Type Here to Get Search Results !

நிறுத்தல் குறியீடுகள்: கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி அமையும் இடங்கள்

11th தமிழ் New புத்தகம் இயல் - 6
அறிந்து பயன்படுத்துவோம்.



8th தமிழ் New புத்தகம் இயல் - 4

தமிழ் New புத்தகம்
பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
1. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்
விடை : பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.
2. திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது
விடை : திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.
3. தமிழ்மொழி செம்மையானது வலிமையானது இளமையானது
விடை : தமிழ்மொழி செம்மையானது; வலிமையானது; இளமையானது.
4. கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்
விடை : கபிலன் தன் தந்தையிடம், "இன்று மாலை விளையாடப் போகட்டுமா?" என்று கேட்டான்.
5. திரு வி க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது
விடை : திரு.வி.க. எழுதிய 'பெண்ணின் பெருமை' என்னும் நூல் புகழ்பெற்றது.
சரியான நிறுத்தக்குறியுடைய சொற்றொடரைக் கண்டுபிடிக்க
அ) மலரவன் தன் பாட்டியிடம் நான் படிக்கிறேன் என்றான். ஆ) மலரவன், தன் பாட்டியிடம், "நான் படிக்கிறேன்" என்றான்.
இ) மலரவன் தன் பாட்டியிடம், "நான் படிக்கிறேன்" என்றான்.
ஈ) மலரவன் தன் பாட்டியிடம், நான் படிக்கிறேன்! என்றான்.
சிலப்பதிகாரத்தைப் படித்தேன் வியந்தேன் மகிழ்ந்தேன் - இத்தொடர்க்குரிய நிறுத்தக்குறிகளைத் தகுந்த இடங்களில் இட்டு எழுதுக.
விடை : "சிலப்பதிகாரத்தைப் படித்தேன். வியந்தேன்! மகிழ்ந்தேன்!".
பொருத்தமான நிறுத்தக் குறியிடுக
1. நான் என்ன வேலை செய்ய வேண்டும்
விடை : நான் என்ன வேலை செய்ய வேண்டும்?
2. ஆகா என்ன சுகம் தெரியுமா
விடை : ஆகா! என்ன சுகம் தெரியுமா?
3. ஒன்றுமில்லை என்றால் கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது.
விடை : ஒன்றுமில்லை என்றால், கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது?
4. என்ன கட்டிப் போடுகிறார்களா
விடை : என்ன, கட்டிப் போடுகிறார்களா!
5. நம் விருப்பம் போல போக முடியாது அது என்ன பிரமாதம்
விடை : நம் விருப்பம் போல் போக முடியாது. அது என்ன பிரமாதம்?
6. நல்ல உணவு உனக்கும் கிடைக்கும் என்று சொன்னது
விடை : "நல்ல உணவு உனக்கு கிடைக்கும்” என்று சொன்னது.
பின்வரும் பத்தியில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
நூல் பல கல் என்பர் பெரியோர் அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா முடியாது நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மையநூலகம் மாவட்ட நூலகம் கிளை நூலகம் ஊர்ப்புற நூலகம் எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு ஆகவே நூலகத்தின் பயன் அறிவோம் அறிவு வளம் பெறுவோம்
விடை: 'நூல் பல கல்' என்பர் பெரியோர். அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகமாகும். நூலகத்தின் வகைகளாவன மைய நூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம். 'எனக்கு பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் ' என்றார் நேரு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம்! அறிவு வளம் பெறுவோம்!
பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
விடை: சேரர்களின் பட்ட பெயர்களில் கொல்லி, வெற்பன், மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி, வெற்பன் எனவும், பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
பத்தியைப் படித்து தேவையான இடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
இளங்கோவடிகள் சாத்தனாரிடம் முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே அவர்களுடைய முந்தைய வினை யாது அதன் விளைவு என்ன நிகழ்ந்த காலம் யாது அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.
விடை : "இளங்கோவடிகள் சாத்தனாரிடம்" முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே! அவர்களுடைய முந்தைய வினை யாது? அதன் விளைவு என்ன? நிகழ்ந்த காலம் யாது? அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.

10th தமிழ் Old புத்தகம் இயல் - 8


7th தமிழ் Old புத்தகம் இயல் - 9


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.