Type Here to Get Search Results !

9th New Tamil Unit - 1 One Liner

0
UNIT 1: அமுதென்று பேர் [200 வினா விடை]

1.     திராவிட மொழிகளில் மூத்த மொழியாய் விளங்குவது - தமிழ்

2.     தமக்குத் தோன்றிய கருத்தை பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி - மொழி

3.     பருப்பொருளை உணர்த்த மனிதன் பயன்படுத்தியவை - மெய்பாடுகள்,சைகைகள், ஒலிகள், ஓவியங்கள்

4.     இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை - 1300க்கும் மேற்பட்டது

5.     இந்தியாவில் மொழிகள் எத்தனை மொழிக்குடும்பங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன - 4

6.     இந்தியாவில் உள்ள நான்கு மொழிக் குடும்பங்கள் - திராவிட மொழிகள்,இந்தோ - ஆரிய மொழிகள், ஆஸ்திரோ ஆசிய மொழிகள்,சீன - திபெத்திய மொழிகள்

7.     இந்தியாவை மொழிகளின் காட்சிசாலை என்று குறிப்பிட்டவர் - ச. அகத்தியலிங்கம்

8.     திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் - குமரிலப்பட்டர்

9.     தமிழ் என்ற சொல்லிருந்து தான் திராவிட என்ற சொல் உருவானது என்று கூறியவர்- ஹீராஸ் பாதிரியார்

10.   ஹீராஸ் பாதிரியார் தமிழில் இருந்துதான் திராவிடா என்ற சொல் பிறந்தது என்பதை எவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்- தமிழ்- தமிழா-தமிலா-மரமிலா-ட்ரமிலா-த்ராவிடா-திராவிடா

11.   எந்த நூற்றாண்டு தொடக்கம் வரை இந்திய மொழிகள் அனைத்திற்கும் வடமொழி தான் மூலம் எனவும் அதிலிருந்து மற்ற மொழிகள் தோன்றி வளர்ந்தன எனவும் அறிஞர்கள் கருதினர்-18ம் நூற்றாண்டு

12.   வடமொழி மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது என்று குறிப்பிட்டவர் - வில்லியம் ஜோன்ஸ்

13.   கி.பி.1816 ஆண்டில் மொழி சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொண்டவர்கள் - பாப்,ராஸ்க்,கிரிம்

14.   தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் ஒரே மொழிக் குடும்பத்தை சார்ந்தவை என்று குறிப்பிட்டவர் - பிரான்சிஸ் எல்லிஸ்

15.   தமிழ், தெலங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளுக்கு தென்னிந்திய மொழிகள் என பெயாட்டவர் - பிரான்சிஸ் எல்லிஸ்

16.   தென்னிந்திய மொழிகளுக்கு தமிழியன் என்று பெயரிட்டவர் - ஹோக்கன்

17.   தமிழியன் மொழிக்குடும்பத்தில் உள்ள மொழிகள் - தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், மால்தோ , தோடா, கோண்டி

18.   திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் - கால்டுவெல்

19.   திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு - 1856

20.   திராவிட மொழிக்குடும்பங்களின் வகைகள் – 3

21.   திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை - 28

22.   அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகள் எத்தனை - 4

23.   அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகள்- எருகலா, குறும்பா, சோழிகா

24.   தமிழ் வடமொழியின் மகளன்று, அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி, சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி" எனக் கூறியவர் - கால்டுவெல்

25.   கண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம்பெற்றுள்ளது- தமிழ்

26.   கன் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம்பெற்றுள்ளது- குருக்

27.   கொண் என்ற அடிசோல் எத்திராவிட மொழியில் இடம்பெற்றுள்ளது- தோடா

28.   மூன்று என்ற எண்ணுப்பெயர் மூணு என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது- மலையாளம்

29.   மூன்று என்ற எண்ணுப்பெயர் மூரு என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது - கன்னடம்

30.   மூன்று என்ற எண்ணப்பெயர் மூஜி என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது - துளு

31.   "கடுவன்" என்ற சொல் எப்பாலினைக் குறிக்கும் - ஆண்பால்

32.   "மந்தி" என்ற சொல் எப்பாலினைக் குறிக்கும்- பெண்பால்

33.   'களிறு' என்ற சொல் எப்பாலினைக் குறிக்கும்- ஆண்பால்

34.   "பிடி" என்ற சொல் எப்பாலினைக் குறிக்கும்- பெண்பால்

35.   திராவிட மொழிகளில் எந்த மொழியில் பால் காட்டும் விகுதிகள் இடம்பெறுவதில்லை-மலையாளம்

36.   கவிராஜ மார்க்கம் எனும் கன்னட மொழி இலக்கியம் இயற்றப்பட்ட நூற்றாண்டு - பொ.ஆ. 9ம் நூற்றாண்டு

37.   பாரதம் என்ற இலக்கியம் தெலுங்கு மொழியில் இயற்றப்பட்ட நூற்றாண்டு - பொ ஆ. 11 ஆம் நூற்றாண்டு

38.   தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இயற்றப்பட்ட நூற்றாண்டு- பொ.ஆ.மு. 3ம் நூற்றாண்டு

39.   கவிராஜ மார்க்கம் என்னும் இலக்கண நூல் எந்த மொழியில் இயற்றப்பட்டது - கன்னடம்

40.   பொ.ஆ.15 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட "லீலா திலகம்" என்னும் இலக்கண நூல் எந்த மொழியில் இயற்றப்பட்டது - மலையாளம்

41.   பொ.ஆ.15 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட "ஆந்திர பாஷா பூஷணம்" என்ற இலக்கண நூல் எந்த மொழியில் இயற்றப்பட்டது - தெலுங்கு

42.   "தமிழ் இலக்கிய வரலாறு' என்ற நூலின் ஆசிரியர் - மு.வரதராசனார்

43.   "இந்திய இலக்கண கொள்கையின் பின்னணியில் தமிழ் இலக்கணம்" என்ற நூலின் ஆசிரியர்- செ.வை.சண்முகம்

44.   எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ்மொழி இடம்பெற்று உள்ளது - மொரிஷியஸ் , இலங்கை

45.   செய்தாள் என்ற சொல்லின் வேர்ச்சொல் என்ன- செய்

46.   "மரம்" என்ற தமிழ்சொல் கூர்க், மொழியில் என்று அழைக்கப்படுகிறது - மர

47.   "நீ' என்ற தமிழ்சொல்லானது "நின்" என எம்மொழியில் கூறப்படுகிறது- கூர்க்

48.   "காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே" என்ற கவிதையைப் பாடியவர் - ஈரோடு தமிழன்பன்

49.   தமிழோவியம் என்ற நூலின் ஆசிரியர் - ஈரோடு தமிழன்பன்

50.   "காலமும்'' என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக - முற்றும்மை

51.   "ஒரு பூவின் மலர்ச்சியும், ஒரு குழந்தையின் புன்னகையையும் அறிய அகராதி தேவைப்படுவதில்லை'' என்று கூறியவர் - ஈரோடு தமிழன்பன்

52.   ஈரோடு தமிழன்பன் எந்தெந்த வடிவங்களில் கவிதை நூல்களை தந்துள்ளார் - ஹைக்கூ,சென்ரியு , லிமரைக்கூ

53.   ஈரோடு தமிழன்பன் 'வணக்கம் வள்ளுவ' என்னும் கவிதை நூலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு - 2004

54.   ஈரோடு தமிழன்பனின் தமிழக அரசு பரிசு பெற்ற நூல் - தமிழன்பன் கவிதை

55.   “இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" எனக் கூறும் நூல் - பிங்கல நிகண்டு

56.   “யாமறிந்த மொழிகளில் தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்- பாரதியார்

57.   உலக தாய்மொழி நாள்- பிப்ரவரி 21

58.   தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் - சிங்கப்பூர், இலங்கை

59.   இலக்கணக்குறிப்பு தருக "எத்தனை எத்தனை " - அடுக்குத்தொடர்

60.   இலக்கணக்குறிப்பு தருக "ஏந்தி"- வினையெச்சம்

61.   இலக்கணக்குறிப்பு தருக "விட்டு விட்டு " - அடுக்குத்தொடர்

62.   இராமசரிதம் என்ற இலக்கிய நூல் மலையாளத்தில் இயற்றப்பட்ட நூற்றாண்டு- பொ.ஆ. 12 ஆம் நூற்றாண்டு

63.   "தித்திக்கும் தெள் அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக் கனியே என் முத்தமிழே - புத்திக்குள் " என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - தமிழ்விடு தூது

64.   தமிழ்விடு தூதின் ஆசிரியர் - தெரியவில்லை

65.   தமிழ்விடு தூது குறிப்பிடும் மூன்றினங்கள் - துறை,தாழிசை ,விருத்தம்

66.    “சிந்தாமணி " எனும் சொல் குறிப்பது- சிதறாத மணி

67.   தமிழ்விடு தூது குறிப்பிடும் முக்குணங்கள்  - சத்துவம் , இராசசம் , தாமசம்

68.   அமைதி, மேன்மை ஆகியவற்றை சுட்டும் குணம் - சத்துவம்

69.   சோம்பல், தாழ்மை போன்றவற்றை குறிக்கும் குணம் - தாமசம்

70.   போர், தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம் - இராசசம்

71.   தமிழ்விடு தூது குறிப்பிடும் வண்ணங்கள் - ஐந்து

72.   ஊனரசம் என்பதன் பொருள் - குறையுடைய சுவை

73.   வனப்பு என்ற சொல்லிற்கு பொருள் - அழகு,தொன்மை, இயைபு

74.   இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்கு பெயர்- கண்ணி

75.   தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை - கண்ணி

76.   தமிழ்விடு தூது குறிப்பிடும் குணங்கள் - பத்து

77.   சுவை எத்தனை வகைப்படும் - 6

78.   அம்மை முதலிய அழகுகள் எத்தனை - 8

79.   இலக்கணக்குறிப்பு தருக "செவிகள் உணவான'' - நான்காம் வேற்றுமைத்தொகை

80.   இலக்கணக்குறிப்பு தருக "நா" - ஓரெழுத்து ஒருமொழி

81.   தூது எவ்வகை இலக்கியம் - சிற்றிலக்கியம்

82.   தூது அனுப்பும் பொருட்களின் எண்ணிக்கை - 10

83.   "வாயில் இலக்கியம் " என அழைக்கப்படுவது - தூது

84.   தூது இலக்கியத்தின் வேறு பெயர் - சந்து இலக்கியம்

85.   தமிழ்விடு தூது எக்கடவுளை தலைவனாக கொண்டு பாடப்பட்டது - மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது

86.   தமிழ்விடு தூது எத்தனை கண்ணிகளை கொண்டுள்ளது - 268

87.   தமிழ்விடு தூது நூலை முதல் முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா

88.   தமிழ்விடு தூதுவை உ.வே.சா. பதிப்பித்த ஆண்டு - 1930

89.   "காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும், மெல்லிடையில் மேகலையும்'' என்ற பாடலை இயற்றியவர் - சுத்தானந்த பாரதியார்

90.   தமிழ்விடுதூதுவில் அமைந்துள்ள பா வகை – கலிவெண்பா

91.   software என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க - மென்பொருள்

92.   Browser என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க - உலவி

93.   Crop என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க - செதுக்கி

94.   Cursor என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க - ஏவி (அ) சுட்டி

95.   Cyberspace என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க – இணையவெளி

96.   சர்வர் (Server) என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க - வையக விரிவு வலை வழங்கி

97.   Folder என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க - உறை

98.   Laptop என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க – மடிக்கணினி

99.   உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது- கிரேக்கம் மொழி

100.  நாவாய் என்ற தமிழ் சொல்லானது ஆங்கிலத்தில் நேவி என மாறியுள்ளது

101.  எந்த மொழியின் கடல் சார்ந்த சொற்களில் தமிழ்மொழி இடம்பெற்று உள்ளது - கிரேக்கம்

102.  பண்டையத் தமிழர்கள் கவிதை சார்ந்த சொற்களைத் தமிழிலும் கிரேக்கம் மொழியிலும்ஒப்பாகக்

103.  கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியம் - இலியாத்

104.  பா என்ற சொல் இலியாத்தில் என்னவென்று குறிப்பிடப்பட்டு உள்ளது- பாய்யியோனோ

105.  பா என்ற சொல் கிரேக்கத்தில் அப்போலோ என்னும் கடவுளுக்குப் பாடப்படுவது என குறிப்பிடப்பட்டுள்ளது

106.  வெண்பாவிற்கு உரிய ஓசை – செப்பலோசை

107.  கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் சாப்போ என அழைக்கப்படுகிறது

108.  சாப்போ என்பது ஆங்கிலத்தில் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது - சேப்பிக் ஸ்டேன்சா

109.  தமிழ் இலக்கணங்களில் இளிவரல் என்பது எதைக் குறிக்கும் - துன்பம் சார்ந்த பாடல்

110.  கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் இளிகியா என அழைக்கப்படுகிறது

111.  இலியாத் காப்பியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது - கி.மு.8ம் நூற்றாண்டு

112.  தமிழ்நாட்டிற்குக் கடலில் எவ்வழியாக வரவேண்டும் என்று கூறும் கிரேக்க நூல் - எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ்

113.  "1" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது - க

114.  "2" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது -

115.  "3" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது - ங

116.  "4" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது - ச

117.  “5' என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது  - ரு

118.  "6" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது - சு

119.  "7" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது -

120.  “8” என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது -

121.  “9" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது - கூ

122.  “10" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது - க0

123.  சொற்றொடர் எழுதுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல்லை- எழுவாய்

124.  மீனா கனகாம்பரத்தைச் சூடினான் என்ற தொடரில் செயப்படுபொருள் எது - கனகாம்பரம்

125.  தோன்றா எழுவாய்க்கு எடுத்துக்காட்டு தருக - படித்தாய்

126.  பெயர் பயனிலைக்கு எடுத்துக்காட்டு தருக - சொன்னவள் கலா

127.  ஒரு சொல்லானது எழுவாயாக வரும் பெயர் சொல்லுக்கு அடையாக வருவதை - பெயரடை என்கிறோம்.

128.  பிறவினை - தந்தை மகனை நன்றாக படிக்க வைத்தார், அவனை திருந்தச் செய்தான், பள்ளிக்குப் புத்தகங்கள் வருவித்தார்

129.  துணைவினைகள் வி.பி போன்ற விகுதிகளைக் கொண்டு உள்ளது.

130.  செயப்பாட்டு வினைத்தொடரில் - கோவலன் கொலையுண்டான்,வீடு கட்டியாயிற்று, பணம் காணாமல் போனது

131.  செயபடுபொருளை முதன்மைப்படுத்தும் வினை என்ன - செயப்பாட்டு வினை

132.  எழுவாய்த் தொடருக்கு எடுத்துக்காட்டு தருக - மன்னன் வந்தான்

133.  குறிப்பு வினையெச்சத் தொடருக்கு எடுத்துக்காட்டு தருக - நன்கு பேசினான்

134.  பிறவினைத் தொடருக்கு எடுத்துக்காட்டு தருக - அப்துல் நேற்று வரவழைத்தான்

135.  எதிர்மறை வினைத்தொடருக்கு எடுத்துக்காட்டு தருக - குமரன் மழையில் நனையவில்லை

136.  செய்தித்தொடருக்கு எடுத்துக்காட்டு தருக - என் அண்ணன் நாளை வருவான்

137.  "அண்ணனோடு வருவான்" இது எவ்வகைத் தொடர் எனக் காண்க - வேற்றுமைத்தொடர்

138.  “நண்பா கேள்" இது எவ்வகைத் தொடர் எனக் காண்க - விளித்தொடர்

139.  "உண்ணச்சென்றான்" இது எவ்வகைத் தொடர் எனக் காண்க - தெரிநிலை வினையெச்சத் தொடர்

140.   “பாடும் குயில்" இது எவ்வகைத் தொடர் எனக் காண்க - தெரிநிலை பெயரெச்சத் தொடர்

141.   “இனிய காட்சி" இது எவ்வகைத் தொடர் எனக் காண்க - குறிப்பு பெயரெச்சத் தொடர்

142.  "பாம்பு பாம்பு" இது எவ்வகைத் தொடர் எனக் காண்க - அடுக்குத் தொடர்

143.  "அப்துல் நேற்று வந்தான்" இது எவ்வகைத் தொடர் எனக் காண்க - தன்வினைத் தொடர்

144.  செய்வினைத் தொடரை தேர்வு செய்க - கவிதா உரை படித்தாள்

145.   “உரை கவிதாவால் படிக்கப்பட்டது'' இது எவ்வகைத் தொடர் எனக் காண்க - செயப்பாட்டு வினைத்தொடர்

146.  "குமரன் மழையில் நனைந்தான் " இது எவ்வகைத் தொடர் எனக் காண்க-உடன்பாட்டு வினைத்தொடர்

147.  " எவ்வளவு உயரமான மரம்!" இது எவ்வகைத் தொடர் எனக் காண்க – உணர்ச்சித்தொடர்

148.  உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்?" இது எவ்வகைத் தொடர் எனக் காண்க - வினாத்தொடர்

149.  "பூக்களைப் பறிக்காதீர்" இது எவ்வகைத் தொடர் எனக் காண்க - கட்டளைத்தொடர்

150.   “இது நாற்காலி" இது எவ்வகைத் தொடர் எனக் காண்க - பெயர்பயனிலைத்தொடர்

151.  பதம் எத்தனை வகைப்படும் - 2

152.  பிரியக்கூடியதும் பிரித்தால் பொருள் தருவதுமான சொல் - பகுபதம்

153.  பகுபதம் எத்தனை வகைப்படும் - 2

154.  பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்- 6

155.  பகுபதத்தில் சொல்லின் முதலில் நிற்பது எது - பகுதி

156.  பகாபதமாக அமைவது - பகுதி

157.  சொல்லின் இறுதியில் அமைந்து திணை, பால், எண், இடம் ஆகியவற்றை காட்டுவது - விகுதி

158.  பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டுவது - இடைநிலை

159.  பகுதியையும் பிறஉறுப்புகளையும் இணைப்பது - சந்தி

160.  பகுதி, விகுதி, இடைநிலைகளை சார்ந்து வருவது - சாரியை

161.  ஆண்பால் வினைமுற்று விகுதி - ஆன்

162.  பெண்பால் வினைமுற்று விகுதி - ஆள்

163.  பலர்பால் வினைமுற்று விகுதி - ஆர்

164.  ஒன்றன்பால் வினைமுற்று விகுதி – து

165.  பலவின்பால் வினைமய விகுதி - அ

166.  தன்மை ஒருமை வினைமுற்று விகுதி - ஏன்

167.  தன்மை பன்மை வினைமுற்று விகுதி - ஓம்

168.  முன்னிலை ஒருமை வினைமுற்ய விருதி - ஆய்

169.  முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி - ஈர்

170.  பெயரெச்ச விகுதி – அ,உம்

171.  வினையெச்ச விகுதி - உ. இ

172.  வியங்கோள் வினைமுற்று விகுதி – க,இய

173.  தொழிற்பெயர் விகுதி - தல், அல்

174.  பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து - எழுத்துப்பேறு

175.  "விறகு நான் வண்டமிழோ உன்னருள் வாய்ந்த" என்ற பாடல்வரியை பாடியவர் - வாலி

176.  “அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே!" என்ற பாடல்வரியை இயற்றியவர் - தங்கப்பா

177.  "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலின் ஆசிரியர் - ராபர்ட் கால்டுவெல்

178.  "மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும்" என்ற நூலின் ஆசிரியர் - மணவை முஸ்தபா

179.  மாணவர்களுக்கான தமிழ்" என்ற நூலின் ஆசிரியர் - சொக்கன்

180.  Linguistics என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் - மொழியியல்

181.  Literature என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் - இலக்கியம்

182.  Philologist என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் - மொழி ஆராய்ச்சியாளர்

183.  Polyglot என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் - பலமொழி வல்லுநர்

184.  Phonologist என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் - ஒலியியல் வல்லுநர்

185.  Phonetics என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் - ஒலிப்பியல்

186.  தமிழ்விடு தூது தொடர்நிலைச் செய்யுள் என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது

187.  "காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே!

எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!" இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்- எதுகை, மோனை, இயைபு

188.  அழியா வனப்பு, வழியா வனப்பு, சிந்தா மணி அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக்குறிப்பு- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

189.  செய்பவரை முதன்மைப் படுத்தும் வினை  - செய்வினை

190.  திராவிட மொழிகளில் உள்ள சொல் ஒற்றுமையைக் கொண்டு பொருத்துக

1.      கண்ணு - மலையாளம், கன்னடம்

2.      கன்னு -  தெலுங்கு, குடகு

3.      கெண் - பர்ஜி

4.  மூடு  - தெலுங்கு

191.  திராவிட மொழிகளில் உள்ள சொல் ஒற்றுமையைக் கொண்டு பொருத்துக

 தமிழ்              மலையாளம்

a.    ஒன்று        - ஒண்ணு

b.   இரண்டு      - ஈர் ரெண்டு

c.   நான்கு       - நால், நாங்கு

d. ஐந்து          - அஞ்சு

192.  திராவிட மொழிகளில் உள்ள சொல் ஒற்றுமையைக் கொண்டு பொருத்துக.

தமிழ்               தெலுங்கு

1.   மரம்          - மானு

2.    ஒன்று        - ஒகடி

3.    நூறு           - நூரு

4.  நீ                - நீவு

193.  திராவிட மொழிகளில் உள்ள சொல் ஒற்றுமையைக் கொண்டு பொருத்துக

தமிழ்               தெலுங்கு

1.     இரண்டு      -  ஈர்ரெண்டு

2.     நான்கு       - நாலுகு

3.     ஐந்து          - ஐது

194.  திராவிட மொழிகளில் உள்ள சொல் ஒற்றுமையைக் கொண்டு பொருத்துக

தமிழ்               துளு

1.     மரம்          - மர

2.     ஒன்று        - ஒஞ்சி

3.     நூறு           - நூது

4.     நீ                -  ஈ

195.  திராவிட மொழிகளில் உள்ள சொல் ஒற்றுமையைக் கொண்டு பொருத்துக.

தமிழ்          துளு

1. இரண்டு - ரட்டு

2. நான்கு - நாலு

3. ஐந்து – ஐனு

196.  திராவிட மொழிகளில் உள்ள சொல் ஒற்றுமையைக் கொண்டு பொருத்துக.

தமிழ்            கன்னடம்

1. ஒன்று        - ஒந்து

2. நூறு           - நூரு

3. நீ                - நீன்

4.இரண்டு      - எரடு

197.  இலக்கணக்குறிப்பு பொருத்துக.

1. முத்திக்கனி - உருவகம்

2. சிந்தாமணி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

3.  தெள்ளமுது  - பண்புத்தொகை

4. குற்றமிலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

198.  பொருத்துக

1.   இனம்- மூன்று

2.   வண்ணம்- நூறு,

3.   குணம்- பத்து

4. வனப்பு- எட்டு

199.  பொருத்துக

1.   உருபன் - Morpheme

2.   ஒலியன் - Phoneme

3.   ஒப்பிலக்கணம் - Comparative Grammar

4. பேரகராதி- Lexicon

200.  பொருத்துக

1.   இறந்தகால இடைநிலை - த், ட், ற், ன்

2.   நிகழ்கால இடைநிலை - கிறு, கின்று, ஆநின்று

3.   எதிர்கால இடைநிலை - ப், வ்,க்

4.   எதிர்மறை இடைநிலை - இல், அல், ஆ

5.   பெயர் இடைநிலை - ஞ். வ், ச், த்



கருத்துரையிடுக

0 கருத்துகள்