Type Here to Get Search Results !

Day 17 New syllabus அடிப்படையில் 7th தமிழ் இயல் - 8

0
குன்றக்குடி அடிகளார்
மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித்தம் - வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கிய இவர் தமது பேச்சாலும் எழுத்தாலும் இறைத்தொண்டும் சமூகத் தொண்டும் இலக்கியத் தொண்டும் ஆற்றியவர்.
திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்.
•  நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
அருளோசை, அறிக அறிவியல் உள்ளிட்ட சில இதழ்களையும் நடத்தியுள்ளார்.
ஒப்புரவு நெறி என்னும் தலைப்பில் அடிகளார் கூறியுள்ள கருத்துகள் நம் பாடப் பகுதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1) ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது -------நெறி.
அ) தனியுடமை
ஆ) பொதுவுடமை
இ) பொருளுடைமை
ஈ) ஒழுக்கமுடைமை
[விடை : ஆ. பொதுவுடமை]

2) செல்வத்தின் பயன் -------- வாழ்வு.
அ) ஆடம்பர
ஆ) நீண்ட
இ) ஒப்புரவு
ஈ) நோயற்ற
[விடை : இ. ஒப்புரவு]

3) வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை -------- என்றும் கூறுவர்.
அ) மருந்து
ஆ) மருத்துவர்
இ) மருத்துவமனை
ஈ) மாத்திரை
[விடை : அ. மருந்து]

4) உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) முடியரசன்
ஈ) கண்ணதாசன்
[விடை : ஆ. பாரதிதாசன்]

பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல்
1) 'ஞானச்சுடர்' என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது ________
அ) ஞான + சுடர்
ஆ) ஞானச் + சுடர்
இ) ஞானம் + சுடர்
ஈ) ஞானி + சுடர்
[விடை : இ. ஞானம் + சுடர்]

2) இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ________
அ) இன்புஉருகு
ஆ) இன்பும் உருகு
இ) இன்புருகு
ஈ) இன்பருகு
[விடை : இ. இன்புருகு]

3) 'இன்சொல்' என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது ---
அ) இனிய + சொல்
ஆ) இன்மை + சொல்
இ) இனிமை + சொல்
ஈ) இன் + சொல்
[விடை : இ. இனிமை + சொல்]

4) அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது -------
அ) அற கதிர்
ஆ) அறுகதிர்
இ) அறக்கதிர்
ஈ) அறம்கதிர்
[விடை : இ. அறக்கதிர்]

5) ‘நாடென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---
அ) நான் + என்ப
ஆ) நா + டென்பது
இ) நாடு + என்ப
ஈ) நாடு + டேன்ப
[விடை : இ. நாடு + என்ப]

6) கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ---
அ) கணிஇல்லது
ஆ) கணில்லது
இ) கண்ணில்லாது
ஈ) கண்ணில்லது
[விடை : ஈ. கண்ணில்லது]

எதிர்ச்சொற்களைப் பொருத்துக.
வினா
1. எளிது - புரவலர்
2. ஈதல் - அரிது
3. அந்நியர் - ஏற்றல்
4. இரவலர் - உறவினர்
விடை
1. எளிது - அரிது
2. ஈதல் - ஏற்றல்
3. அந்நியர் - உறவினர்
4. இரவலர் - புரவலர்

1) 'இளமை ' என்னும் சொல்லின் எதிர்ச்சொல் -------.
அ) முதுமை
ஆ) புதுமை
இ) தனிமை
ஈ) இனிமை
[விடை : அ. முதுமை]

கலைச் சொல் அறிவோம்
• குறிக்கோள் - Objective
• லட்சியம் - Ambition
• கடமை - Responsibility
• வறுமை - Poverty
• நற்பண்பு - Courtesy
• செல்வம் - Wealth
• பொதுவுடைமை - Communism
• அயலவர் - Neighbour
• ஒப்புரவு நெறி - Recipropcity

சரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக.
அறிந்து பயன்படுத்துவோம்.
• ஏதேனும் ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவப்படுவது வினாவாகும். வினா கேட்கப் பயன்படுத்தும் சொற்கள் வினாச்சொற்கள் எனப்படும்.
• ‘எது, என்ன, எங்கு, எப்படி, எத்தனை, எப்பொழுது, எவற்றை, எதற்கு, ஏன், யார், யாது, யாவை போன்றன வினாச் சொற்கள் ஆகும்.
சரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக.
1. நெல்லையப்பர் கோவில் --------- உள்ளது?
விடை : எங்கு
2. முதல் ஆழ்வார்கள் --------- பேர்?
விடை : மூன்று
3. --------- சொற்களைப் பேச வேண்டும்?
விடை : எப்படிப்பட்ட
4. அறநெறிச் சாரம் பாடலை ---------?
விடை : யார்
5. அறநெறிச் சாரம் என்பதன் பொருள் ---------?
விடை : யாது
பின்வரும் தொடரைப் படித்து வினாக்கள் எழுதுக.
பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குச் சென்றாள்.
(எ.கா.) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?
1. பூங்கொடி யாருடன் பள்ளிக்குச் சென்றாள்?
2. பூங்கொடி எப்பொழுது பள்ளிக்குச் சென்றாள்?
3. பூங்கொடி தோழியுடன் எங்கு சென்றாள்?

சொல்லும் பொருளும்
• வையம் - உலகம்
• வெய்ய - வெப்பக்கதிர் வீசும்
• சுடர்ஆழியான் - ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
• இடர்ஆழி - துன்பக்கடல்
• சொல் மாலை - பாமாலை
• தகளி - அகல்விளக்கு
• ஞானம் - அறிவு
• நாரணன் - திருமால்
• அந்தம் - முடிவு
• ஆதி - முதல்
1. “இடர்” ஆழி நீங்குகவே - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) துன்பம்
ஆ) மகிழ்ச்சி
இ) ஆர்வம்
ஈ) இன்பம்
[விடை : அ. துன்பம்]

பொருத்துக.
வினா :
1. அன்பு - நெய்
2. ஆர்வம் – தகளி
3. சிந்தை - விளக்கு
4. ஞானம் - இடுதிரி
விடை :
1. அன்பு - தகளி
2. ஆர்வம் - நெய்
3. சிந்தை - இடுதிரி
4. ஞானம் - விளக்கு

• வித்து - விதை
• ஈன – பெற
• நிலன் - நிலம்
• களை - வேண்டாத செடி
• பைங்கூழ் - பசுமையான பயிர்
• வன்சொல் - கடுஞ்சொல்
பொருத்துக.
வினா
1. விளைநிலம் - உண்மை
2. விதை - இன்சொல்
3. களை - ஈகை
4. உரம் - வன்சொல்
விடை
1. விளைநிலம் - இன்சொல்
2. விதை - ஈகை
3. களை - வன்சொல்
4. உரம் - உண்மை

உவமைத்தொடர்களை எழுதி அவற்றை உருவகங்களாக மாற்றுக.

தலைப்புச்சொற்களை முழு சொற்றொடர்களாக எழுதுக.
(எ.கா) தலைப்புச்செய்தி : தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடக்கம் - வானிலை மையம் அறிவிப்பு.
விடை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
1. சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன் - மாவட்ட ஆட்சியர் பாராட்டு.
சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவனை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
2. தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் - மக்கள் ஆர்வத்துடன் வருகை.
தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கியதை அடுத்து, அதைக் காண மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர்.
3. தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டி - தமிழக அணி வெற்றி.
தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது.
4. மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி - ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம்.
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.
5. மாநில அளவிலான பேச்சுப் போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்.
மாநில அளவிலான பேச்சுப் போட்டியானது சென்னையில் இன்று தொடங்க உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்