வீரமாமுனிவர் |
---|
பெயர் : வீரமாமுனிவர்
• இயற்பெயர் : கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி • பெற்றோர் : கொண்டல் போபெஸ்கி எலிசபெத் • பிறந்தநாடு : இத்தாலி • காலம்: 08. 11. 1680 முதல் 04. 02. 1747. வரை • அறிந்தமொழிகள்: இத்தாலியம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமற்கிருதம் • சிறப்புபெயர் : • கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழிச் சொல்லுக்கு அஞ்சாமை என்பது பொருள். ஆகவே இவர் தம் பெயரைத் "தைரியநாதசாமி" என்று மாற்றிக் கொண்டார். • தமிழ்ச்சான்றோர் இவரை வீரமாமுனிவர் என்று அழைத்தனர். சிறப்பு : • தமது முப்பதாம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகத்துக்கு வந்தார் • தமிழில் முதன்முதலாகச் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டார்; • தேம்பாவணி என்னும் கிறித்தவக் காப்பியத்தை இயற்றினார்; • தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்; இயற்றிய நூல்கள் : • சிற்றிலக்கியங்கள், உரைநடை, அகராதி, மொழி பெயர்ப்பு, இலக்கணம், பெருங்காப்பியம் என்று தமிழிலக்கிய வரலாற்றில் அவரது பங்களிப்பு நிலைபேறுடையதாக விளங்குகிறது. • வீரமாமுனிவரின் நூல்கள் பெயர் : 1. தேம்பாவணி 2. பரமார்த்த குரு கதை 3. தொன்னூல் விளக்கம் 4. திருக்காவலூர்க் கலம்பகம் 5. ஞானோபதேசம் 6. சதுரகராதி 7. வேதியர் ஒழுக்கம் 8. கித்தேரியம்மாள் அம்மானை 9. செந்தமிழ் இலக்கணம் 10. கொடுந்தமிழ் இலக்கணம் • தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலைப் படைத்தார்; • கலம்பகம், அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களை இயற்றினார்; • பரமார்த்தகுரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதினார். • ஞானக்கண்ணாடி - சமய நூல் • வேதவிளக்கம் - உரைநடை வடிவிலான சமயநூல் • திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால் இரண்டனையும் வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் மொழிப் பெயர்த்துள்ளார். • 1710 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் முப்பத்தேழாண்டுகள் சமயப் பணியுந் தமிழ்ப் பணியும் புரிந்து 1747 ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில் இயற்கையெய்தினார். • "தேம்பாவணி, காவலூர்க்கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கின்றது; தொன்னூல் பொன் நூலாக இலங்குகின்றது; சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது; வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்" எனச் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை வீரமாமுனிவருக்குப் புகழாரம் சூட்டினார். • He is a Prince among the Tamil Poets (தமிழ்க் கவிஞர்களின் இளவரசன்) என்று வீரமாமுனிவர் பாராட்டிய புலவர் - திருத்தக்க தேவர் |
வீரமாமுனிவர் || அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்
டிசம்பர் 23, 2024
0
minnal vega kanitham