ஓரெழுத்து ஒரு மொழி |
---|
• தமிழில் மொத்தம் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்குத் தனியே பொருள் உண்டு.
• இந்த 42 எழுத்துக்களுக்குரிய பொருளைக் கண்டுபிடித்தலே இந்தப் பகுதியில் கேட்கப்படும் கேள்வியாகும். • 'ஓரெழுத்து ஒரு மொழி நாற்பத்திரண்டு' என்பது, நன்னூலில் பதவியலில் இடம்பெறும் சூத்திரம் 129-ன்படி அமைவது. ஆனால், அந்த 42 எழுத்துக்கள் தவிர, அகராதியில் இடம்பெறும் வேறு சில ஓரெழுத்து ஒரு மொழிகளும் தேர்வில் கேட்கப்படுகின்றன. • சான்றாக, 'நூ' என்கிற சொல்லுக்கு 'அணிகலன்' என்று பொருள். 'ஞா' என்கிற சொல்லுக்கு 'பொருந்து' என்று அகராதியில் பொருள் உள்ளது. இந்தச் சொற்கள் ஓரெழுத்து ஒரு மொழி பட்டியலில் பொதுவாக இடம்பெறுவதில்லை. எனவே, மேற்குறிப்பிட்ட 42 ஓரெழுத்து ஒரு மொழிகள் அல்லாது தமிழ் அகராதியில் இடம்பெறும் வேறு சில ஓரெழுத்துச் சொற்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. • பதம், மொழி, சொல் ஆகிய சொற்கள் ஒரே பொருளைத் தருவன. சொல் என்பது. எழுத்து தனித்தோ தொடர்ந்து நின்றோ பொருள் தருவதாகும். உயிர் ம வில் ஆறும் த, ப, ந வில் ஐந்தும் க,வ, ச வில் நாலும் ய வில் ஒன்றும் ஆகும் நெடில் நொ,து, ஆங் குறில் இரண்டோடு ஓரெழுத்து இயல்பதம் ஆறேழ் சிறப்பின! (நன்னூல் சூத்திரம் -129) |
ஓரெழுத்து ஒரு மொழி - விளக்கமும், பொருளும்: |
---|
1. உயிர் இனத்தில் 6 - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
• ஆ- பசு • ஈ- கொடு • ஊ- இறைச்சி • ஏ- அம்பு • ஐ- தலைவன் • ஓ - மதகுநீர் தாங்கும் பலகை 2. ம இனத்தில் 6 - மா, மீ, மூ, மே, மை, மோ • மா- மாமரம் • மீ- வான் • மூ - மூப்பு • மே- அன்பு • மை- அஞ்சனம் • மோ- மோத்தல் குறிப்பு: 'மீ' என்கிற ஓரெழுத்து ஒரு மொழி கலைச் சொல்லாக்கத்தில் பெரிதும் பயன்படுகிறது. Super, Hyper, Infra போன்ற ஆங்கில முன் ஒட்டுகளுக்கு தமிழில் மீ என்கிற ஓரெழுத்து ஒரு மொழியே பொருத்தமான முன்னொட்டாகப் பயன்படுகிறது. 3. த இனத்தில் 5 - தா, தீ, தூ, தே, தை • தா - கொடு • தீ- நெருப்பு • தூ- தூய்மை • தே- கடவுள் • தை- தைத்தல் 4. ப இனத்தில் 5 - பா, பூ, பே, பை, போ • பா- பாடல் • பூ- மலர் • பே - மேகம் • பை- இளமை • போ- செல் குறிப்பு: 'பையன்' என்கிற பெயர்ச்சொல்லில் அடிச்சொல் 'பை' என்பதாகும். 'பையன்' என்கிற சொல்லுக்கு 'இளமையானவன்' என்பது பொருள். 5.ந இனத்தில் 5 - நா, நீ, நே, நை, நோ • நா- நாவு • நீ- முன்னிலை ஒருமை • நே- அன்பு • நை- இழிவு • நோ- வறுமை 6. க இனத்தில் 4 - கா, கூ, கை, கோ • கா- சோலை • கூ- பூமி • கை- ஒழுக்கம் • கோ-அரசன் 7. வ இனத்தில் 4 - வா, வீ, வை, வெள • வா- அழைத்தல் • வீ- மலர் • வை- புல் • வௌ - கவர் 8.ச இனத்தில் 4 - சா, சீ, சே,சோ • சா- இறந்துபோ • சீ- இகழ்ச்சி • சே- உயர்வு • சோ- மதில் 9.ய இனத்தில் 1 - யா • யா- அகலம் 10.உயிர்மெய் குறில் இனத்தில் 2 -நொ,து • நொ- நோய் • து- உண். ஆக, ஓரெழுத்து ஒரு மொழி 6 + 6 +5+5+5+4+ 4 + 4 + 1 + 2 = 42 |
நன்னூலில் இடம்பெறாத பிற ஓரெழுத்து ஒரு மொழிகள்: |
---|
• சில தமிழ் எழுத்துகள் எண்ணல் அளவைக் குறிக்கும் தமிழ் எண் எழுத்துகளாகப் பயன்படுகின்றன.
• 'க' என்பது எண் ஒன்றையும், 'உ' என்பது எண் இரண்டையும், 'ரு' என்பது எண் ஐந்தையும், 'எ' என்பது எண் ஏழையும், 'அ' என்பது எண் எட்டையும் குறிக்கும். • சில தமிழ் எழுத்துகள் பின்ன அளவைக் குறிக்கவும் பயன்படுகின்றன. 'இ' என்ற எழுத்து அரை (2) என்பதையும், 'வ' என்பது கால் (4) என்பதையும், 'ப' என்பது ஒரு மா (1/20) என்பதையும், 'சு' என்பது அரைமா (1/40) என்பதையும் குறிக்கும். • அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துகளாகவும், ஆ, எ, ஏ, ஓ, யா ஆகிய ஐந்து எழுத்துக்களும் வினா எழுத்துகளாகவும் பயன்படுகின்றன. • தமிழிசை மரபில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் நெட்டெழுத்துகள் முறையே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழிசைக்கு உரியவை. • 'அ' என்ற எழுத்து சிவன், திருமால், நான்முகன் ஆகியவர்களையும், 'உ' என்கிற எழுத்து சிவசக்தியையும், 'க' என்கிற எழுத்து நான்முகனையும், 'த' என்கிற எழுத்து குபேரனையும், 'ம' என்கிற எழுத்து சிவன், இந்திரன், சந்திரன் ஆகியோரையும் குறிக்கும். • 'ஒள' என்கிற எழுத்து பாம்பு, நிலம் என்னும் பொருளிலும், 'கொ' என்கிற எழுத்து தானியம், கொள்ளு என்னும் பொருளிலும், 'ந' என்கிற எழுத்து சிறப்பு, மிகுதி என்னும் பொருளிலும், 'நு' என்கிற எழுத்து தோணி, புகழ், நேரம் என்னும் பொருளிலும், 'ப' என்கிற எழுத்து காற்று, சாபம் என்னும் பொருளிலும், 'வி' என்கிற எழுத்து பறவை, கண், திசை என்னும் பொருளிலும் வருகின்றன. |
நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ________
அ) 40
ஆ) 42
இ) 44
ஈ) 46
[விடை : ஆ. 42]
minnal vega kanitham