பேச்சு வழக்குச் சொற்களை எழுத்து வழக்கில் எழுதுக. |
---|
• (எ.கா.) போயி - போய்
• பிடிக்கிறாங்க - பிடிக்கிறார்கள் • வளருது - வளர்கிறது • இறங்குறாங்க - இறங்குகிறார்கள் • வாரான் - வரமாட்டான் |
தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக. |
---|
• 1. என் தாயார் என்னை ------ காத்து வளர்த்தார்.
(கண்ணை இமை காப்பது போல, தாயைக்கண்ட சேயைப் போல) விடை: கண்ணை இமை காப்பது போல • 2. நானும் என் தோழியும் ------ இணைந்து இருப்போம். (இஞ்சி தின்ற குரங்கு போல, நகமும் சதையும் போல) விடை: நகமும் சதையும் போல • 3. திருவள்ளுவரின் புகழை --------- உலகமே அறிந்துள்ளது. (எலியும் பூனையும் போல, உள்ளங்கை நெல்லிக்கனி போல) விடை: உள்ளங்கை நெல்லிக்கனி போல • 4. அப்துல் கலாமின் புகழ் ------ உலகமெங்கும் பரவியது. (குன்றின்மேலிட்ட விளக்கு போல, குடத்துள் இட்ட விளக்கு போல) விடை: குன்றின் மேலிட்ட விளக்கு போல. • 5. சிறுவயதில் நான் பார்த்த நிகழ்ச்சிகள் -------- என் மனத்தில் பதிந்தன. (கிணற்றுத்தவளை போல, பசுமரத்தாணி போல) விடை: பசுமரத்தாணி போல. |
கொடுக்கப்பட்டுள்ள ஊரின் பெயர்களில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக. |
---|
(எ.கா) திருநெல்வேலி - திரு, நெல், வேலி, வேல்
1. நாகப்பட்டினம் • விடை : நாகம், பட்டினம், பட்டி, நாடி. 2. கன்னியாகுமர • விடை : கன்னி, குமரி, மரி, கனி. 3. செங்கல்பட்டு • விடை : செங்கல், பட்டு, கல், கட்டு. 4. உதகமண்டலம் • விடை : கமண்டலம், மண்டலம், உலகம், உண். 5. பட்டுக்கோட்டை • விடை : பட்டு, கோட்டை, படை, கோடை. |
பழமொழி நானூறு |
---|
நூல் வெளி
• பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். • இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். • பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது. • பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • இது நானூறு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது. |
பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் |
---|
1) ‘நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------
அ) நீரு + உலையில் ஆ) நீர் + இலையில் இ) நீர் + உலையில் ஈ) நீரு + இலையில் [விடை : இ. நீர் + உலையில்]
2) மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ----- அ) மாரியொன்று ஆ) மாரிஒன்று இ) மாரியின்று ஈ) மாரியன்று [விடை : அ. மாரியொன்று]
3) “தேர்ந்தெடுத்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------- அ) தேர் + எடுத்து ஆ) தேர்ந்து + தெடுத்து இ) தேர்ந்தது + அடுத்து ஈ) தேர்ந்து + எடுத்து [விடை : ஈ. தேர்ந்து + எடுத்து]
4) ‘ஓடை + எல்லாம்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் -------- அ) ஓடைஎல்லாம் ஆ) ஓடையெல்லாம் இ) ஓட்டையெல்லாம் ஈ) ஓடெல்லாம் [விடை : ஆ. ஓடையெல்லாம்]
|
சொல்லும் பொருளும் |
---|
• மாரி - மழை
• வறந்திருந்த - வறண்டிருந்த • புகவா - உணவாக • மடமகள் - இளமகள் • நல்கினாள் - கொடுத்தாள் • முன்றில் - வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது • குழி - நில அளவைப்பெயர் • சாண் - நீட்டல் அளவைப்பெயர் • மணி - முற்றிய நெல் • சும்மாடு - பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள் • சீலை - புடவை • மடை - வயலுக்கு நீர் வரும் வழி • கழலுதல் - உதிர்தல் பொருத்துக. • வினா 1. நாற்று - பறித்தல் 2. நீர் - அறுத்தல் 3. கதிர் - நடுதல் 4. களை - பாய்ச்சுதல் • விடை 1. நாற்று - நடுதல் 2. நீர் - பாய்ச்சுதல் 3. கதிர் - அறுத்தல் 4. களை - பறித்தல் |
கலைச்சொல் அறிவோம் |
---|
• நாகரிகம் - civilization
• நாட்டுப்புறவியல் - folklore • அறுவடை - harvest • நீர்ப்பாசனம் - irrigation • அயல்நாட்டினர் - foreigner • வேளாண்மை - agriculture • கவிஞர் - poet • நெற்பயிர் - paddy • பயிரிடுதல் - cultivation • உழவியல் - agronomy |
minnal vega kanitham