிரமிலா, ட்ராமிலா, த்ராவிடா, திராவிடா 10. 18ம் நூற்றாண்டு தொடக்கம் வரை, தமிழ் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் ----- மொழியிலுருந்து உருவானவை என்ற கருத்து நிலவியது? சம்ஸ்கிருத மொழி 11. வடமொழி மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது என்று குறிப்பிட்டவர் யார்? அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் 12. ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்? அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் 13. 1816ஆண்டு மொழி சார்ந்த பல ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் யார்? பாப், ராஸ்க், கிரிம் 14. முதன் முதலில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளுக்கு தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் யார்? பிரான்ஸ் எல்லிஸ் 15. தென்னிந்திய மொழிகளுக்கு தமிழியன் என்று பெயரிட்டவர் யார்? ஸோக்கன் 16. தமிழியன் மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகள் எவை? தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தோண்டி, தோடா 17. தமிழ் மொழி ஆரிய மொழிகளிலிருந்து மாறுபட்டவை என்ற கருத்தை கூறிய அறிஞர்கள் யார்? ஸோக்கன் மற்றும் மாக்ஸ் முல்லர் 18. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்? கால்டுவெல் 19. கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை வெளியிட்ட ஆண்டு? 1856 20. திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சம்ஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்கு செலுத்தியுள்ளது என கூறியவர்? கால்டுவெல் 21. திராவிட மொழிக் குடும்பங்களின் வகைகள் எத்தனை? மூன்று அவை தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் 22. தென்திராவிட மொழிகள் எவை? தமிழ், கன்னடம், மலையாளம், குடகு, துளு கோத்தா, தோடா, கொரகா, இருளா 23. நடுத்திராவிட மொழிகள் எவை? தெலுங்கு, கூயி, கூவி, கோண்டா கோலாமி நாய்க்கி, பெங்கோ, மண்டா, பர்ஜி, கதபா, கோண்டி, கோயா 24. வடதிராவிட மொழிகள் எவை? பிராகுயி, குருக், மால்தோ 25. அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகள் எவை? எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா 26. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை? 28 27. கண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது? தமிழ் 28. கண்ணு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது? மலையாளம், கன்னடம் 29. கன்னு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது? தெலுங்கு, குடகு 30. ஃகண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது? குருக் 31. கென் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது? பர்ஜி 32. கொண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது? தோடா 33. மூன்று என்ற எண்ணுப் பெயர் மூணு என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது? மலையாளம் 34. மூன்று என்ற எண்ணுப் பெயர் "மூரூ" என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது? கன்னடம் 35. மூன்று என்ற எண்ணுப் பெயர் "மூஜி" என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது? துளு 36. எந்த மொழியில் தினை, பால், என் ஆகிய வேறுபாட்டை காட்டுவதில்லை? ஆங்கிலம் 37. திராவிட மொழியில் எந்த மொழியில் பால் காட்டும் விகுதிகள் இடம் பெறுவதில்லை? மலையாளம் 38. கவிராஜ மார்க்கம் எனும் கன்னட மொழி இலக்கியம் இயற்றப்பட்ட நூற்றாண்டு? பொ. ஆ. ஒன்பதாம் நூற்றாண்டு 39. பொ. ஆ. 11ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட "பாரதம்" என்ற இலக்கியம் எந்த மொழியில் இயற்றப்பட்டது? தெலுங்கு 40. பொ. ஆ. 12ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'ராம சரிதா'என்ற இலக்கியம் எந்த மொழியில் இயற்றப்பட்டது? மலையாளம் 41. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இயற்றப்பட்ட நூற்றாண்டு? பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டு 42. பொ. ஆ. 9ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'கவிராஜ'மார்க்கம் என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது? கன்னடம் 43. பொ. ஆ. 12ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'ஆந்திர பாஷா பூஷணம்'என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது? தெலுங்கு 44. பொ. ஆ. 15ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'லீலா திலகம்'என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது? மலையாளம் 45. தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலின் ஆசிரியர் யார்? மு. வரதராசனார் 46. 'இந்திய இலக்கண கொள்கையின் பின்னணியில் தமிழ் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்? செ. வை, சண்முகம் 47. எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது? மொரீசியஸ், இலங்கை 48. ஒன்று என்ற தமிழ்ச்சொல் துளு மொழியில் ----- என்ற கூறப்படுகிறது? ஒன்சி 49. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை ----- மொழியில் அமைந்துள்ளன? தமிழ் 50. எந்த மொழி மூலத்திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது? தமிழ் மொழி |
minnal vega kanitham