Type Here to Get Search Results !

Day -3 New syllabus அடிப்படையில் 6th தமிழ் இயல் - 3

0
Book Back பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல்
1) 'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_
 அ) கண் + அறி
 ஆ) கண்டு + அறி
 இ) கண்ட + அறி
 ஈ) கண் + டறி
 [விடை : ஆ) கண்டு + அறி]
2) 'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது..
 அ) ஓய்வு + அற
ஆ) ஓய் + அற
இ) ஓய் + வற
ஈ) ஓய்வு + வற
[விடை : அ) ஓய்வு + அற]
3) ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) எண்என்று
ஆ) ஏனென்று
இ) ஏன்னென்று
ஈ) ஏனன்று [விடை : ஆ) ஏனென்று]
4) ஒளடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) ஒளடதமாம்
ஆ) ஒளடதம்ஆம்
இ) ஊடதாம்
ஈ) ஔடத ஆம்
[விடை : அ) ஔடதமாம்]
5) ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) ஆழமான + கடல்
ஆ) ஆழ் + கடல்
இ) ஆழ + கடல்
ஈ) ஆழம் + கடல்
[விடை : ஈ) ஆழம் + கடல்]
6) விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) விண் + வளி
ஆ) விண் + வெளி
இ) விண் + ஒளி
ஈ) விண் + வொளி
[விடை : ஆ) விண் + வெளி]
7) நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) நீலம்வான்
ஆ) மீளழ்வான்
இ) நீலவான்
ஈ) நீலவ்வான்
[விடை : இ) நீலவான்]
8) இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) இல்லாது இயங்கும்
ஆ) இல்லா இயங்கும்
இ) இல்லாதியங்கும்
ஈ) இல்லதியங்கும்
[விடை : இ) இல்லாதியங்கும்]
9) 'நின்றிருந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நின் + றிருந்த
ஆ) நின்று + இருந்த
இ) நின்றி + இருந்த
ஈ) நின்றி + ருந்த
[விடை : ஆ) நின்று + இருந்த]
10) 'அவ்வுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அவ்வு + ருவம்
ஆ) அ + உருவம்
இ) அவ் + வுருவம்
ஈ) அ + வுருவம்
[விடை : ஆ) அ + உருவம்]
11) மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_

அ) மருத்துவம்துறை
ஆ) மருத்துவதுறை
இ) மருந்துதுறை
ஈ) மருத்துவத்துறை
[விடை : ஈ) மருத்துவத்துறை]
12) செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) செயலிழக்க
ஆ) செயல்இழக்க
இ) செய இழக்க
ஈ) செயலிலக்க
[விடை : அ) செயலிழக்க]

எதிர்ச்சொற்களைப் பொருத்துக.
1. அணுகு - தெளிவு
2. ஐயம் - சோர்வு
3. ஊக்கம் - பொய்மை
4. உண்மை - விலகு
விடை :
• அணுகு × விலகு
• ஐயம் × தெளிவு
• ஊக்கம் × சோர்வு
• உண்மை × பொய்மை

சொல்லும் பொருளும்
• இயன்றவரை - முடிந்தவரை
• ஒருமித்து - ஒன்றுபட்டு
• ஔடதம் - மருந்து
1) நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
அ) போக்குதல்
ஆ) தள்ளுதல்
இ) அழித்தல்
ஈ) சேர்த்தல்
[விடை : ஈ) சேர்த்தல்]
2) எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
அ) அரிது
ஆ) சிறிது
இ) பெரிது
ஈ) வறிது
[விடை : அ) அரிது]

கலைச் சொல் அறிவோம்.
செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence
மீத்திறன் கணினி - Super Computer
செயற்கைக் கோள் - Satellite
நுண்ணறிவு - Intelligence
நுண்ணுணர்வுக் கருவிகள் - Sensors

பின் வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.
1. கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 விடை: கணினி துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்
 2. காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்.
 விடை: அழைப்பு மணி அழுத்தினான் கணியன்
3. மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின் களைக் கண்டுபிடித்தனர்.
விடை: மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க எந்திரங்களைக் கண்டுபிடித்தனர்
4. இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
விடை: இன்று பல்வேறு துறைகளிலும் தானியங்கி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அகவரிசைப்படுத்துக.
அ) அகல், ஆர்வம், ஊக்கம், ஒன்றுபடு
ஆ) ஒன்றுபடு, ஊக்கம், ஆர்வம், அகல்
இ) ஆர்வம், அகல், ஒன்றுபடு, ஊக்கம்
ஈ) ஊக்கம், ஒன்றுபடு, அகல், ஆர்வம்

அடிச்சொல்லுடன் எழுத்துகளைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.
(எ.கா.) அறி -அறிக, அறிந்து, அறிஞர், அறிவியல், அறிவிப்பு
1. பார் : பார்க்க, பார்த்து, பார்வை, பார்க்கவி, பார்க்கவன்,
2. செய் : செய்க, செய்து, செய்வார், செய்வான், செய்தல், செய்தி, செய்யுள்
3. தெளி : தெளிந்து, தெளிவு, தெளிதல், தெளித்தல், தெளிவாக, தெளிக்க
4. படி : படித்து, படிக்க, படித்தல், படிந்து, படிப்பு, படிவம், படிகை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்