Type Here to Get Search Results !

இனியவை நாற்பது, அவ்வையார் பாடல்கள் || அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்

0
அவ்வையார் பாடல்கள் (மூதுரை (6th தமிழ் புதிய புத்தகம் இயல் - 4))
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு. – ஒளவையார்
நூல் வெளி
• இந்நூலின் ஆசிரியர் ஒளவையார்.
• இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள் சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.
• இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.
• இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, ஞானக்குறள், அசதிக்கோவை போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.

ஆசாரக்கோவை (6th தமிழ் புதிய புத்தகம் இயல் - 5)
நூல் வெளி
• ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
• இவர் பிறந்த ஊர் கயத்தூர்.
• ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்.
• இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.

இனியவை நாற்பது (6th Old Tamil Book)
ஆசிரியர் குறிப்பு
பெயர் : மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்
ஊர் : மதுரை
காலம் : கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு :
• இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• நன்மைதரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.
• இந்நூலின் ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்