தொடர் வகைகள் (8th தமிழ் New புத்தகம் இயல் - 2) |
---|
அறிந்து பயன்படுத்துவோம்.
தொடர் வகைகள் • தொடர்கள் பொருள் அடிப்படையில் நான்கு வகைப்படும். 1) செய்தித் தொடர் • ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் ஆகும். • (எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான். 2) வினாத்தொடர் • ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும் • (எ.கா) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? 3) விழைவுத் தொடர் • ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும். • (எ.கா.) இளமையில் கல். (ஏவல்) • உன் திருக்குறள் நூலைத் தருக. (வேண்டுதல்) • உழவுத்தொழில் வாழ்க. (வாழ்த்துதல்) • கல்லாமை ஒழிக. (வைதல்} 4) உணர்ச்சித் தொடர் • உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும். • (எ.கா.) அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்! (உவகை) • ஆ! புலி வருகிறது! (அச்சம்) • பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே! (அவலம்) • ஆ! மலையின் உயரம்தான் என்னே! கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக. 1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். செய்தித்தொடர் 2. கடமையைச் செய். விழைவுத்தொடர் 3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே! உணர்ச்சித் தொடர் 4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்? வினாத்தொடர் தொடர்களை மாற்றுக. (வியப்பு) எ.கா: நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத் தொடராக மாற்றுக) நேற்று நம் ஊரில் மழை பெய்ததா? 1. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக) விடை : என்னே , காட்டின் அழகு! 2. அந்தோ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக.) விடை : பூனையின் காலில் அடிபட்டுவிட்டது. 3. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.) விடை : அதிகாலையில் துயில் எழு. 4. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக) விடை : முகில்கள் திரண்டால் மழை பெய்யும். 5. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.) விடை : காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா? |
தொடர் மாற்றம் (11th தமிழ் New புத்தகம் இயல் - 6) |
---|
1. மூன்று நாளிகள் கல்லூரிக்கு விடுமுறை. மாணவர்கள் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர். (கலவைத் தொடராக மாற்றுக) விடை : மூன்று நாள்கள் விடுமுறையாதலால், மாணவர்கள் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலுக்குச் சென்று, சிற்பங்களைக் கண்டு மகிழந்தனர். 2. தஞ்சைக் கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும். (வினாத் தொடராக்குக) விடை : தஞ்சைக் கோவில் எவ்வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும்? 3. என்னே! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பக்கலை. (செய்தித் தொடராக்குக) விடை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பக்கலை மிகவும் அழகானது. 4. நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்குச் செல்வேன், (பொருள் மாறா எதிர்மறைத் தொடராக மாற்றுக) விடை : நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்குச் செல்லாமல் இரேன். |
FAQ
மாதிரி வினாத்தாள் எப்படி எழுதுவது?
முதலில் Start Test Click செய்யவும்
எப்படி விடையை சரி பார்ப்பது?
• ஒவ்வொரு வினாக்கும் நான்கு Options கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ளன இதில் உங்களுக்கு எந்த Option சரியாக உள்ளதோ அந்த Option-னை Touch செய்யவும் சரியாக இருந்தால் பச்சை நிறத்திலும், தவறாக இருந்தால் சிவப்பு நிறத்திலும் இருக்கும்
• எடுத்துக்காட்டாக ஒரு வினாவுக்கு நான் Options A-வை Touch செய்கிறேன் சிவப்பு நிறம் வந்துவிட்டது, மறுபடியும் அதே கேள்விக்கு நான் Options B-வை Touch செய்கிறேன் அப்பொழுதும் சிவப்பு நிறம் வந்து விடுகிறது மறுபடியும் அதே கேள்விக்கு Options C-வை Touch செய்கிறேன். அப்பொழுது பச்சை நிறத்தில் வந்தால் அந்த விடை தான் சரியானது இதிலிருந்து நம் எத்தனை முயற்சியில் சரியான விடையை எடுக்கிறோம் என்பதை சோதிக்க இது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்
Super
பதிலளிநீக்குminnal vega kanitham